மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 02°15′47″N 102°15′09″E / 2.26306°N 102.25250°E / 2.26306; 102.25250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Malacca International Airport
புதிய முனையத்தின் தளவமைப்பு
  • ஐஏடிஏ: MKZ
  • ஐசிஏஓ: WMKM
    MKZ is located in மலேசியா
    MKZ
    MKZ
    மலேசியாவில் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்கசானா நேசனல் (Khazanah Nasional)
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
சேவை புரிவதுமலாக்கா, மலேசியா
அமைவிடம்பத்து பிரண்டாம், மலாக்கா, மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL40 ft / 12 m
ஆள்கூறுகள்02°15′47″N 102°15′09″E / 2.26306°N 102.25250°E / 2.26306; 102.25250
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
03/21 2,135 7,005 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள் போக்குவரத்து29,424 ( 78.3%)
சரக்கு எடை (டன்கள்)
வானூர்தி போக்குவரத்து37,998 ( 27.0%)
Source: official web site[1][2]
புதிய முனையத்தின் நுழைவாயில்

மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது பத்து பெரண்டாம் விமான நிலையம் (ஐஏடிஏ: MKZஐசிஏஓ: WMKM); (ஆங்கிலம்: Malacca International Airport அல்லது Batu Berendam Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Melaka; சீனம்: 马六甲国际机场; ஜாவி: لاڤڠن تربڠ انتارابڠسا سلطان عبدالعزيز شه) என்பது மலேசியாவின் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த வானூர்தி நிலையம் மலாக்கா மாநிலத்திற்கும், வடக்கு ஜொகூர் பகுதிக்கும் சேவை செய்கிறது. 7,000 சதுர மீட்டர் (75,000 சதுர அடி) முனைய வளாகத்தைக் கொண்டது. ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடியது.

அனைத்துலகத் தரவரிசையில் அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டது. விமான நிலையத்தின் 2135 மீட்டர் ஓடுபாதை, போயிங் 737 மற்றும் ஏர்பஸ் A320 ரக விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கின்றது.

வரலாறு[தொகு]

இந்த விமான நிலையம் 1952-இல் கட்டப்பட்டது. இதன் கட்டுப்பாட்டுக் கோபுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரகுமானின் விமானம் 1956 பிப்ரவரி 20-இல் லண்டனில் இருந்து தரை இறங்குவதற்கு வழிகாட்டியதும் இதே கோபுரம்தான்.

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அப்போதைய மலாயா சுதந்திரம் பெறும் தேதியை மலாக்காவில் தான் துங்கு அறிவித்தார். பின்னர், மலாக்கா நகருக்குச் சென்று பண்டார் ஹீலிர் பிரதான திடலில் சுதந்திரச் செய்தியை அறிவித்தார்.[3]

பெக்கான் பாரு சேவை[தொகு]

2008-ஆம் ஆண்டில் இருந்து 2014-ஆம் ஆண்டு வரையில், இந்தோனேசியா, ரியாவு மாநிலத்தின் தலைநகரமான பெக்கான்பாருவில் இருந்து வாரத்திற்கு 5 முறை விமானச் சேவைகள் இருந்தன.

ஸ்கை ஏவியேஷன் (Sky Aviation) எனும் விமான நிறுவனம் அந்த விமானச் சேவையை நடத்தியது. 2014-இல் அந்த நிறுவனம் தன் அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்தியதால் விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டன.[4]

சீனா குவாங்சௌ சேவை[தொகு]

மலின்டோ விமான நிறுவனம் 4 நவம்பர் 2014-இல் மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து பினாங்கு - பெக்கான்பாரு இந்தோனேசியாவிற்கு வாரத்திற்கு நான்கு விமானப் பயணங்களைத் தொடங்கியது.

சீனாவின் சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் (China Southern Airlines), மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து சீனாவின் குவாங்சௌ (Guangzhou) நகரத்திற்கு 29 செப்டம்பர் 2016-ஆம் தேதி ஒரு விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது.

மலேசிய விமானிகள் பயிற்சி மையம்[தொகு]

1987-ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய விமானிகள் பயிற்சி மையத்தின் (Malaysian Flying Academy) விமானிகளுக்கான பயிற்சிப் பட்டறைகள் இந்த விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றன.

1 ஜூலை 2019 ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஏர் ஏசியா பினாங்கில் இருந்து தனது விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது.[5]

புதிய முனையத்தின் கட்டுமானம்[தொகு]

மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய முனையத்தின் கட்டுமானம் 2006 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது.

  • பழைய ஓடுபாதையின் நீளம் 1,372 மீட்டர்; அகலம் 37 மீட்டர். (4,501 அடி × 121 அடி).
  • புதிய ஓடுபாதையின் நீளம் 2,145 மீட்டர். அகலம் 45 மீட்டர். (7,005 அடி × 148 அடி).

இப்போது போயிங் 737 (Boeing 737) மற்றும் ஏர்பஸ் A320 ரக (Airbus A320) பெரிய விமானங்கள் இந்த விமானப் பாதையில் இறங்க முடியும்.

புதிய முனையம் புதிய பெயர்[தொகு]

மே 2009-இல், புதிய முனையம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. பழைய முனையத்தின் வசதிகளை ஆண்டுக்கு 30,000 பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மாறாக புதிய முனையம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகளைக் கையாள முடிகின்றது.

பிப்ரவரி 2010-இல், மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த விமான நிலையத்திற்கு மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் மாற்றம் செய்தார்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

பத்து பிரண்டாம்