உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்

ஆள்கூறுகள்: 6°30′N 100°25′E / 6.500°N 100.417°E / 6.500; 100.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
Unfederated Malay States
1826–1942
1826–1942

ஜப்பானிய ஆக்கிரமிப்பு 1942–45
1945–46
Malaya in 1922:
  மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
  மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
  நீரிணை குடியேற்றங்கள்
நிலைஐக்கிய இராச்சியத்தின்
காப்பரசு
தலைநகரம்இல்லை
பேசப்படும் மொழிகள்மலாய்
ஆங்கிலம்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்
அரசர் அரசி 
• 1826–30
ஜோர்ஜ் IV
• 1830–37
வில்லியம் IV
• 1837–1901
விக்டோரியா
• 1901–10
எட்வர்டு VII
• 1910–36
ஜோர்ஜ் V
• 1936
எட்வர்டு VIII
• 1936–42; 1945–46
ஜோர்ஜ் VI
வரலாற்று சகாப்தம்பிரித்தானிய பேரரசு
• தொடக்கம்
1826
• முடிவு
1946
நாணயம்
முந்தையது
பின்னையது
ஜொகூர்
கெடா
கிளாந்தான்
பெர்லிஸ்
திரங்கானு
இரத்தனகோசின் இராச்சியம்
மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு
சி ராட் மலை
பிரித்தானிய மலாயா
மலாயா ஒன்றியம்
தற்போதைய பகுதிகள்மலேசியா

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (ஆங்கிலம்: Unfederated Malay States; மலாய்: Negeri-Negeri Melayu Tidak Bersekutu; சீனம்: 馬來屬邦; ஜாவி:نݢري٢ ملايو تيدق برسکوتو) என்பது 1826-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் ஜொகூர், கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும்.

அந்த ஐந்து மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன. பிரித்தானியர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த போதிலும் அவை அவர்களின் அரசியல் ஆதிக்கம் இல்லாமல் தனிச்சையாகவே இயங்கின.

பொது

[தொகு]

1946-ஆம் ஆண்டில், பிரித்தானிய காலனிய அமைப்பான நீரிணை குடியேற்றங்கள் கலைக்கப்பட்டது. அந்த அமைப்பில் இருந்த பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலங்களும் பின்னர் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.

அதே 1946-ஆம் ஆண்டில், மலாக்கா; பினாங்கு ஆகிய இரு நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements); மற்றும் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களும் (Federated Malay States) ஒன்றாக இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் (Malayan Union) எனும் ஓர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா ஒன்றியம் எனும் அந்த அமைப்பு கலைக்கப்பட்டு மலாயா கூட்டமைப்பு எனும் அமைப்பாக மாறியது. அதாவது 1948-ஆம் ஆண்டில், மலாயா ஒன்றியம் பதினொரு மாநிலங்களின் கூட்டமைப்பாக (Federation of Malaya) மறுசீரமைக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

பாங்காக் உடன்படிக்கை 1909

[தொகு]

ஜொகூர் மாநிலம் 1885-இல் ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. 1914-இல் பிரித்தியானியர்களின் அழுத்தத்தின் காரணமாக இறுதியில் ஒரு பிரித்தானிய மாநில ஆளுநரை ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், மற்ற மலாய் மாநிலங்களைப் போல் அல்லாமல், ஜொகூர் மாநிலம் மட்டும், பிரித்தானிய பாதுகாப்பு இல்லாமல் மலாயா கூட்டமைப்பிற்கு வெளியே 1895-ஆம் ஆண்டு வரையில், இருந்தது.

பாங்காக் உடன்படிக்கை 1909-இன் (Bangkok Treaty of 1909) கீழ், தீபகற்ப மலாயாவின் வடக்குப் பகுதியில் இருந்த (கிளாந்தான், திராங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ்) மாநிலங்கள் ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டன.[1]

புதிய கூட்டமைப்பில் ஒன்பது மாநிலங்கள்; பிரித்தானியாவின் பாதுகாக்கப்பட்ட மாநிலங்காகத் தொடர்ந்தன. அதே வேளையில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களான பினாங்கு, மலாக்கா மாநிலங்கள் பிரித்தானியக் காலனி மாநிலங்களாகவே இருந்தன.

1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் அடைந்தது. இறுதியாக 1963-ஆம் ஆண்டில், வடக்கு போர்னியோ எனும் இன்றைய சபா மாநிலமும் சரவாக்; சிங்கப்பூர் மாநிலங்களும் இணைந்து மலேசியா எனும் பெரும் கூட்டமைப்பாக மாற்றம் கண்டன.

சுல்தான்களின் அதிகாரங்கள்

[தொகு]

மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) மாநிலங்களின் உண்மையான நிர்வாக அதிகாரங்கள் உள்ளூர் பிரித்தானிய ஆளுநர்களிடமும் (British Residents); மற்றும் பிரித்தானிய தலைமை ஆளுநரிடமும் (Resident-General) மட்டுமே இருந்தன.

உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் "மலாய் மதம் மற்றும் பழக்கவழக்கங்களைத் தொடும்" (Malay Religion and Customs) விசயங்களில் மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த வகையில் உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன.

மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு

[தொகு]

இரண்டாம் உலக போரில், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களும்; மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும்; நீரிணை குடியேற்ற மாநிலங்களும் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

ஜப்பான் சரண் அடைந்து மலாயா விடுதலைக்குப் பிறகு, மலாயா கூட்டமைப்பு வடிவத்திற்குப் பதிலாக நடுவண் அரசு நிர்வாகம் (Federal Form of Government) அமல்படுத்தப் பட்டது.

விளக்கம்

[தொகு]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

[தொகு]
  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்

[தொகு]
  • மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
    (Unfederated Malay States) - (Protected States)
  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு

நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்

[தொகு]
  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்

உருவாக்கம்

[தொகு]

1874 சனவரி 20-ஆம் தேதி, நீரிணை குடியேற்றங்களின் ஆளுநரான சர் ஆண்ட்ரூ கிளார்க் (Sir Andrew Clarke), பேராக் சுல்தானுடன், பாங்கோர் உடன்படிக்கையை (Treaty of Pangkor 1874) செய்து கொண்டார்.

அதன் மூலம் ஆளுநர் (ரெசிடென்ட்; Resident) எனும் ஒரு பிரித்தானிய அதிகாரிக்கு ஒரு பொருத்தமான குடியிருப்பை வழங்குவதற்குப் பேராக் சுல்தான் (Sultan of Perak) ஒப்புக் கொண்டார்.

பிரித்தானிய ஆளுநர் முறை

[தொகு]

பேராக் மாநிலத்தில், மலாய் மதம் மற்றும் கலாசாரப் பழக்கவழக்கங்களைத் தொடும் விசயங்களைத் தவிர (Malay Religion and Customs) மற்ற எல்லா விசயங்களிலும் பிரித்தானிய அதிகாரியின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படவும் பேராக் சுல்தான் ஒப்புக் கொண்டார்.

இதே ஆளுநர் (ரெசிடென்ட்) முறை அதே 1874-ஆம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டது. 1888-இல் பகாங்கிற்கும் நீட்டிக்கப்பட்டது.[2]

உண்மையான அதிகாரங்கள்

[தொகு]

நிர்வாகத் திறனை அதிக அளவில் மேம்படுத்துவதற்காக, சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய நான்கு மாநிலங்களும் 1895-1896-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) என ஒன்றிணைக்கப்பட்டன.

இந்த அமைப்பு மிகவும் மையப்படுத்தப்பட்டது. உண்மையான அதிகாரங்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுநர்களின் கைகளில் இருந்தன. முதலில் தலைமைப் பிரித்தானிய ஆளுநரிடம் (Resident-General) அந்த அதிகாரம் இருந்தது. பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் (Chief Secretary of the British Government) ஒட்டு மொத்த கூட்டமைப்பு அதிகாரங்களும் போய்ச் சேர்ந்தன.[2]

மலாயா கூட்டரசு மன்றம்

[தொகு]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காக 1898-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் கூட்டரசுக் கழகம் எனும் கூட்டரசு மன்றத்தை (Federal Council) நிறுவினார்கள்.

இந்த கூட்டரசு மன்றத்திற்கு நீரிணைக் குடியேற்ற மாநிலங்களின் உயர் ஆணையர் (High Commissioner; The Governor of the Straits Settlement) தலைமை பொறுப்பை ஏற்றார்.[3]

இவருக்கு உதவியாக தலைமைப் பிரித்தானிய ஆளுநர்; மாநிலச் சுல்தான்கள், நான்கு மாநில பிரித்தானிய ஆளுநர்கள் மற்றும் நான்கு நியமன உறுப்பினர்கள் (Nominated Unofficial Members) செயல்பட்டனர்.

டிசம்பர் 8, 1941-இல் ஜப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிக்கும் வரை இந்த அமைப்பு முறை அமலில் இருந்தது. [4]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
1939-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்
1939-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Haywood (2002). Historical Atlas of the 19th Century World 1783 – 1914. Barnes and Noble. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-3203-5.
  2. 2.0 2.1 Simon C. Smith, "Rulers and Residents: British Relations with the Aden Protectorate, 1937–59", Middle Eastern Studies, Vol. 31, No. 3 (Jul., 1995), p. 511.
  3. "Samuel Joyce THOMAS". homepages.ihug.co.nz. Archived from the original on 13 அக்டோபர் 2015.
  4. "SIR ROGER HALL NEW F.M.S. CHIEF JUSTICE". The Straits Times. 6 September 1937. p. 12.

குறிப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

6°30′N 100°25′E / 6.500°N 100.417°E / 6.500; 100.417