சுபாங், சிலாங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுபாங்
நாடுமலேசியா
மாநிலம்சிலாங்கூர்
நிறுவனம்1974 established_title2=
பரப்பளவு
 • மொத்தம்200 கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)

சுபாங் (Subang)[1]மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சா ஆலாமிற்கும் சுபாங் ஜெயாவிற்கும் இடைப்பட்டு அமைந்துள்ள நகர்ப்புறமாகும். கிள்ளான் பள்ளத்தாகிலுள்ள காம்புங் பாரு சுபாங் சிற்றூரையும் சௌஜானா குழிப்பந்து நாட்டு மனமகிழ் மன்றத்தையும் அடக்கி உள்ளது. இங்கிருந்து சுபாங் ஜெயா, கெலெனா ஜெயா, சுங்கை புலோ, அரா தமனசரா, முடியாரா தமனசரா போன்ற நகரங்களுக்கும் பெடாலிங் ஜெயா பகுதிகளுக்கும் 5 முதல் பத்து நிமிடங்களில் தானுந்தில் சென்று விடலாம்.

இங்கு கோலாலம்பூரின் பழைய பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. தற்போது இந்த வானூர்தி நிலையம் தென்கிழக்காசியாவின் பெருநிறுவனங்கள் மற்றும் தனியார் வான்சேவைகளுக்கான முதன்மை அச்சு மையமாக விளங்குகின்றது.

முதன்மை இல்லங்கள்[தொகு]

இங்கு பல புகழ்பெற்ற குழிப் பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. இங்கு செல்வச்செழிப்பு மிக்க இல்லங்கள் நிறைந்துள்ளன. இந்த நகர்ப்புறத்தில் பல வசதிமிக்க அடுக்கு வீடுகளும் வில்லாக்களும் மாளிகைகளும் அமைந்துள்ளன.

 • அமயா சௌஜானா
 • செரை சௌஜானா
 • லேக் வியூ சௌஜானா
 • கிளென்ஹில் சௌஜானா
 • மேப்பிள்வுட்சு சௌஜானா
 • பங்கா ராயா கொண்டோமியம்

அரசியல்[தொகு]

சுபாங் சிலாங்கூரின் மிகப்பெரும் தொகுதிகளில் ஒன்றாகும்; பல்வேறு இன,சமய,சமூக பின்னணி மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக தன்ஸ்ரீ கே.எஸ். நிஜர் இருந்தார். 2008 பொதுத்தேர்தலில், மக்கள் நீதிக் கட்சியின் சிவராசா ராசையா தனது அடுத்த போட்டியாளரை 6,000 வாக்கு வேறுபாட்டில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] 2004ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பில் சுபாங் தொகுதியில் மூன்று மாநில சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன: புகிட் லஞ்சன், கோடா தமன்சாரா, பாயா ஜராசு. இத்தொகுதிகளில் வென்றவர்கள் சிலாங்கூர் மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர்களாவர்.

மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகள்[தொகு]

புகிட் லஞ்சன்[தொகு]

புகிட் லஞ்சன் மக்கள்தொகை 50,000 ஆகும். இவர்களில் 25% பேர் காம்புங் சுங்கை காயு அரா, பெலாங்கி தமன்சாரா போன்ற குறைந்தவிலை அடுக்கங்களில் வசிக்கும் குறைந்த வருமான வகுப்பினராவர். உயர் வருமான வகுப்பினர் பந்தர் உடாம, தமன்சாரா பெர்டானா, பந்தர் சிறீ தமன்சாரா பகுதிகளில் வசிக்கின்றனர். மீதம் 40% மத்தியத்தர மக்களாவர்.

இத்தொகுதி மக்களின் முதன்மையான குறைபாடு கட்டமைப்புக்களைக் குறித்ததாகும். சாக்கடைகள், சாலைகள், களங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்தும் தானுந்து திருட்டு, வீட்டுக் கொள்ளை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு ஆகியன முதன்மையான எதிர்பார்ப்புகளாக உள்ளன. தவிரவும் தொடர்ந்த சாலைப் போக்குவரத்து நெருக்கடியும் சாலையோர வணிகர்களின் பிரச்சினையும் அடுத்துள்ள தீர்வு கோரப்படும் சிக்கல்களாகும்.

பாயா ஜராசு[தொகு]

பாயா ஜராசு சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 70,000. இதில் 60% மலாய்களும் 30% சீனர்களும் 10% இந்தியர்களுமாவர்.

பாயா ஜராசு மரபார்ந்த சிற்றூர்களையும் புதிய சிற்றூர்களையும் பல குடியிருப்பு பகுதிகளையும் அடக்கியுள்ளது. புகிட் ரக்மான் புத்ரா, சியர்ரமாசு, வாலென்சியா பகுதிகளில் நடுத்தர, உயர்நிலை மக்களும் அமன் புரி, தமன் எசான் பகுதிகளில் நடுத்தர மக்களும் வசிக்கின்றனர். வறியநிலை மக்கள் அமன்புரி, மடங் ஜயா பகுதிகளில் வசிக்கின்றனர்.

சாலை விளக்குகள், சாலைகள், சாக்கடைகள், சிற்றூர்களுக்கானப் பொதுப் போக்குவரத்து, பெருமழையின்போது வெள்ளப்பெருக்கு ஆகியன இத்தொகுதி மக்களின் குறைபாடுகளாகும்.

பொருளாதாரம்[தொகு]

மலேசியா எயர்லைன்சும் பயர்பிளையும் இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்திலுள்ள மலேசிய எயர்லைன்சின் கட்டிடத்தில் தங்கள் தலைமை அலுவலகங்களை கொண்டுள்ளன.[3][4] தவிரவும் பெர்ஜெயா ஏர் நிறுவனமும் டிரான்சுமைல் ஏர் சர்வீசசு நிறுவனமும் இங்கு தங்கள் தலைமை அலுவலகங்களைக் கொண்டுள்ளன.[5][6] சுபாங் பெர்டானா வணிக மையம் சுபாங்கிற்கு அண்மையிலுள்ள வணிக நகர்ப்பகுதியாகும். சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் தற்போது இசுகைப்பார்க் முனையம் என்று அழைக்கப்படுகின்றது.

கல்வி[தொகு]

கோலாலம்பூர் சப்பானியப் பள்ளி

சுபாங்கின் சௌஜானா குழிப்பந்தாட்ட நாட்டு மனமகிழ் மன்ற மைதானத்தில் கோலாலம்பூர் சப்பானியப் பள்ளிக்கூடம் இயங்குகின்றது.[7]

வானிலை[தொகு]

சுபாங் மலேசியாவிலேயே மிகவும் இடி விழும் இடமாக கருதப்படுகின்றது.மலேசிய வானியல் ஆய்வுத் துறையின்படி[8]:-

 • சுபாங்கில் 1987இல் ஆண்டின் 362 நாட்களில் மின்னலுடன் இடி விழுந்தது
 • இடியுடன் கூடிய மிக கூடுதலான சராசரி நாட்களை, 262 நாட்கள், சுபாங் கொண்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Subang". DurianProperty.com.my. பார்த்த நாள் 27 May 2014.
 2. "Sivarasa Wins!". பார்த்த நாள் 2008-03-08.
 3. "Press Release Sep 2007." மலேசியா எயர்லைன்சு. Retrieved on 27 September 2009.
 4. "Contact Info." Firefly. Retrieved on 22 February 2010.
 5. " Contact Us." Berjaya Air. Retrieved on 26 December 2011. "Head Quarters Office Berjaya Air Sdn Bhd Berjaya Hangar, SkyPark Terminal Building Sultan Abdul Aziz Shah Airport 47200 Subang Selangor Darul Ehsan Malaysia"
 6. "Group Offices." Transmile Air Services. Retrieved on 27 December 2011. "Corporate & Finance Transmile Centre Cargo Complex, Sultan Abdul Aziz Shah Airport. 47200 Subang, Selangor Darul Ehsan MALAYSIA"
 7. "School Outline." Japanese School of Kuala Lumpur. Retrieved on January 13, 2015. "Saujana Resort Seksyen U2, 40150, Selangor Darul Ehsan, Malaysia"
 8. மலேசிய வானியல் ஆய்வு மையம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாங்,_சிலாங்கூர்&oldid=1962772" இருந்து மீள்விக்கப்பட்டது