தேசிய முன்னணி (மலேசியா)
பாரிசான் நேசனல் | |
---|---|
நிறுவனர் | அப்துல் ரசாக் உசேன் |
தலைவர் | அகமத் சாகித் அமிடி (அம்னோ) |
செயலாளர் | சாம்ரி அப்துல் காதர் (அம்னோ) |
தொடக்கம் | 1973 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
உறுப்பினர் | 3 கட்சிகள் |
கொள்கை | பழைமைவாதம், இசுலாமிய மக்களாட்சி |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி |
நிறங்கள் | நீலம், வெள்ளை |
மலேசிய மேலவை | 23 / 70 |
மலேசிய மக்களவை | 30 / 222 |
சட்டமன்றங்கள் | 120 / 611 |
முதல்வர்கள் | 4 / 13 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www |
பாரிசான் நேசனல் அல்லது தேசிய முன்னணி (மலாய்: Barisan Nasional; ஆங்கில மொழி: National Front; சீன மொழி: 国民阵线, (BN) என்பது மலேசியாவில் சில கட்சிகளின் ஒரு கூட்டணி ஆகும்.
இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1951-இல் இருந்து 1972 வரை மலேசிய கூட்டணி கட்சி எனும் பெயரில் இயங்கி வந்தது.
2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் 12-ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது.
பொது
[தொகு]12-ஆவது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ராக்யாட் எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை 2009 நெருக்கடியை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது).
அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது படாவி தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.[1][2] துணைப் பிரதமராக இருந்த நஜீப் துன் ரசாக் 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.[3][4]
2013 மலேசியப் பொதுத்தேர்தல்
[தொகு]மே 5 இல் மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி சரவாக் மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.[5][6]
அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.
அமைப்பு
[தொகு]பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.
- மலாய்க்காரர்களின் ஆதரவில் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (அம்னோ)
- சீனர்களின் ஆதரவில் மலேசிய சீனர் சங்கம் (ம.சீ.ச)
- இந்தியர்களின் ஆதரவில் மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா)
பொது தேர்தல் முடிவுகள்
[தொகு]தேர்தல் | தொகுதிகள் | பெற்ற வாக்குகள் | % | தேர்தல் முடிவு | தலைவர் |
---|---|---|---|---|---|
1974 | 135 / 154
|
1,287,400 | 60.8% | 135 இடங்கள்; ஆளும் கூட்டணி | அப்துல் ரசாக் உசேன் |
1978 | 131 / 154
|
1,987,907 | 57.2% | ▼ 4 இடங்கள்; ஆளும் கூட்டணி | உசேன் ஓன் |
1982 | 132 / 154
|
2,522,079 | 60.5% | 1 இடம்; ஆளும் கூட்டணி | மகாதீர் பின் முகமது |
1986 | 148 / 177
|
2,649,263 | 57.3% | 16 இடங்கள்; ஆளும் கூட்டணி | மகாதீர் பின் முகமது |
1990 | 127 / 180
|
2,985,392 | 53.4% | ▼ 21 இடங்கள்; ஆளும் கூட்டணி | மகாதீர் பின் முகமது |
1995 | 162 / 192
|
3,881,214 | 65.2% | 35 இடங்கள்; ஆளும் கூட்டணி | மகாதீர் பின் முகமது |
1999 | 147 / 193
|
3,748,511 | 56.53% | ▼ 15 இடங்கள்; ஆளும் கூட்டணி | மகாதீர் பின் முகமது |
2004 | 198 / 219
|
4,420,452 | 63.9% | 51 இடங்கள்; ஆளும் கூட்டணி | அப்துல்லா அகமது படாவி |
2008 | 140 / 222
|
4,082,411 | 50.27% | ▼ 58 இடங்கள்; ஆளும் கூட்டணி | அப்துல்லா அகமது படாவி |
2013 | 133 / 222
|
5,237,699 | 47.38% | ▼ 7 இடங்கள்;;[7] ஆளும் கூட்டணி | நஜீப் துன் ரசாக் |
2018 | 79 / 222
|
3,794,827 | 33.96% | ▼ 54 இடங்கள்; எதிர்க்கட்சி கூட்டணி (2018-2020) ஆளும் கூட்டணி; பெரிக்காத்தான் நேசனல் (2020-2022) |
நஜீப் துன் ரசாக் |
2022 | 30 / 222
|
3,462,231 | 22.36% | ▼ 49 இடங்கள்; ஆளும் கூட்டணி; பாக்காத்தான் அரப்பான், சரவாக் கட்சிகள் கூட்டணி, சபா மக்கள் கூட்டணி; சபா பாரம்பரிய கட்சி | அகமத் சாகித் அமிடி |
இந்தியப் பிரதிநிதிகள் 2018
[தொகு]பேராக் மாநிலம்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Malaysia's leader to step down as party loses clout, (International Herald Tribune), October 8, 2008.
- ↑ Badawi to step down as Malaysia's PM in March, (ABC Radio Australia), அக்டோபர் 8, 2008.
- ↑ Malaysia's Najib 1 step away from premier's post[தொடர்பிழந்த இணைப்பு], (Associated Press), மார்ச்சு 26, 2009.
- ↑ Malaysia's Najib sworn in as new prime minister பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம், (Channel News Asia), April 3, 2009.
- ↑ "Sabah State Assembly dissolved". Theborneopost.com.
- ↑ Kong, Lester (3 April 2013). "M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls". The Straits Times.
- ↑ Maierbrugger, Arno (16 August 2013). "Malaysia gov't bashed for $155m election ad spending". Inside Investor. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.