13 மே இனக்கலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
13 மே இனக்கலவரம்
இடம் கோலாலம்பூர், மலேசியா
தேசிய அவசரகாலம்
நாடாளுமன்ற நிறுத்தம்
தேசிய நடவடிக்கை மன்ற அமலாக்கம்
துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவி ராஜிநாமா
புதிய பொருளாதாரத் திட்ட அறிமுகம்
மலாய் சீன சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலை
அம்னோ, ஜ.செ.க அரசியல்வாதிகள் இன பிரச்சினை நாடகம்
பிரிவினர்
Parti Perikatan logo.svgUMNO (Malaysia).svgFlag of the Malaysian Chinese Association.svgMalaysian Indian Congress logo.svg
மலாய்க்காரர்ளுக்கு ஆதரவு
DAP-Logo.pngPAS logo.svg
சீனர்களுக்கு ஆதரவு

13 மே இனக்கலவரம் அல்லது 13 மே சம்பவம் அல்லது 1969 மலேசிய இனக்கலவரம் என்பது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சீன மலாய் குழுவாத வன்முறை நிகழ்ச்சியாகும்.[1][2] இந்த இனக் கலவரம், 1969ஆம் ஆண்டு மலேசியாவில் ஒரு தேசிய அவசரகாலத் தன்மைக்கு (மலாய்: Darurat, ஆங்கில மொழி: Emergency) வழிவகுத்தது. கோலாலம்பூர், அப்போது சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், மலேசியப் பேரரசர் தேசிய அவசரகாலத்தை உடனடியாக நாடு முழுமைக்கும் பிரகடனம் செய்தார். நாடாளுன்ற நடைமுறைகளையும் மலேசிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி வைத்தது. அரசாங்க நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் (மலாய்: Majlis Gerakan Negara, ஆங்கில மொழி: National Operations Council) எனும் தற்காலிகச் செயல்பாட்டு நிர்வாகம், 1971ஆம் ஆண்டு வரை ஏற்று நடத்தியது.

அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 1969 மே மாதம் 13ஆம் தேதியில் இருந்து, 1969 ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில், ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக 196 பேர் மரணமடைந்தனர். எனினும் பத்திரிகையாளர்களும் பிற பார்வையாளர்களும் அந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

பின்புலம்[தொகு]

வன்முறையாளர்கள், காவல்துறையினர், மலேசிய இராணுவப் படையினரால் கோலாலம்பூரில் மட்டும் 2000 பேருக்கு மேல் கொல்லப்படிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கோலாலம்பூர் பொது மருத்துவமனை வளாகத்தில் இறந்தவர்களின் உடல்கள் அவசரம் அவசரமாகப் புதைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் அதிகாரப்பூர்வமானதாக இல்லை.

புதிய பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாகச் செயலாக்கம் செய்ததே வன்முறைகளுக்கான மூல காரணங்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. சொல்லியும் வருகிறது. ஆனால், அப்போதைய பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமான் அவர்களைப் பதவியில் இருந்து வீழ்த்துவதற்காக அம்னோ மேல்தட்டு வர்க்கத்தினர் உருவாக்கிய சதித்திட்டம் என்றும் பலர் சொல்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=13_மே_இனக்கலவரம்&oldid=2619390" இருந்து மீள்விக்கப்பட்டது