பிந்துலு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°07′27″N 113°01′11″E / 3.12417°N 113.01972°E / 3.12417; 113.01972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்துலு வானூர்தி நிலையம்
Bintulu Airport</center

பிந்துலு வானூர்தி நிலையம்
 • ஐஏடிஏ: BTU
 • ஐசிஏஓ: WBGB
  Bintulu Airport is located in மலேசியா
  Bintulu Airport
  Bintulu Airport
  பிந்துலு வானூர்தி
  நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுபிந்துலு பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா
அமைவிடம்பிந்துலு, சரவாக், மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL74 ft / 22.5552 m
ஆள்கூறுகள்03°07′27″N 113°01′11″E / 3.12417°N 113.01972°E / 3.12417; 113.01972
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
17/35 2,745 9,006 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள்370,437 ( 66.8%)
விமான நகர்வுகள்1,378 ( 70.4%)
சரக்கு (டன்கள்)6,529 ( 49.4%)
Source: official web site[1]
Aeronautical Information Publication Malaysia[2]

பிந்துலு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTUஐசிஏஓ: WBGB); (ஆங்கிலம்: Bintulu Airport; மலாய்: Lapangan Terbang Bintulu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு; பிந்துலு மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[3]

இந்த வானூர்தி நிலையம் சிறியதாக இருந்தாலும், போயிங் 747 போன்ற பெரிய விமானங்களைக் கையாளக் கூடியது. பிந்துலு நகரின் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பிந்துலு வானூர்தி நிலையத்தின் வரலாறு 1934-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு முனையில் கடல் கடற்கரைக்கும்; மறுமுனையில் ஓர் ஆற்றுக்கும் இடையே ஓர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு வானூர்தி நிலையத்தை, அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் கட்டத் தொடங்கியது.

நிதி சிக்கல்களின் காரணமாக 1938-இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகள், அந்த வானூர்தி நிலையத்தின் மீது குண்டுகள் வீசிக் கடுமையாகத் தாக்கின. நிலையம் பெரிதும் சேதம் அடைந்தது.

போர்னியோ ஏர்வேஸ்[தொகு]

பின்னர் ஆங்கிலேயர்கள் அந்த விமான ஓடுபாதையை மீண்டும் கட்டினார்கள். 1955-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. 2002-இல், பழைய வானூர்தி நிலையத்திற்குப் பதிலாக புதிய பிந்துலு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது.

பின்னர், 1955 செப்டம்பர் 1-ஆம் தேதி, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. போர்னியோ ஏர்வேஸ் வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இரு வகையான (de Havilland DH.89 Dragon Rapide); (Scottish Aviation Twin Pioneer) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஓடுபாதை மறுசீரமைப்பு[தொகு]

1963-இல், டிசி-3 (DC-3) போன்ற பெரிய வகை விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966-ஆம் ஆண்டில், கட்டித்தார் (bitumen) மூலம் ஓடுபாதை மறுசீரமைக்கப்பட்டது. மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முனையக் கட்டிடமும் விரிவாக்கப்பட்டது.

1 ஜூலை 1968-இல், மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Malaysia-Singapore Airlines) விமான நிறுவனம், போக்கர் 27 (Fokker 27) ரக விமானங்களின் சேவையை அறிமுகப்படுத்தியது.

பழைய விமான நிலையம்[தொகு]

பின்னர் 1981-இல், போக்கர் 50 (Fokker 50) ரக விமானங்களுக்காக நிலையத்தின் முனையக் கட்டிடப் பகுதி நீட்டிக்கப்பட்டது. பழைய விமான நிலையம் 30 மார்ச் 2003-இல் மூடப்பட்டது. நகரத்திற்கு வெளியே ஒரு புதிய இடத்திற்கு விமானச் சேவை மாற்றம் செய்யப்பட்டது.[4].

செப்டம்பர் 2005-இல், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா; பிந்துலு வானூர்தி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. அதன் பின்னர் அதன் துணை நிறுவனமான பிளை ஏசியன் எக்ஸ்பிரஸ் (FlyAsianXpress), 1 ஆகஸ்ட் 2006-இல் முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் சேவையை மேற்கொண்டது. 30 செப்டம்பர் 2007 வரை அந்தச் சேவை தொடர்ந்தது. 1 அக்டோபர் 2007 அன்று,

அதன் பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மாஸ் விங்ஸ் நிறுவனத்திற்கு, சேவை மாற்றம் செய்யப்பட்டது. அந்தச் சேவை இன்று வரை தொடர்கிறது.

சேவை[தொகு]

நிறுவனம் சேரிடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
மிரி வானூர்தி நிலையம்
முக்கா வானூர்தி நிலையம்
சிபு வானூர்தி நிலையம்
மலேசியா எயர்லைன்சு
(Malaysia Airlines)
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஏர்ஏசியா
(AirAsia)
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 427,894 940 13,627
2004 464,576 8.6 1,375 46.3 13,546 0.6
2005 487,077 4.8 2,110 53.4 13,619 0.5
2006 449,673 7.7 2,205 4.5 11,804 13.3
2007 381,158 15.2 2,252 2.1 7,093 39.9
2008 417,918 9.6 1,978 12.2 16,787 136.7
2009 487,060 16.5 1,903 3.8 51,009 203.9
2010 557,459 14.4 1,703 10.5 24,246 52.5
2011 590,253 5.9 2,071 21.6 17,122 29.4
2012 661,553 12.1 2,574 24.3 12,294 28.2
2013 779,774 17.9 2,553 0.8 13,661 11.1
2014 832,440 6.8 2,318 9.2 12,968 5.1
2015 800,008 3.9 2,383 2.8 12,638 2.5
2016 805,206 0.6 2,647 11.1 12,130 4.0
2017 849,596 5.5 2,211 16.4 12,021 0.9
2018 923,033 8.6 3,566 25.1 13,062 8.7
2019 1,114,513 20.7 4,659 30.7 12,901 1.2
2020 370,437 66.8 1,378 70.4 6,529 49.4
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[5]

உள்நாட்டுச் சேவைகள்[தொகு]

பிந்துலு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2019 சூலை மாதம் - புள்ளிவிவரங்கள்)
தர
வரிசை
இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1 கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் 35 ஏர் ஏசியா, மலேசிய ஏர்லைன்சு
2 சர்வாக் கூச்சிங், சரவாக் 35 ஏர் ஏசியா,
3 கோத்தா கினபாலு 14 ஏர் ஏசியா
4 ஜொகூர் ஜொகூர் பாரு 3 ஏர் ஏசியா
5 சர்வாக் மிரி 14 மாஸ் விங்ஸ்
6 சர்வாக் சிபு 14 மாஸ் விங்ஸ்
7 சர்வாக் முக்கா 2 மாஸ் விங்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

 1. Bintulu Airport, Sarawak at Malaysia Airports Holdings Berhad
 2. WBGB - BINTULU பரணிடப்பட்டது 2013-12-28 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
 3. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
 4. "Bintulu's new airport to begin operations". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-07.
 5. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]