பாக்காத்தான் ராக்யாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்காத்தான் ராக்யாட்
மக்கள் கூட்டணி
தலைவர்டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம்
தொடக்கம்ஏப்ரல் 1, 2008
கலைப்பு16 ஜூன் 2015 (சர்ச்சைக்குரிய)
பின்னர்பாக்காத்தான் ஹரப்பான்
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
உறுப்பினர்மக்கள் நீதிக் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
மலேசிய இஸ்லாமிய கட்சி
கொள்கைசமூக ஜனநாயகம்
சமூக தாராளவாதம்
நிறங்கள்ஆரஞ்சு
நாடாளுமன்ற தொகுதிகள்
89 / 222
சட்டமன்றம்
241 / 576

பக்காத்தான் ராக்யாட் அல்லது மக்கள் கூட்டணி ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும்.. இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைக்க பட்டது.[1]பின்னர், 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2][3]


12வது மலேசிய பொது தேர்தல்லில் பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றின. அவை கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகும். மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல்லின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்தது. பின் எதிர்கட்சிகள் இனைந்து ஐந்து மாநிலங்களிளும் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தன.[4] ஆனால் 2009 பிப்ரவரியில் , மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரிசான் நேசனல் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதால் பேராக் மாநிலத்தை இழந்தது.

கொள்கைகள்[தொகு]

மக்கள் நீதிக் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
மலேசிய இஸ்லாமிய கட்சி

பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:

  • வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
  • உயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்
  • மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை

பக்காத்தான் ராக்யாட் "ஆரஞ்சு புத்தகம்", மூலம் தமது கொள்கையை முன்னெடுத்து வைத்துள்ளது.

உருப்பு கட்சிகள்[தொகு]

பக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்[தொகு]

பொது தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் மொத்த இடங்கள் மொத்த வாக்குகள் வாக்குகள் பகிர் தேர்தல் முடிவு தலைவர்
2008
82 / 222
3,796,464 46.75% Green Arrow Up Darker.svg61 இடங்கள்; எதிர்க்கட்சி வான் அசிசா வான் இஸ்மாயில்
2013
89 / 222
5,623,984 50.87% Green Arrow Up Darker.svg7 இடங்கள்; எதிர்க்கட்சி அன்வார் இப்ராகிம்

2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ராக்யாட் இந்தியப் பிரதிநிதிகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]