கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 05°56′41″N 116°03′31″E / 5.94472°N 116.05861°E / 5.94472; 116.05861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
Kota Kinabalu International Airport
கோத்தா கினபாலு வானூர்தி நிலையம்
 • ஐஏடிஏ: BKI
 • ஐசிஏஓ: WBKK
  BKI WBKK is located in மலேசியா
  BKI WBKK
  BKI WBKK
  கோத்தா கினபாலு வானூர்தி
  நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்கசானா நேசனல்
Khazanah Nasional
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுகோத்தா கினபாலு, மேற்கு கரை, உட்பகுதி (சபா)
அமைவிடம்கெபாயான், தஞ்சோங் அரு, கோத்தா கினபாலு, சபா மலேசியா
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL10 ft / 3 m
ஆள்கூறுகள்05°56′41″N 116°03′31″E / 5.94472°N 116.05861°E / 5.94472; 116.05861
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 3,780 12,402 தார்
புள்ளிவிவரங்கள் (2018)
பயணிகள் போக்குவரத்து8,622,488 ( 7.7%)
சரக்கு டன்கள்28,039 ( 2.4%)
வானூர்தி போக்குவரத்து79,044 ( 7.9%)

கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKIஐசிஏஓ: WBKK); (ஆங்கிலம்: Kota Kinabalu International Airport (KKIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kota Kinabalu) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

இந்த வானூர்தி நிலையம், சபா மாநிலத்தின் மேற்கு கரை மக்களுக்கும்; உட்பகுதி மக்களுக்கும்; வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2,302,514. அதே வேளையில் 41,724 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. நகர மையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. (5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

பொது[தொகு]

கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பிறகு மலேசியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் என்றும்; போர்னியோ தீவின் பரபரப்பான விமான நிலையம் என்றும் சொல்லப் படுகிறது.

இந்த வானூர்தி நிலையம், ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய வானூர்தி மையங்களுக்கு நல்ல இணைப்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நடுத்தர அளவிலான வானூர்தி நிலையம்.

வரலாறு[தொகு]

1943-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர் இராணுவத்தால் இந்த வானூர்தி நிலையம் கட்டப்பட்டது. ஓர் இராணுவ வானூர்தி நிலையமாக தன் வரலாற்றைத் தொடக்கியது.[1] அப்போது அது ஜெசல்டன் வானூர்தித் திடல் (Jesselton Airfield) என்று அழைக்கப்பட்டது.

ஜெசல்டன் என்று கோத்தா கினாபாலு அப்போது அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகளால், இந்த வானூர்தி நிலையம் கடுமையான குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகியது.

மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்[தொகு]

போருக்குப் பிறகு, வடக்கு போர்னியோவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (Department of Civil Aviation - DCA) விமான நிலையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை எடுத்துக் கொண்டது. வடக்கு போர்னியோ என்பது இப்போதைய சபா மாநிலம் ஆகும்.

வழக்கமான பயணிகள் சேவை 1949 மே மாதம் தொடங்கியது. சிங்கப்பூரில் இருந்து கூச்சிங் மற்றும் லபுவான் வழியாக மலாயன் ஏர்வேஸ் வானூர்தி (Malayan Airways) நிறுவனத்தின் மூலமாக அந்தச் சேவையைத் தொடக்கப்பட்டது.

கெத்தே பசிபிக் வானூர்தி நிறுவனம்[தொகு]

இந்த மலாயன் ஏர்வேஸ் வானூர்தி சேவை, பின்னர்க் காலத்தில் மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Malaysia–Singapore Airlines) என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தச் சேவை, செப்டம்பர் 1949-இல் சண்டக்கான் வரை நீட்டிக்கப்பட்டது.[2]

1950-ஆம் ஆண்டு வாக்கில் கெத்தே பசிபிக் வானூர்தி நிறுவனம், ஹாங்காங் மணிலா சேவையைத் தொடங்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் விமானங்களுக்கான நிறுத்தமாக இந்தக் கோத்தா கினபாலு வானூர்தி நிலையம் செயல்பட்டது.[3][4]

ஓடுபாதை மறுசீரமைக்கப்பு[தொகு]

1953-ஆம் ஆண்டில், சபா ஏர்வேஸ் லிமிடெட் (Sabah Airways Limited) நிறுவனத்தின் மூலமாக ஓர் உள்நாட்டு விமானச் சேவை உருவாக்கப்பட்டது. அந்தச் சேவையில் சண்டக்கான், கூடாட், ரானாவ், கெனிங்காவ், தாவாவ் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டன.[5]

1957-ஆம் ஆண்டில், அசல் புல்வெளி ஓடுபாதை ஆஸ்பால்ட் பொருட்களால் மறுசீரமைக்கப்பட்டது. மற்றும் ஒரு புதிய முனையம் கட்டப்பட்டது.[6]

வரலார்றுத் தடங்கள்[தொகு]

1959-ஆம் ஆண்டில், ஓடுபாதை 1,593 மீட்டராக நீட்டிக்கப்பட்டது

1963-ஆம் ஆண்டில், ஓடுபாதை மேலும் வலுப்படுத்தப்பட்டு 1,921 மீட்டராக நீட்டிக்கப்பட்டது.

1970 - 1980-ஆம் ஆண்டுகளில், ஓடுபாதையின் மறுபுறத்தில் ஒரு புதிய முனையக் கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வணிக விமானங்களும் இந்த புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டன. பின்னர், அசல் முனையம் ஏர்போர்ட் லாமா சாய்ந்த எழுத்துக்கள்(Airport Lama) ("பழைய விமான நிலையம்") என அறியப்பட்டது.

1992-ஆம் ஆண்டில், கோத்தா கினபாலு வானூர்தி நிலையத்தின் நிர்வாகம்; மற்றும் செயல்பாடுகள்; மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனத்தின் கீழ் வந்தன.

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்[தொகு]

Traffic[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
1994 2,096,241 24,270 40,608
1995 2,554,181 21.8 29,537 21.7 43,882 8.0
1996 2,622,190 2.7 23,099 21.8 45,726 4.2
1997 2,732,146 4.2 37,203 61.1 49,148 7.5
1998 2,393,431 12.9 27,942 24.9 38,716 21.2
1999 2,752,207 15.0 27,087 3.1 40,634 5.0
2000 3,092,326 12.3 27,347 1.0 41,411 2.0
2001 3,036,196 1.8 24,887 9.0 40,157 3.0
2002 3,256,212 7.2 28,112 13.0 44,528 10.9
2003 3,302,366 1.4 25,638 8.8 44,748 0.5
2004 3,918,201 18.6 27,191 6.1 52,352 17.0
2005 3,975,136 1.4 25,473 6.3 51,824 1.0
2006 4,015,221 1.0 28,356 11.3 52,055 0.4
2007 4,399,939 9.6 35,638 25.7 52,047 0.01
2008 4,689,164 6.6 34,532 3.1 54,317 4.4
2009 4,868,526 3.8 25,079 27.4 53,554 1.4
2010 5,223,454 7.3 26,733 6.6 55,241 3.2
2011 5,808,639 11.2 28,534 6.7 59,638 8.0
2012 5,848,135 0.7 23,563 17.4 58,366 2.1
2013 6,929,692 18.5 21,922 7.0 67,601 15.8
2014 6,792,968 2.1 23,769 8.4 73,074 8.1
2015 6,573,461 3.2 24,768 4.2 71,209 2.6
2016 7,263,339 10.5 28,764 16.1 70,138 1.5
2017 8,006,446 10.2 27,372 4.8 73,237 4.4
2018 8,622,488 7.7 28,039 2.4 79,044 7.9
2019 9,445,494 9.5 28,664 2.2 83,580 5.7
2020 2,302,514 75.6 41,724 45.6 32,081 61.6
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "USAAF Chronology". Archived from the original on 13 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 November 2016.
 2. Ivor Kraal (15 May 1949). "Singapore Skyline". NLB. The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
 3. "Singapore Skyline". eresources.nlb.gov.sg/. The Straits Times. 14 May 1949. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
 4. Colonial Reports - North Borneo 1951. London: Her Majesty Stationery Office. 1951. பக். 77. https://archive.org/stream/b3141543x/b3141543x_djvu.txt. 
 5. Colonial Reports - North Borneo 1953. London: Her Majesty Stationery Office. 1954. பக். 127. https://seadelt.net/Asset/Source/Document_ID-431_No-01.pdf. 
 6. Profile பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Department of Civil Aviation, Sabah.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]