செசல்டன் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செசல்டன் கிளர்ச்சி
Jesselton Revolt

கிளர்ச்சிக்குப் பிறகு தூக்கிலிடப்பட்ட எதிர்ப்பு இயக்க உறுப்பினர்களின் சில பெயர்கள்.
நாள் 9 அக்டோபர் 1943 (1943-10-09) – 21 சனவரி 1944; 80 ஆண்டுகள் முன்னர் (1944-01-21)
(3 மாதம்-கள், 1 வாரம் and 5 நாள்-கள்)
இடம் செசல்டன், பிரித்தானிய வடக்கு போர்னியோ
சப்பானிய வெற்றி
பிரிவினர்
கினபாலு கெரில்லா படைகள்  சப்பான்
 • பிரித்தானிய போர்னியோவில் சப்பானியர்
தளபதிகள், தலைவர்கள்
ஆல்பர்ட்டு குவோக் சரண் (கைதி)
சார்லசு பீட்டர் சரண் (கைதி)
பூத் சிங் சரண் (கைதி)
பாங்லிமா அலி சரண் (கைதி)
சருதின் சரண் (கைதி)
சுபதார் தேவா சிங்
சிமிசு
படைப் பிரிவுகள்
வெளிநாட்டு சீனர் பாதுகாப்பு சங்கம்
வடக்கு போர்னியோ தன்னார்வப் படை
வடக்கு போர்னியோ பழங்குடி தன்னார்வலர்கள்
பிலிப்பீன்சு பழங்குடி தன்னார்வலர்கள்
இந்திய அரச போலீசார்

குறைவான ஆயுத ஆதரவு:
ஐக்கிய அமெரிக்க துருப்புகள்
(பிலிப்பீன்சு)

அரச சப்பானிய இராணுவம்
 • கெம்பித்தாய்
பலம்
100 சீனர்
≈200 பழங்குடிகள் /இரோசியர்கள்/சீக்கியர்
≈நூற்றுக்கணக்கான சப்பானிய போலீசார் (1943)
≈ஆயிரக்கணக்கான ஜப்பானிய துருப்புக்கள் (1943)
இழப்புகள்
324 எதிர்ப்பு தரப்பினர் இறப்பு 50–90 போலீசார்/துருப்புக்கள் இறப்பு
2,000–4,000 சப்பானியர்களால் பொதுமக்கள் படுகொலை

செசல்டன் கிளர்ச்சி அல்லது செசல்டன் எழுச்சி; அல்லது இரட்டை பத்தாவது கிளர்ச்சி (ஆங்கிலம்: Jesselton uprising; Double Tenth Revolt மலாய்: Pemberontakan Jesselton; பிரெஞ்சு: Révolte de Jesselton) என்பது வடக்கு போர்னியோவில் சப்பானிய படைகளுக்கு எதிராக ஆல்பர்ட் குவோக் (Albert Kwok) என்பவரின் தலைமையிலான கினபாலு கெரில்லா இயக்கத்தின் (Kinabalu Guerrillas) கிளர்ச்சி ஆகும்.[1]

இந்தக் கிளர்ச்சியில் உள்ளூர் சீனர், மலேசிய பழங்குடியினர், இயூரேசியர் (Eurasian) மற்றும் சீக்கியர் (Sikh Indians of Jesselton) போன்றவர்களும் பங்கு எடுத்துக் கொண்டனர். கினபாலு கெரில்லா படையினர் ஏறக்குறைய 50-90 சப்பானிய வீரர்களைக் கொன்று, செசல்டன் நகரப் பகுதி; மற்றும் துவாரான் மாவட்டம் (Tuaran District), கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District) ஆகிய மாவட்டங்களின் கட்டுப்பாட்டையும் தற்காலிகமாகத் தக்க வைத்துக் கொண்டனர்.[2]

செசல்டன் என்பது 1946-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு வடக்கு போர்னியோ என்றும்; பின்னர் சபா மாநிலத்தின் தலைநகராகவும் மாறியது.

பொது[தொகு]

கினபாலு கெரில்லாக்களிடம் மிகக் குறைவான ஆயுதங்கள் இருந்ததாலும்; சப்பானியர்களை எதிர்த்துப் போராடுவதற்கு, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயுதங்கள் கிடைக்காமல் போனதாலும் கினபாலு கெரில்லா குழுவினர் மறைவிடங்களுக்குப் பின்வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

அரச சப்பானிய இராணுவத்தின் கெம்பித்தாய் படையினர் (Japanese Kenpeitai), கினபாலு கெரில்லா படையினரின் மறைவிடங்களைக் கண்டறிய, வடக்கு போர்னியோவில் இருந்த கடலோரக் குடியிருப்புகளில் தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகினர்.

சப்பானிய படைத் தலைவர் மிரட்டல்[தொகு]

கினபாலு கெரில்லா உறுப்பினர்கள் தாங்களே முன்வந்து சரண் அடையவில்லை என்றால், மேலும் அதிகமான பொதுமக்கள் கொல்லப் படுவார்கள் என்று சப்பானியப் படைத் தலைவர் சிமிசு (Shimizu) அச்சுறுத்தினார். இதைத் தொடர்ந்து கினபாலு கெரில்லா தலைவர் ஆல்பர்ட் குவோக் சரண் அடைய முடிவு செய்தார்.

கினபாலு கெரில்லா தலைவர் ஆல்பர்ட் குவோக்; மற்றும் முக்கியமான கிளர்ச்சித் தலைவர்களும் சரண் அடைந்தனர். 175 கெரில்லா உறுப்பினர்களுக்கும் அனுதாபிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப் பட்டனர். அதன் பின்னர் சப்பானியர்கள் வடக்கு போர்னியோ நிர்வாகத்தை மீண்டும் நிலைநிறுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ham 2013, ப. 166.
  2. Tarling 2001, ப. 196.
  • Tregonning, K. G. (1960). [ttps://books.google.com/books?id=Xzw-AAAAMAAJ&q=jesselton+kwok+chinese North Borneo]. H.M. Stationery Office.
  • Ham, Paul (2013). Sandakan. Transworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4481-2626-2.

மேலும் படிக்க[தொகு]

  • Danny, Wong Tze-Ken (2007). "The Petagas War Memorial and the Creation of a Heroic Past in Sabah". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 80 (2 (293)): 19–32. 

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செசல்டன்_கிளர்ச்சி&oldid=3655911" இலிருந்து மீள்விக்கப்பட்டது