சுங்கை பத்து
சுங்கை பத்து தொல்பொருள் தளம் Sungai Batu Archaeological Site (கடாரம்) | |
---|---|
![]() சுங்கை பத்துவில் ஒரு சடங்கு நினைவுச்சின்னம் | |
இருப்பிடம் | ![]() ![]() |
பகுதி | சுங்கை பத்து |
ஆயத்தொலைகள் | 5°41′43.08″N 100°27′14.76″E / 5.6953000°N 100.4541000°E |
வகை | தொல்பொருள் தளம் |
பரப்பளவு | 3.9 km2 (1.5 sq mi) |
வரலாறு | |
கட்டுநர் | பூஜாங் பள்ளத்தாக்கு குடியிருப்பாளர்கள் |
கட்டப்பட்டது | பொ.ஆ.மு. 535 - 788 BC [1][2] |
கலாச்சாரம் | மலேசியாவின் வரலாறு |
Associated with | இரும்பு தொழில் மற்றும் வர்த்தகம் |
மேலாண்மை | மலேசியப் பாரம்பரியப் பாதுகாப்புத் துறை |
சுங்கை பத்து அல்லது சுங்கை பத்து தொல்பொருள் தளம் (ஆங்கிலம்: Sungai Batu அல்லது Sungai Batu Archaeological Site; மலாய்: Tapak Arkeologi Sungai Batu; சீனம்: 双溪峇都考古遗址; ஜாவி: موقع سونغاي باتو الأثري; சயாம்: แหล่งโบราณคดีสุไหงบาตู); என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டத்தில் மெர்போக் கிராமப்புறப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும்.[3]
இந்தத் தளம் 1-ஆம் - 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல இந்து - பௌத்தக் கோயில்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தத் தளம் கி.மு. 535 முதல் இங்கு நிலைத்து வருவதாகவும் நம்பப் படுகிறது.[4]
இங்கு கிடைக்கப் பெற்ற மண்பானைகள், மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். [3]
தள விளக்கம்[தொகு]

சுங்கை பத்து ஆய்வு மையம், சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.[4]
இரும்பு ஏற்றுமதியில் ஈடுபட்டு இருந்ததாக நம்பப்படும் வணிகக் கப்பல்கள் இந்தத் தளத்தில் 2000 ஆண்டுகள் புதைந்து கிடப்பதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதிபடுத்தி உள்ளனர்.[5]
கடாரத்து நாகரிகம்[தொகு]

கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறியப்பட்டு உள்ளது. மலாக்கா வரலாறு; சிங்கப்பூர் வரலாறு; சுமத்திரா ஜாவா வரலாறு; ஆகிய வரலாறுகளைக் காட்டிலும் கடாரத்து வரலாறு என்பது முதன்மையான வரலாறு என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.[4]
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள போரோபுதூர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடாரத்து நாகரிகம் உருவாகி விட்டது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் (Prof Datuk Dr Mokhtar Saidi) கூறுகிறார்.[4]
“ | இரும்பு கனிமத்தைப் பயன்பாட்டில் கொண்ட எந்த நாகரிகமும் எந்தப் போரையும் வெல்லும்; அதனால் சுங்கை பத்து அத்தகைய நாகரிக வளர்ச்சியைப் பெற்றது | ” |
என்று வாண்டர்பில்ட் மெசோ அமெரிக்கக் கல்விக் கழகத்தின் (Vanderbilt Institute of Mesoamerica) ஆர்தர் டெமரெசுட் (Arthur Demarest) எனும் கல்வியாளர் கூறுகிறார்.[6][7]
தொல்லியல் கண்டுபிடிப்புகள்[தொகு]

கெடா மாநிலத்தில் உள்ள இந்தச் சுங்கை பத்துவில் 4 கி.மீ2 பரப்பளவில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. அந்த இடங்களின் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் மூலமாக, கி.மு. 788-ஆம் ஆண்டிலேயே வரலாற்றுக்கு முந்தைய ஒரு நாகரிகம் அங்கு இருந்தது தெரிய வருகிறது.[8]
சுங்கை பத்துவில் உள்ள தொல்பொருள் தளங்களின் கண்டுபிடிப்பு; அந்தக் காலக்கட்டத்தில் இரும்புத் தாது உருக்குதல்; மற்றும் வர்த்தகத்தில் ஒரு செழிப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளைக் காட்டுகின்றது.
சுங்கை பத்துவின் நாகரிகம் என்பது பண்டைய பண்டைய ரோமாபுரி நாகரிகம் (Ancient Rome) நிறுவப் படுவதற்கு முந்தையது. அந்த வகையில் சுங்கை பத்துவின் நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவின் பழமையான நாகரிகமாக (Oldest civilization in Southeast Asia) மாறி உள்ளது.[9]


மேற்கோள்கள்[தொகு]
- ↑ "FIVE REASONS WHY YOU MUST VISIT THE SUNGAI BATU ARCHAEOLOGICAL SITE AT LEAST ONCE IN YOUR LIFETIME". Universiti Sains Malaysia. 14 November 2019 இம் மூலத்தில் இருந்து 18 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210617202026/https://news.usm.my/index.php/english-news/6375-five-reasons-why-you-must-visit-the-sungai-batu-archaeological-site-at-least-once-in-your-lifetime.
- ↑ "GEOLOGICAL NOTES-The Contribution Of Technical Ceramic To Iron Smelting Production At Sungai Batu,Bujang Valley,Kedah". Centre of Global Archaeological Research, Universiti Sains Malaysia. 2 August 2020 இம் மூலத்தில் இருந்து 10 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201210150154/https://gsm.org.my/products/702001-101848-PDF.pdf.
- ↑ 3.0 3.1 "Sungai Batu is an archaeological site in northern Malaysia, and it holds the ruins of several Hindu-Buddhist temples dating back to the 1st and 3rd century. The site, which is located in Merbok of the Kedah state, it is believed to have existed since 535 BC." (in en). https://www.rollinggrace.com/2019/08/sungai-batu-archaeological-site-kedah-malaysia.html. பார்த்த நாள்: 19 September 2022.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "This latest finding was revealed by the Centre For Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) here. The centre's director Prof Datuk Dr Mokhtar Saidin said the scientific assessment was based on a laboratory analysis on carbon and soil testings." (in en-MY). https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115. பார்த்த நாள்: 19 September 2022.
- ↑ "World archaeological experts fascinated by Sungai Batu ancient site". https://www.malaymail.com/news/life/2016/05/21/world-archaeological-experts-fascinated-by-sungai-batu-ancient-site/1124693. பார்த்த நாள்: 15 June 2020.
- ↑ Zul, S. "Malaysia’s Sungai Batu Among Oldest Southeast Asian Civilizations: Archaeologists". https://www.benarnews.org/english/news/malaysian/sungai-batu-06102016155407.html. பார்த்த நாள்: 15 June 2020.
- ↑ "World archaeological experts fascinated by Sungai Batu ancient site". https://www.malaymail.com/news/life/2016/05/21/world-archaeological-experts-fascinated-by-sungai-batu-ancient-site/1124693. பார்த்த நாள்: 15 June 2020.
- ↑ "Sg Batu to be developed into archaeological hub". The Star. 3 October 2020 இம் மூலத்தில் இருந்து 28 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128181212/https://www.thestar.com.my/news/nation/2020/10/03/sg-batu-to-be-developed-into-archaeological-hub.
- ↑ "Sg Batu declared SEA’s oldest civilisation". Free Malaysia Today. 23 May 2016 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716081737/https://www.freemalaysiatoday.com/category/nation/2016/05/23/sg-batu-declared-seas-oldest-civilisation/.
மேலும் காண்க[தொகு]
- கடாரம்
- பூஜாங் பள்ளத்தாக்கு
- கெடா துவா
- கெடா
- கெடா சுல்தானகம்
- இரத்தனகோசின் இராச்சியம்
- மலாக்கா சுல்தானகம்
- ஜொகூர் சுல்தானகம்