ஜனநாயக செயல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜனநாயக செயல் கட்சி
ஜ.செ.க
Democratic Action Party
Parti Tindakan Demokratik
民主行动党
Democratic Action Party logo.png
ஆலோசகர்
தற்காளிக தலைவர்
துணை தலைவர்
லிம் கிட் சியாங்
டான் கோக் வேய்
உதவித் தலைவர்(கள்) எம். குலசேகரன்
சொங் சிஏங் ஜென்
சோவ் கோன் யாவ்
அரிபின் ஒமர்
பொது செயலாளர் லிம் குவான் எங்
துணை பொது செயலாளர்(கள்) இராமசாமி பழனிச்சாமி
சொங் எங்
ஙா கூ ஹாம்
தொடக்கம் 1965
தலைமையகம் கோலாலம்பூர், மலேசியா
அதிகாரபூர்வ ஏடு ராக்கெட்
இளைஞர் அணி சோசலிச இளைஞர்
உறுப்பினர் (2013) +200,000 [சான்று தேவை]
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
சோசலிச ஜனநாயகம்
தேசியக்கூட்டு மக்கள் யோசனை (1989–1996)
மாற்று பாரிசான் (1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2008–present)
அதிகாரப் பட்ச நிறம் வெள்ளை, சிவப்பு, நீலம்
தளம் dapmalaysia.org

ஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party) அல்லது சுருக்கமாக ஜ.செ.க என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[1] ஜ.செ.க என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜனநாயக செயல் கட்சி, மற்ற இரு எதிர்க் கட்சிகளான மக்கள் நீதிக் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாக்காத்தான் ராக்யாட் எனும் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கி, மலேசியத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, அண்மைய தேர்தல்களில் கடும் சவால்களை இந்த மக்கள் கூட்டணி கொடுத்து வருகின்றது. மலேசியர்களுக்கு மலேசியா' எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி போராடி வருகின்றது.[2] இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன.

ஜனநாயக செயல் கட்சியின் தமிழ் தலைவர்கள்[தொகு]

இராமசாமி பழனிச்சாமி[தொகு]

பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சி சார்பிள் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பிறை சட்டமன்ற தொகுயிள் மகத்தானா வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்ற தொகுயிள் இவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னை தோற்கடித்தார்.[3] பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆவார்.[4]

சிவகுமார் வரதராஜன்[தொகு]

வி சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜாவின் 13வது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பேராக் மாநில முன்னாள் சபா நாயகர் ஆவார்.2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட் இவரை சபா நாயகராக்கியாது. மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் சபா நாயகர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.[5]

எம். குலசேகரன்[தொகு]

எம். குலசேகரன் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார்.[6]

கஸ்தூரி பட்டு[தொகு]

2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி இம்முறை நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. இம்முறை ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு மகத்தானா வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்பெண் ஆவார்.

கானொளிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. DAP Website: About Us: The Party. Retrieved 12 Feb. 2008.
  2. DAP Website. Vision and Mission. From: http://dapmalaysia.org/newenglish/au_vm_ob.htm
  3. "Malaysia Decides 2008". The Star (மலேசியா). பார்த்த நாள் 20 December 2009.
  4. DAP Leadership Structure. Retrieved 12 Oct. 2008.
  5. The 2009 Perak constitutional crisis was a political dispute in Malaysia regarding the legitimacy of the Perak state government formed in February 2009.
  6. "DAP: Leadership". ஜனநாயக செயல் கட்சி. பார்த்த நாள் 06 ஜனவரி 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாயக_செயல்_கட்சி&oldid=1647787" இருந்து மீள்விக்கப்பட்டது