கூடாட்

ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடாட் நகரம்
Kudat Town
சபா
Kudat town centre
கூடாட் நகரின் மையப் பகுதி
Location of கூடாட் நகரம்
கூடாட் is located in மலேசியா
கூடாட்
      கூடாட் நகரம்
ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுகூடாட் பிரிவு
மாவட்டம்கூடாட் மாவட்டம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசப்தீன் இப்ராகிம்
பரப்பளவு
 • மொத்தம்1,287 km2 (497 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்29,025
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு89050
மலேசியத் தொலைபேசி+60(88) 61XXXX; +60 (88) 61XXXX; (88) 62XXXX
மலேசிய வாகனப் பதிவெண்கள்SD

கூடாட் என்பது (மலாய்: Pekan Kudat; ஆங்கிலம்: Kudat Town; சீனம்: 博福特) மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 190 கி.மீ. தொலைவில், கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது. அத்துடன் போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.[1]

சபா மாநிலத்திலேயே ருங்குசு (Rungus) இனக் குழுவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூடாட் நகரம் மிகப் பெரிய நகரமாகும். ருங்குசு இனக் குழுவினரின் முக்கியக் கலாசார மையமாகவும் கூடாட் நகரம் விளங்குகிறது.[2]

கூடாட் நகரத்தில் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) மிகுதியாக வாழ்கிறார்கள். இவர்களைத் தவிர பிசாயா பூர்வீக இனத்தவர்களும் உள்ளார்கள். சீனர்கள் முதன்முதலில் சபாவில் குடியேறிய இடமாகவும் கூடாட் விளங்குகிறது.[2]

கூடாட் பிரிவின் மக்கள்தொகை[தொகு]

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கூடாட் பிரிவின் மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6 விழுக்காடு ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் (Rungus) மக்கள் வாழ்கின்றனர்.[3]

வரலாறு[தொகு]

1752-ஆம் ஆண்டில், ஒரு பிரித்தானியக் கடற்படை மணிலாவை ஸ்பானிய காலனித்துவத்தில் இருந்து தற்காலிகமாகக் கைப்பற்றியது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சூலு சுல்தானையும் விடுவித்தது.

அதற்கு நன்றிக் கடனாக, பாங்கி (Banggi) மற்றும் பலம்பாங்கான் (Balambangan) தீவுகளுடன்; போர்னியோவின் வடக்குக் கடற்கரையின் ஒரு பகுதியையும் சூலு சுல்தான் பிரித்தானியருக்குக் கொடுத்தார்.[1]

புதிய குடியேற்றம்[தொகு]

1881-ஆம் ஆண்டு கூடாட் நகரத்தில் பிரித்தானியர்களின் குழுவினர், சில புரூணை மலாய்க்காரர்களுடன் கூடாட் பகுதியில் தரை இறங்கினர். கூடாட் பகுதியில் இருந்த நிலத்தைச் சுத்தம் செய்தனர். 1882-ஆம் ஆண்டு, போர்னியோ வடக்கு போர்னியோ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

கூடாட் நகரத்தைப் பிரித்தானியர்கள், அவர்களின் புதிய குடியேற்றத்தின் தலைமையகமாக மாற்றி அமைத்தார்கள். அதற்கு அவர்கள் பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ என்று பெயர் வைத்தார்கள்.[1]

பொது[தொகு]

கூடாட் பிரிவிற்குள் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். அதுவே முக்கியப் போக்குவரத்து மையம் ஆகும். கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது.

சபாவில் உள்ள மற்ற நகரங்களான கோத்தா கினபாலு; பெனாம்பாங்; தாவாவ்; பாப்பார்; தெனோம் போன்ற நகரங்களைப் போலவே, கூடாட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்தே சீன ஹக்கா மக்கள் மிகையாக வாழ்ந்து வருகின்றனர்.

சுத்தமான கடற்கரைகள்[தொகு]

கூடாட் அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. சபா மாநிலத்தில் மாசு அடையாத கடற்கரைகள் இந்தக் கூடாட் நகரில்தான் உள்ளன.

பாக் பாக் (Bak Bak), பாசிர் பூத்தே, கலாம்புனியான் (Kalampunian), தொருங்குங்கான் (Torungkungan) ஆகியவை மிகவும் பிரபலமான கடற்கரைகளாகும்.

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கூடாட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடாட்&oldid=3637584" இருந்து மீள்விக்கப்பட்டது