செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 01°38′26″N 103°40′13″E / 1.64056°N 103.67028°E / 1.64056; 103.67028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Senai International Airport
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
 • ஐஏடிஏ: JHB
 • ஐசிஏஓ: WMKJ
  Senai Airport is located in மலேசியா
  Senai Airport
  Senai Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்எம்.எம்.சி. கார்ப்பரேசன் பெர்காட்
(MMC Corporation Berhad)
இயக்குனர்செனாய் வானூர்தி நிலைய முனையச் சேவைகள் நிறுவனம்
(Senai Airport Terminal Services Sdn Bhd)
சேவை புரிவதுஇசுகந்தர் மலேசியா
அமைவிடம்செனாய், கூலாய், ஜொகூர், மேற்கு மலேசியா
திறக்கப்பட்டது1974
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL127 ft / 39 m
ஆள்கூறுகள்01°38′26″N 103°40′13″E / 1.64056°N 103.67028°E / 1.64056; 103.67028
இணையத்தளம்www.senaiairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16/34 3,800 12,467 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள் போக்குவரத்து1,096,517 ( 74.3%)
சரக்கு டன்கள்10,120 ( 31.1%)
வானூர்தி போக்குவரத்து21,481 ( 63.2%)
மூலம்: Sources: Aeronautical Information Publication Malaysia[1][2]

செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: JHBஐசிஏஓ: WMKJ); (ஆங்கிலம்: Senai International Airport அல்லது Sultan Ismail International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Senai; சீனம்: 士乃国际机场) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கூலாய் மாவட்டத்தில் செனாய் நகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

இந்த வானூர்தி நிலையம், ஜொகூர் மாநில மக்களுக்கும்; தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் வாழும் மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தீபகற்ப மலேசியாவின் ஐந்தாவது பரபரப்பான வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[3]

வரலாறு[தொகு]

இந்த வானூர்தி நிலையம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. செனாய் வானூர்தி நிலையத்து முனையச் சேவை நிறுவனத்தினால் (Senai Airport Terminal Services Sdn Bhd - SATSSB) நிர்வகிக்கப் படுகிறது.

செனாய் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த, 50 ஆண்டு சலுகையின் கீழ், மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனத்திடம் இருந்து செனாய் வானூர்தி நிலையத்து முனையச் சேவை நிறுவனம் எடுத்துக் கொண்டது.

3,800-மீட்டர் ஓடுபாதை[தொகு]

செனாய் வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளையும் 80,000 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது.

4E தரத்தில் 3,800-மீட்டர் ஓடுபாதை கொண்ட செனாய் வானூர்தி நிலையத்தினால், ஏர்பஸ் ஏ350 (Airbus A350 XWB); போயிங் 777 (Boeing 777) மற்றும் அன்டோனோவ் ஆன்-124 (Antonov An-124) சரக்கு விமானம் போன்ற பெரிய ஜெட் விமானங்களையும் கையாள முடியும்.[4]

விரிவாக்கம்[தொகு]

தற்போது, செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நான்கு விமான நிறுவனங்கள் 12 உள்நாட்டு இடங்களுக்குச் சேவைகள் செய்கின்றன. 2019-ஆம் ஆண்டில், செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் மொத்தம் 4,254,922 பயணிகளையும் 15,010 டன் சரக்குகளையும் கையாண்டது.[5]

இந்தச் செனாய் பன்னாட்டு வானூர்தி நிலைய முனையம் 2023-க்குள் 5 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் விரிவுபடுத்தப் படுகிறது.

வானூர்திச் சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் ஏசியா அலோர் ஸ்டார், பிந்துலு, ஹோ சி மின் நகரம், ஈப்போ, ஜகார்த்தா-சுகார்ணோ-ஹத்தா, கோத்தா பாரு, கோத்தா கினாபாலு, கோலாலம்பூர்-சிப்பாங், கூச்சிங், லங்காவி, மிரி, பினாங்கு, சிபு, தாவாவ்
பயர்பிளை கோலாலம்பூர்–சுபாங், பினாங்கு
இந்தோனேசியா ஏர்ஏசியா ஜகார்த்தா-சுகார்ணோ-ஹத்தா, சுராபாயா
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங் (8 சூன் 2022 தொடக்கம்), லங்காவி
மலின்டோ ஏர் கோலாலம்பூர்–சுபாங்
எஸ்கேஎஸ் ஏர்வே தியோமான்
தாய்லாந்து ஏர்ஏசியா பாங்காக்-டோன் முவாங்

புள்ளிவிவரங்கள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள் [6]
ஆண்டு
பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
விமானம்
நகர்வுகள்
விமானம்
% மாற்றம்
2009 1,316,082 N/A N/A
2010 1,235,400 6.1 6,239 11,934
2011 1,337,562 8.3 5,438 12.8 15,167 27.1
2012 1,376,383 3.0 3,149 42.1 12,506 17.4
2013 1,989,979 44.6 3,443 9.3 37,998 203.8
2014 2,325,816 16.9 4,934 43.3 42,976 13.1
2015 2,581,966 11.1 5,272 6.9 41,892 2.5
2016 2,828,074 12.1 6,245 18.0 42,744 2.0
2017 3,124,799 10.5 7,614 21.9 46,497 3.0
2018 3,522,519 12.7 9,691 27.0 52,030 12.0
2019 4,270,144 21.2 14,694 51.6 58,313 12.1
2020 1,096,517 74.3 10,120 31.1 21,481 63.2
மூலம்: மலேசியப் போக்குவரத்துத்துறை அமைச்சு[7]

உள்நாட்டுச் சேவைகள்[தொகு]

செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2022 மே மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள் (வாரம்) வானூர்தி நிறுவனங்கள்
1 கோலாலம்பூர்–சுபாங், சிலாங்கூர் 70 FY, OD
2 பினாங்கு, பினாங்கு 39 AK, FY
3 கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் 30 AK, MH
4 சர்வாக் கூச்சிங், சரவாக் 20 AK, MH
5 கோத்தா கினபாலு, சபா 14 AK
6 லங்காவி, கெடா 13 AK, MH
7 சர்வாக் சிபு, சரவாக் 7 AK
8 ஈப்போ, பேராக் 5 AK
7 அலோர் ஸ்டார், கெடா 4 AK
8 தாவாவ், சபா 4 AK
9 கோத்தா பாரு, கிளாந்தான் 3 AK
10 சர்வாக் மிரி, சரவாக் 3 AK
11 சர்வாக் பிந்துலு, சரவாக் 3 AK

வெளிநாட்டுச் சேவைகள்[தொகு]

செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் வெளிநாட்டுச் சேவைகள் (2022 மே மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள் (வாரம்) வானூர்தி நிறுவனங்கள்
1 தாய்லாந்து பாங்காக்-டோன் முவாங், தாய்லாந்து 7 FD
2 வியட்நாம் ஹோ சி மின் நகரம், வியட்நாம் 3 AK
3 இந்தோனேசியா ஜகார்த்தா-சுகார்ணோ-ஹத்தா, இந்தோனேசியா 3 QZ, AK
4 இந்தோனேசியா சுராபாயா, இந்தோனேசியா 3 QZ

மேற்கோள்கள்[தொகு]

 1. WMKJ – JOHOR BAHRU/SENAI INTERNATIONAL பரணிடப்பட்டது 2013-12-28 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
 2. "Senai International Airport : About Senai Airport : Facts at a Glance". Senaiairport.com. Archived from the original on 3 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2012.
 3. "Ranked the fifth busiest and one of the fastest growing airport in Malaysia, Senai International Airport serves as the aviation gateway for Iskandar Malaysia and the southern region, dedicated to providing routes and services essential to cater the needs of both tourism and business traveller". mmc.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 May 2022.
 4. "This airport is located approximately 32 km north-west of the Johor Bahru city centre. This airport was opened in 1974 and is capable to handle up to 4 million passengers and 80,000 tonnes of cargo per annum". Causeway Link. 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 May 2022.
 5. "The Senai International Airport is able to handle up to 4.5 million passengers and 100,000 tonnes of cargo per annum". பார்க்கப்பட்ட நாள் 15 May 2022.
 6. Senai Airport Terminal Services Sdn Bhd
 7. "Malaysia Transportation Statistics 2020" (PDF). Ministry of Transport. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.