பாக்காத்தான் ஹரப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாக்காத்தான் ஹரப்பான்
Alliance of Hope
ڤاکتن هارڤن
希望联盟
நம்பிக்கை கூட்டணி
சுருக்கக்குறி PH
பொது தலைவர் அன்வர் இப்ராகீம்
தலைவர் மகாதீர் பின் முகமது
செயல் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில்
துணை தலைவர்கள் லிம் குவான் எங்
முகமது சாபு
முஹைடின் யாசின்
உதவி தலைவர்கள் சோங் சியெங் ஜென்
அஸ்மின் அலி
சலாஹுதின் ஆயுப்
மூகிரி மகாதிர்
எம். குலசேகரன்
கிறிஸ்டினா லிவ்[1]
குறிக்கோளுரை பக்காத்தான் ஹராபன் ராக்யாட்
தொடக்கம் 22 செப்டம்பர் 2015
முன்னர் பாக்காத்தான் ராக்யாட்
மாணவர் அமைப்பு பக்காத்தான் ஹரப்பான் மாணவர் அனி
இளைஞர் அமைப்பு பாக்காத்தான் ஹரப்பான் இளைஞர் அனி[2][3]
உறுப்பினர் ஜனநாயக செயல் கட்சி
மக்கள் நீதிக் கட்சி
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
இண்ட்ராப்
கொள்கை சமூக ஜனநாயகம்
சமூக தாராளவாதம்
விழைதல்
அரசியல் இயக்கத்திற்கு
சீர்திருத்தவாதம்
அரசியல் நிலைப்பாடு மையம், இடது
மேளவை தொகுதிகள்
4 / 70
மக்களவை தொகுதிகள்
122 / 222
சட்டமன்ற தொகுதிகள்
156 / 587

பாக்காத்தான் ஹரப்பான் அல்லது நம்பிக்கை கூட்டணி மலேசியாவின் ஆளும் கட்சி கூட்டணியாகும்.

22 செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.பின் 2017 ஆம் ஆண்டில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி கூட்டணியில் ஒன்றிணைந்தது. 2018 ஆம் ஆண்டில் இந்து உரிமைகள் போராட்டக் குழு அல்லது இண்ட்ராப் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரித்தது.

14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[5] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.[6]

இத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.[7][8]

மலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான மகாதீர் பின் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[9]

கொள்கைகள்[தொகு]

பாக்காத்தான் ஹரப்பான் தேர்தல் சின்னம்
ஜனநாயக செயல் கட்சி
மக்கள் நீதிக் கட்சி
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)
இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force)

பாக்காத்தான் ஹரப்பானின் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:

  • வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
  • உயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்
  • மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை

உறுப்புக் கட்சிகள்[தொகு]

செயலாளர் கவுன்சில்[தொகு]

  • சைபுதீன் அப்துல்லா - தலைமை செயலாளர் [10]

மாற்று கூட்டாட்சி வரவு செலவு[தொகு]

  • பாக்காத்தான் ஹரப்பான் மாற்று கூட்டாட்சி வரவு செலவு .[11]

மாநில அரசுகள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ஹரப்பான் இந்தியப் பிரதிநிதிகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ram Anand (11 September 2017). "Pakatan Harapan adds two VPs to represent Indians, Sabahans". The Malay Mail. பார்த்த நாள் 11 September 2017.
  2. Masriwanie Muhamading (12 May 2017). "Pakatan Harapan youth wings' economic model targeting 1mil jobs for youth". Astro Awani. பார்த்த நாள் 12 May 2017.
  3. "Senarai penuh Majlis Pimpinan Pemuda Pakatan Harapan" (Malay). Astro Awani (31 October 2017). பார்த்த நாள் 31 October 2017.
  4. "Wanita Pakatan pledges to raise women in politics, economy, social welfare". The Malaysian Insight (11 October 2017). பார்த்த நாள் 11 October 2017.
  5. Hafiz Marzukhi (10-04-2018). "PRU 14: SPR tetapkan Rabu 9 Mei hari mengundi" (Malay). Astro Awani. பார்த்த நாள் 10-04-2018.
  6. "Federal Government Gazette [Proclamation]" (PDF). Attorney General's Chambers of Malaysia (28-05-2013). பார்த்த நாள் 6-04-2018.
  7. "PRU 14 Dashboard". 10 May 2018. http://pru14.spr.gov.my/#!/home. 
  8. "Pakatan takes Putrajaya, buoyed by ‘Malay tsunami’ | Malay Mail".
  9. "Jailed Malaysia politician 'to get pardon'" (11 May 2018). பார்த்த நாள் 11 May 2018.
  10. Hasnan, Harits Asyraf (19 October 2015). "Saifuddin Abdullah now Pakatan Harapan's chief secretary". Astro Awani. Astro Awani. http://english.astroawani.com/politics-news/saifuddin-abdullah-now-pakatan-harapans-chief-secretary-77054. பார்த்த நாள்: 22 October 2015. 
  11. "alternative Budget. Malaysia 2016".