உள்ளடக்கத்துக்குச் செல்

எசுகேசு வானூர்தி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுகேசு வானூர்தி நிறுவனம்
SKS Airways
IATA ICAO அழைப்புக் குறியீடு
KI SJB SOUTHERN TIGER
நிறுவல்13 நவம்பர் 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-11-13)[1]
மையங்கள்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
ஜொகூர் பாரு
வானூர்தி எண்ணிக்கை2
சேரிடங்கள்5
தலைமையிடம்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
சுபாங், மலேசியா
முக்கிய நபர்கள்டத்தோ ரோமான் அகமது (இயக்குநர்)[2]
வலைத்தளம்www.sksairways.com

எசுகேசு வானூர்தி நிறுவனம் அல்லது எஸ்கேஎஸ் ஏர்வேஸ் (ஆங்கிலம்: SKS Airways; மலாய்: SKS Airways (KI/SJB) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்; ஜொகூர் பாரு, செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரு நிலையங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் ஒரு வானூர்தி நிறுவனம் ஆகும்.

கிழக்கு மலேசியாவில் உள்ள தீவுகளுக்கான பயணிகள் சேவைத் துறையை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. அண்மைய காலங்களில் விமானச் சரக்குச் சேவைத் துறையிலும் படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

பொது

[தொகு]

நவம்பர் 2017-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனம் நிறுவப்பட்டது.

15 ஜூலை 2019-இல், அந்த வானூர்தி நிறுவனம் தனது முதல் DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது.

அக்டோபர் 2021-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனத்தை இயக்குவதற்கான சான்றிதழ் பெறப்பட்டது.

25 ஜனவரி 2022-இல், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் இருந்து பங்கோர் தீவுக்கு தனது முதல் வணிக வானூர்திச் சேவையை அறிமுகப் படுத்தியது.

23 டிசம்பர் 2020-இல், தனது இரண்டாவது DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது.

வானூர்திகள்

[தொகு]

2021 அக்டோபர் நிலவரப்படி, எசுகேசு நிறுவனம் பின்வரும் வானூர்திகளைக் கொண்டிருந்தது :[3]

எசுகேசு வானூர்திகள்
விமானம் எண்ணிக்கை
டி அவிலாந்த் 6-300 (de Havilland Canada DHC-6 Twin Otter) 2
9M-KIA (9M-KIA); 9M-KIB (9M-KIB) 2

இலக்குகள்

[தொகு]

பிப்ரவரி 2022 புள்ளிவிரங்கள்: எசுகேசு வானூர்தி நிறுவனம் பின்வரும் திட்டமிடப்பட்ட பயணிகள் சேவைகளைச் செய்தது:[4][5]

நாடு நிலை நகரம் விமான நிலையம்
 மலேசியா  ஜொகூர் ஜொகூர் பாரு செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சிலாங்கூர் கோலாலம்பூர் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
பேராக் பங்கோர் தீவு பங்கோர் வானூர்தி நிலையம்
 திராங்கானு ரெடாங் தீவு ரெடாங் வானூர்தி நிலையம்
பகாங் தியோமான் தீவு தியோமான் வானூர்தி நிலையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SKS Airways Airline Profile | CAPA". centreforaviation.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  2. "Dr Wee launches SKS Airways – new kid on the aviation block offering flights to island getaways". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  3. "Global Airline Guide 2019 (Part One)". Airliner World October 2019: 20. 
  4. "New commercial airline SKS Airways offers direct flights to Pulau Pangkor, Redang and Tioman". www.optionstheedge.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  5. "SKS Airways". SKS Airways. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raya Airways
என்பதில் ஊடகங்கள் உள்ளன.