பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய - சயாமிய உடன்படிக்கை (1909)

Anglo-Siamese Treaty of (1909)
அமைப்பு
 • Transfer of Kelantan, Terengganu, Kedah and Perlis to the United Kingdom of Great Britain and Ireland.
 • Britain recognised Siamese sovereignty over Patani
கையெழுத்திட்டது10 மார்ச் 1909
இடம்பாங்காக்
நடைமுறைக்கு வந்தது9 சூலை 1909; 114 ஆண்டுகள் முன்னர் (1909-07-09)
கையெழுத்திட்டோர்
 • தேவவாங்சே வரபாக்கம்
  (Devawongse Varopakarn)
 • ஐக்கிய இராச்சியம் சர் ரால்ப் பெசட்
  Sir Ralph Paget
தரப்புகள்
மொழிஆங்கிலம்

பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) அல்லது பாங்காக் ஒப்பந்தம் (1909); (Anglo-Siamese Treaty of 1909 அல்லது Bangkok Treaty of 1909) என்பது ஐக்கிய இராச்சியத்திற்கும் சயாம் இராச்சியத்திற்கும் இடையே 1909 மார்ச் 10-ஆம் தேதி பாங்காக்கில் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.[1][2]

1909 சூலை 9-ஆம் தேதி லண்டனில் ஒப்புதல்கள் பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலமாகப் புதிய மலேசியா-தாய்லாந்து எல்லை நிறுவப்பட்டது. இப்போதைய பட்டாணி, நாரதிவாட், சோங்கலா, சத்துன், யாலா, ஆகிய பகுதிகள் தாய்லாந்து கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்தப் படுத்தப்பட்டன.[3]

பொது[தொகு]

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கெடா மாநிலம், பெர்லிஸ் மாநிலம், கிளாந்தான் மாநிலம், திராங்கானு மாநிலம் எனும் மலாய் மாநிலங்களைத் தாய்லாந்து அரசாங்கம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.[4]

இரகசிய இராணுவ ஒப்பந்தம்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவப் படைகளைத் தாய்லாந்தின் வழியாக அனுப்புவதற்காக தாய்லாந்து கடற்கரைகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முற்றுகையிட்டது.

தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஜப்பானிய இராணுவத்தினருக்கும் இடையே ஆறு முதல் எட்டு மணி நேரம் சண்டை நடந்தது. அதை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது.[5]

அமெரிக்கா மீது போர்ப் பிரகடனம்[தொகு]

தாய்லாந்து வழியாகச் செல்வதற்கு ஜப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21-ஆம் தேதி, ஜப்பானுடன் இரகசியமாக ஓர் இராணுவ ஒப்பந்தத்தை தாய்லாந்து செய்து கொண்டது. இதன் மூலம் பிரித்தானியா, பிரான்சு நாடுகளிடம் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவும் ஜப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து அரசாங்கம் அமெரிக்கா; ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மீதும் 1942 சனவரி 25-ஆம் தேதி போர்ப் பிரகடனத்தை அறிவித்தது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

 1. U.S. Department of State, Bureau of Intelligence and Research, Office of the Geographer, "International Boundary Study: Malaysia - Thailand Boundary," No. 57 பரணிடப்பட்டது 2006-09-16 at the வந்தவழி இயந்திரம், 15 November 1965.
 2. Siam. Treaty with Great Britain Hamilton King. 13 May 1909.
 3. Great Britain, Treaty Series, No. 19 (1909)
 4. Annexed territories
 5. 5.0 5.1 Stuart-Fox, Martin (1997). A History of Laos. Cambridge University Press. pp. 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-59746-3.
 6. Simms, Peter; Simms, Sanda (2001). The Kingdoms of Laos: Six Hundred Years of History. Psychology Press. pp. 206–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700715312. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.

மேலும் காண்க[தொகு]