உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய விடுதலை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய விடுதலை நாள் (மலாய்:Hari Merdeka) என்பது 1957 பிரித்தானிய காலணி ஆட்சியிடமிருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற நாளாக 31 ஆகத்து அன்று கொண்டாடப்படுகிறது.  மலேசிய நாளுடன் (மலாய்:Hari Malaysia) இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது.  16 செப்டம்பர் 1963 அன்று மலாயா கூட்டமைப்பு, சரவாக், வட போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகியவை சேர்ந்து மலேசியாவாக உருவான நாளை மலேசியா நாளாக கொண்டாடப்படுகிறது.

விடுதலைக்கான பின்னணி

[தொகு]

பிரித்தானியர்களுடன் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்காக துங்கு அப்துல் ரகுமான் தலைமையில் அமைச்சர்கள், மலாயாவின் அரசியல் தலைவர்கள் மலாயன் சீன அசோசியேசன் தலைவர் துன் டத்தோ சர் டான் செங் லொக் மற்றும் மலேசிய இந்தியக் காங்கிரசின் தலைவர் துன் சம்பந்தன் ஆகியோர் இலண்டன் சென்றனர். மலாயா அவசர காலத்தில் கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 8 பிப்ரவரி 1956ல் பிரித்தானிய அரசாட்சியிடமிருந்து விடுதலைக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் நிர்வாக காரணங்களால் 31 ஆகத்து 1957 என்று இறுதி முடிவானது. விடுதலை நாள் நிகழ்ச்சிக்காக மெர்டேக்கா மைதானம் கோலாலம்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டது.

31 ஆகத்து 1957

[தொகு]

30 ஆகத்து 1957 இரவு கோலாலம்பூர் ராயல் சிலாங்கூர் கிளப், விடுதலை சதுக்கத்தில் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர். பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துலை ரகுமான் 11:58 பின்னேரத்தில் வந்தார். அவருடன் அலையன்ஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இரண்டு நிமிடம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் எற்றப்பட்டு[1] யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது.[2] புதியகொடி ஏற்றப்பட்டு மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு முறை மெர்டேக்கா என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர்.[1][2] இதனைத் தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் பேசும்போது "மலாயன் மக்களின் வாழ்வில் சிறப்பான தினம்" என்று வர்ணித்தார்.[1] 

31 ஆகத்து 1957 காலை கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காகவே அமைக்கப்பட்ட மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. காலை 9:30க்கு துவங்கிய அந்தக் கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலாய் மாநில ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.[3] ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக பின்ஸ் ஹென்ரி the Duke of Gloucester விடுதலை சாசனத்தை துங்கு அப்துல்ரகுமானிடம் வழங்கினார்.[3] அதனை பெற்றுக் கொண்ட துங்கு மலேசிய விடுதலை சாசனத்தை (en:Proclamation of Malayan Independence) வாசித்தார், இறுதியாக மெர்டேக்கா என்று ஏழுமுறை முழங்க கூடியிருந்த பொதுமக்களும் முழங்கினர். விழாவின் தொடர்ச்சியாக மலேசியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இராணுவ இசையுடன் தேசியப் பண் பாடப்பட்டது. [[21 குண்டுகள் மரியாதை]] செய்யப்பட்டது.அதனைத் தொடரந்து பாங்கு சொல்லப்பட்டு நன்றித் தொழுகை நடத்தப்பட்டது. [3]

பங்கேற்றவர்கள்

[தொகு]

இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விவரம்:

அரச குடும்ப உறுப்பினர்கள்
  • தாய்லாந்து அரசர் மற்றும் அரசி
  • The Crown Prince and Princess of Japan
  • (அரசியின் பிரதிநிதியாக) The Duke and Duchess of Gloucester
    • Prince William of Gloucester
அரசுத் தலைவர்கள்
  • தென்ஆப்ரிக்கப் பிரதமர், Johannes Gerhardus Strijdom
  • இந்தியப் பிரதமர், Jawaharlal Nehru
  • ,பாக்கித்தான் பிரதமர் Huseyn Shaheed Suhrawardy
  • வியட்நாம் பிரதமர், Phạm Văn Đồng
  • சிலோன் பிரதமர், சாலமன் பண்டாரநாயக்கா
  • பர்மா பிரதமர், U Nu
  • கம்போடியா பிரதமர், Sim Var
  • The United States Secretary of State, John Foster Dulles (representing US President, டுவைட் டி. ஐசனாவர்)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_விடுதலை_நாள்&oldid=3361130" இலிருந்து மீள்விக்கப்பட்டது