உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்பால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஸ்பால்ட் (Asphalt) என்பது கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறமுள்ள ஒரு தாது ஆகும். இது இயற்கையாக பல இடங்களில் கிடைக்கிறது. மேற்கு இந்தியத் தீவிலுள்ள டிரினிடாட் என்னுமிடத்தில் 100 ஏக்கர் பரப்பிற்கு 285 அடி ஆழம் வரை பரவியுள்ளது. டிரினிடாட் உலகத்தில் அதிகமாக ஆஸ்பால்ட் கிடைக்கும் இடங்களில் ஒன்று. சாலை போடப்பயன்படும் `தார் என்று நாம் வழங்கும் சொல் இதையே குறிக்கிறது. பெட்ரோலியம் தாதுவைக் காய்ச்சி வடித்தால் அடியில் தங்கும் உபபொருளும் இதுவே. இம்மாதிரியாகக் கிடைக்கும். ஆஸ்பால்ட் அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தியாகிறது.

கருங்கல்லை உடைத்துத் தூளாக்கி அத்துடன் சுமார் 12-ல் ஒரு பங்கு ஆஸ்பால்ட்டை கலக்கிறார்கள். சுமார் 2000 C அளவிற்குச் சூடுபடுத்தி நன்றாகக் கலந்து சாலையின் மேல் பரப்பி உருளையைக் கொண்டு அமுக்கிச் சமப்படுத்துகிறார்கள். குளிர்ந்தவுடன் சாலை பயன்படுத்தத் தயாராகிவிடுகிறது.

ஆஸ்பால்ட் நீரை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது. எனவே கூடாரங்களின் மீதும் வண்டிகளின் மீதும் போர்த்தும் தார்ப்பாலின் போர்வைகள் ஆஸ்பால்டைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீர் ஒழுக்கு இல்லாமலிருக கூரைகளின் மீது ஆஸ்பால்டை பூசுவதும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனிய நகரத்து சாலைகளில் ஆஸ்பால்ட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்பால்ட்&oldid=4014229" இலிருந்து மீள்விக்கப்பட்டது