கிள்ளான்
கிள்ளான் | |
---|---|
சிலாங்கூர் நகரம் | |
Klang | |
![]() கிள்ளானில் சிலாங்கூர் சுல்தானின் அரண்மனை | |
குறிக்கோளுரை: ஒற்றுமை வலிமையின் அடித்தளம் | |
ஆள்கூறுகள்: 3°02′N 101°27′E / 3.033°N 101.450°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் |
நகராண்மைக் கழகத் தகுதி | 1 சனவரி 1977 |
அரசு | |
• நகராண்மைக் கழகத் தலைவர் | அகமட் பாட்சில் தாஜுடின்[1] |
பரப்பளவு | |
• சிலாங்கூர் நகரம் | 573 km2 (221 sq mi) |
மக்கள்தொகை (2010)[2] | |
• சிலாங்கூர் நகரம் | 1,586,208 |
• தரவரிசை | 6-ஆவது இடம் |
• அடர்த்தி | 1,298/km2 (3,360/sq mi) |
• நகர்ப்புறம் | 744,062 |
• பெருநகர் | 842,146 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 40xxx, 47xxx |
தொலைபேசி எண்கள் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | http://www.mbsa.gov.my |
கிள்ளான், (மலாய்: Klang; ஆங்கிலம்: Klang அல்லது Kelang; சீனம்: 巴生); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.
சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது. இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.
கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது.
வரலாறு[தொகு]
- 1867 - 1874 * கிள்ளான் போர் நடந்த காலக்கட்டம்
- 1880 - 1889 * சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த காலக் கட்டம் (கோலாலம்பூருக்கு முன்னால்)
- 1974 - 1977 * சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த காலக் கட்டம் (ஷா ஆலாமுக்கு முன்னால்)
- 1977 * கிள்ளான் மாநகராட்சி உருவாக்கப்பட்ட காலக் கட்டம்
கிள்ளான் அரச நகரமானது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே மனிதர்கள் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது. வெண்கலக் காலத்தின் தொட்டிகள், கோடாரிகள் மற்றும் பிற கலைப் பொருட்கள்; கிள்ளான் நகரின் அருகாமையிலும், கிள்ளான் நகரத்தின் உட்பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
வெண்கலக் காலத்துப் பொருட்கள்[தொகு]
கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி கிள்ளான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.[3][4][5]
துலாங் மாவாஸ் என்று அழைக்கப்படும் (குரங்கு எலும்புகள்); மற்றும் இரும்புக் கருவிகள்; ஒரு வெண்கல தொட்டி ஆகியவை கிள்ளான் பகுதியிலும்; அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.[6][7]
ஈய வளங்கள் நிறைந்த கிள்ளான்; கிள்ளான் பள்ளத்தாக்கு; ஆகிய இடங்கள் சிலாங்கூர் வரலாற்றிலும், மலாயா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 11-ஆம் நூற்றாண்டிலேயே மலாயாவின் பிற மாநிலங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சார்ந்து இருந்தவையாகக் குறிப்பிடப் படுகின்றது.[8]
நகரகிரேதாகமம் இலக்கியப் படைப்பில் கிள்ளான்[தொகு]
14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பிலும் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் 1409 முதல் 1433 வரை மலாக்காவிற்குப் பயணம் செய்த சீனக் கடல் படைத் தளபதி செங் கோவின் தொடக்கக் கால கடல்சார் வரைபடங்களில் கிள்ளான் நதி குறிக்கப்பட்டு பெயரிடப்பட்டும் உள்ளது.
15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் கிள்ளான் இருந்தது. மலாக்காவின் வரலாற்றுத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர் துன் பேராக். இவர் கிள்ளான் நகரத்தில் இருந்து தான் மலாக்காவிற்குச் சென்று மலாக்காவின் மூத்த அமைச்சரனார்.
17-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில், இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ் மக்கள் குடியேறத் தொடங்கினர். சிலாங்கூர் சுல்தானகம் 1766-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[9][10]
பிரபலமான இடங்கள்[தொகு]
கிள்ளானில் எழில்மிகு இடங்கள் என்றால் “அலாம் ஷா” மாளிகை, “சுல்தான் சுலைமான்” மசூதி, “லிட்டில் இந்தியா (ஜாலான் தெங்கு சாலை), கேரித் தீவு மற்றும் ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் ஆலயம் போன்றவை உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Klang Municipal Council has a new president". The Star. 9 April 2020. 12 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ MPK, Klang. "TABURAN PENDUDUK DAN CIRI-CIRI ASAS DEMOGRAFI TAHUN 2010". MP Klang Site. 24 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "British Museum Collection". 2019-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bernet Kempers, A. J. (1988-01-01). The Kettledrums of Southeast Asia: A Bronze Age World and Its Aftermath – August Johan Bernet Kempers – Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789061915416. https://books.google.com/books?id=ikSQw_-8gboC&q=%22bronze+age%22+klang+malaysia&pg=PA228. பார்த்த நாள்: 17 September 2013.
- ↑ W. Linehan (October 1951). "Traces of a Bronze Age Culture Associated With Iron Age Implements in the Regions of Klang and the Tembeling, Malaya". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society (Malaysian Branch of the Royal Asiatic Society) 24 (3 (156)): 1–59.
- ↑ R. O. Winstedt (October 1934). "A History of Selangor". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society (Malaysian Branch of the Royal Asiatic Society) 12 (3 (120)): 1–34.
- ↑ Linehan, W. (1951). "Traces of a Bronze Age culture associated with Iron Age implements in the regions of Klang and the Tembeling, Malaya". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 24 (3 (156)): 1–59.
- ↑ J.M. Gullick (1983). The Story of Kuala Lumpur, 1857–1939. Eastern Universities Press (M). பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9679080285.
- ↑ Ooi Keat Gin (2010). The A to Z of Malaysia. Scarecrow Press. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461671992. https://books.google.com/books?id=YVViEJmN99kC&pg=PA286.
- ↑ Swee-Hock Saw (1989). The Population of Peninsular Malaysia. Singapore University Press. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9971691264. https://books.google.com/books?id=WH6m3mGNJwkC&pg=PA37.