இராமசாமி பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு

பேராசிரியர் ராமசாமி
Profesor P. Ramasamy
拉马沙米

துணை முதலமைச்சர் பினாங்கு, மலேசியா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2008
ஆளுநர் அப்துல் ரகுமான் அப்பாஸ்
முதலமைச்சர் லிம் குவான் எங்
பத்து காவான், பினாங்கு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
முன்னவர் ஹுவான் செங் குவான் (மலேசிய மக்கள் இயக்கக் கட்சிபாரிசான் நேசனல்)
பின்வந்தவர் கஸ்தூரி பட்டு (ஜனநாயக செயல் கட்சிபாக்காத்தான் ராக்யாட்)
பிறை (பினாங்கு) தொகுதியின்
Member of the பினாங்கு சட்டசபை Assembly
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2008
முன்னவர் குப்புசாமி (மலேசிய இந்திய காங்கிரசுபாரிசான் நேசனல்)
துணை பொதுச் செயலாளர்கள்(ஜனநாயக செயல் கட்சி)
தனிநபர் தகவல்
பிறப்பு 10 மே 1949 (1949-05-10) (அகவை 71)
சித்தியாவான் பேராக்
அரசியல் கட்சி DAP-Logo.png ஜனநாயக செயல் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
இருப்பிடம் பினாங்கு
படித்த கல்வி நிறுவனங்கள் இந்தியானா பல்கலைக்கழகம்
மக்கில் பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம்
பணி துணை முதலமைச்சர்
சட்டப் பேரவை உறுப்பினர்
சமயம் இந்து
இணையம் www.pramasamy.com

இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை நகர் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் ஆவார்.

ஆரம்ப கல்வி[தொகு]

ராமசாமி அவர்களது தந்தை பழனிச்சாமியும் தாயார் பழனியம்மாளும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 1920ல் மலாயாவுக்குக் குடிபெயர்ந்தனர். ராமசாமி மே 10 , 1949 அன்று சித்தியவான் பேராக்கில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் ஒரு சகோதரருமாகும். இராமசாமி ஆரம்பக் கல்வியை சித்தியவான் பேராக்கிலுள்ள ஆங்கிலோ சீன ஆரம்ப பள்ளியில் கற்றார்.

இடைநிலைக் கல்வியும் மேல் நிலைக் கல்வியும்[தொகு]

இராமசாமி புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளியில் இடைநிலைக் கல்வியையும், ஜோகோர் பரூ சுல்தான் அபுபக்கர் கல்லூரியில் மேல் நிலைக் கல்வியையும் பயின்றார். பின்னர் 1972 இல் நியூசிலாந்தின் வெலிங்டன் பாலிடெக்னியில் பத்திரிகை துறையில் டிப்ளமோ முடித்தவுடன் கோட்டா திங்கியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய அவர், 1977 ஆம் ஆண்டு தன்னுடைய இளங்கலைப் பட்டத்தை அமெரிக்கா இந்தியானா பல்கலைக்கழகத்திலும், 1980ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்தை புளூமிங்டன் கனடா பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இறுதியாக 1991 ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் / பொது நிர்வாகத்தில் இளநிலை (Ph.D) பட்டம் பெற்றார்.

1981 இல் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் பேராசிரியர் இராமசாமி அவர்களை அரசியல் அறிவியல் துறை விரிவுரையாளராக நியமித்தது. 1993 ஆம் ஆண்டில் அவர் அரசியல் பொருளாதாரம் பற்றிய துறையில் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார் . பேராசிரியராகப் பணியாற்றிய போது மலேசிய அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், அரசியல் கோட்பாடு, தொழில்துறை உறவுகள், உலகமயமாக்கல், ஆட்சி போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கற்றுறைகளை எழுதியுள்ளார். இன்றுவரை அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் பல கட்டுரைகளும், நான்கு நூல்களும் எழுதியுள்ளார். பேராசிரியர் இராமசாமி அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். அவரது நிபுணத்துவத்தை அங்கீகாரப்படுத்தி, மெக்கில் பல்கலைக்கழகத்தின் நோர்டிக் ஆசிய ஆய்வு நிறுவனமும், ஜப்பான் டோக்கியோ மற்றும் கியோட்டோ, பல்கலைக்கழகங்களும் விருதுகளை வழங்கி அவரை கெளரவப்படுத்தின. சமீபத்தில் ஜெர்மனி ரப்பர் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் இராமசாமிக்கு சிறப்பு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு[தொகு]

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகும். சமீபத்தில் இந்த அமைப்பின் உலக தொழிலாளர் பல்கலைக்கழக கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் இராமசாமி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சங்கங்களின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். குழந்தை தொழிலாளர் (அடிமை முறை எதிர்ப்பு சமூகம், இங்கிலாந்து நிதி), சிலாங்கூர் தோட்ட வீட்டில் உரிமை திட்டம் (சிலாங்கூர் மாநில அரசாங்கம்), மலேசியா இந்தியர்கள் சமூக பொருளாதார அம்ச திட்டங்கள், பொருளாதார பொதுநல ஆராய்ச்சி அறக்கட்டளை, முன்னாள் தோட்ட தொழிலாளர்கள் மீது வணிக தாக்கம் (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), ரியோவில், சுமத்ரா ( நிசான் நிறுவனம், ஜப்பான்) மற்றும் தோட்ட தொழிலாளர் ஆய்வு மலேசியா ( ILO), தொழிலாளர் மீதான உலகமயமாக்கலின் தாக்கங்கள் உள்ளிட்டவை இவற்றில் குறிப்பிடத்தக்கன.

தமிழீழ விடுதைலப் புலிகள் இயக்கமும் (இலங்கை) ஆச்செ விடுதலை இயக்கமும் (இந்தோனேசியா)[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகள் 2003 ஆம் ஆண்டு பேராசிரியர் இராமசாமியை அதன் அரசியலமைப்பு விவகார குழுவின் உறுப்பினர்களிள் ஒருவராக நியமித்தது.[சான்று தேவை] இவரிடம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பகுதிகளில் இடைக்கால நிர்வாக திட்டத்தை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் அவரது ஈடுபாட்டை இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் மற்றும் அவரது அரசியலமைப்பு விவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஆகியோர் பாராட்டினர். ராமசாமி அவர்கள் (கெரக்கான் ஆச்செ மெர்டேகா) ஆச்செ விடுதலை இயக்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராக ஆச்செ - இந்தோனேசியா பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். அவருடைய அயராத முயற்சியினால் ஆகஸ்ட் 5 , 2005 அன்று இரண்டு போட்டியிடும் கட்சிகள் இடையே ஒரு வரலாற்று சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகியது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்த இவரை, 26 ஆகஸ்ட், 2005 அன்று காரணம் இன்றி பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அவர் சிறுபான்மையினருக்காகப் பேசியது, இலங்கை மற்றும் ஆச்செ சமாதான பேச்சுக்களில் இடம் பெற்றவை போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டார் எனப் பின்னர் தெரிய வந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர், அவரது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார்.

2008 மலேசிய பொதுத் தேர்தலில், பினாங்கு சட்டமன்றத்தில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சி 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சி 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சி 1 இடமும் பெற்று வென்றன.[1]. அதில் பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பிறை சட்டமன்ற தொகுயில் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னை தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றார்.

துணை முதலமைச்சர்[தொகு]

தேர்தல் முடிவுகளுக்குப் பின் பொறுப்பேற்ற புதிய பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பினாங்கு துணை முதல்வராக இராமசாமியை நியமித்தார். மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் துணை முதல்வர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.[2] துணை முதல்வராக ஆனபின் பினாங்கு தமிழர்கள் மற்றுமின்றி மலேசிய தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார். சட்டமன்றத்தில் இவர் குரல் ஒலித்தது மட்டுமல்லாது 2008-2013 மலேசிய நாடாளுமன்றத்திலும் இவர் குரல் ஒலித்தது. 2008-2013 மலேசிய நாடாளுமன்றத்தில் தனி ஈழம் மற்றும் பாலஸ்தின விடுதலை பற்றி விவாதம் செய்தார். மலேசிய மத்திய அரசாங்கம், இலங்கை அரசை ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்கொன்டார்.

இரண்டாவது முறையாக 2013 மலேசிய பொதுத் தேர்தலில், மீண்டும் போட்டியிட்டு பிறை சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். ஆனால் அவர் இம்முறை நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. 2013 பினாங்கு சட்டமன்றத் தேர்தலில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதிக் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை மீண்டும் பினாங்கில் வெற்றி பெற்றன. இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற முதல்வர் லிம் குவான் எங் பினாங்குத் துணை முதல்வராக மீண்டும் இராமசாமியை நியமித்தார். இவர் மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித வளங்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும், பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவராகவும், மாநகராட்சி குடிநீர் வழங்கல் வாரிய துணை தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

ஆண்டு தொகுதி கிடைத்த வாக்குகள் பெரும்பான்மை பெறப்பட்ட வாக்குகள் எதிராளி விளைபயன்
2008 பி46 பத்து காவான், நாடாளுமன்ற தொகுதி 23,067 9,485 37,289 கோ சு கூன் (தேசிய முன்னணி - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி) 79%
2008 என்16 பிறை, சட்டமன்ற தொகுதி 7,668 5,176 10,651 கிருஷ்ணன் லெட்சுமணன் (தேசிய முன்னணி (மலேசியா) - மலேசிய இந்திய காங்கிரசு) 75%
2013 என்16 பிறை, சட்டமன்ற தொகுதி 10,549 7,959 13,465 கிருஷ்ணன் லெட்சுமணன் (தேசிய முன்னணி (மலேசியா) - மலேசிய இந்திய காங்கிரசு) 83.90%

காணொளிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Penang State Assembly Election Result".
  2. Kuppusamy, Baradan (20 March 2008). "Dr P. Ramasamy – from critic to Penang No. 2". The Star. http://thestar.com.my/news/story.asp?file=/2008/3/20/nation/20685048&sec=nation. பார்த்த நாள்: 21 December 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசாமி_பழனிச்சாமி&oldid=2803020" இருந்து மீள்விக்கப்பட்டது