சண்டாக்கான் மரண அணிவகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
24 அக்டோபர் 1945 இல் சண்டாக்கான் போர்க்கைதிகள் முகாம்.

சண்டாக்கான் மரண அணிவகுப்பு (Sandakan Death Marches) என்பது, மலேசியா, சபா, சண்டாக்கான் சிறைச்சாலையில் இருந்து, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் எனும் இடத்திற்கு, ஆஸ்திரேலியப் போர்க்கைதிகள் கால்நடையாக நடக்க வைக்கப்பட்டதில் பல ஆயிரம் பேர் இறந்து போன நிகழ்ச்சியை, அவ்வாறு அழைக்கின்றனர்.[1]

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளைக் கைப்பற்றி, கொடுங்கோல் ஆட்சி செய்தனர். தீபகற்ப மலேசியாவில் தரையிறங்கிய அதே காலகட்டத்தில், போர்னியோவிலும் காலடி பதித்தனர். அவர்கள் 1942 ஜனவரி முதலாம் தேதி லாபுவானில் தரை இறங்கினார்கள். ஒரு சில வாரங்களில், அங்கு இருந்து வட போர்னியோவுக்குள் ஊடுருவல் செய்து போர்னியோ தீவையே முழுமையாகக் கைப்பற்றினர்கள்.[2]

சப்பானியர்களின் சித்திரவதை[தொகு]

1942லிருந்து 1945வரை வட போர்னியோ ஜப்பானியர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தென் போர்னியோ தீவின் கலிமாந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டக் கூட்டுப் படைகள், வானில் இருந்து குண்டுகளைப் போட்டன. அதனால் பல நகரங்கள் சேதம் அடைந்தன அல்லது அழிந்து போயின. அவற்றுள் சண்டாக்கான் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாகும்.

ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டாக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். மனிதத் தன்மையற்ற முறையில், மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது சண்டாக்கான் சிறைச்சாலையில் 2504 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், ஜப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் ரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர்.[3] அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள். போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Digger History Sandakan Death March: Japanese Inhumanity
  2. Sandakan Death March The Pacific War Historical Society
  3. Laden, Fevered, Starved Sandakan POW Camp, 1942–1944
  4. The Marches Australia's War, 1939–1945