மலேசியா எயர்லைன்சு
மலேசியா எயர்லைன்ஸ் ஆங்கிலம்: Malaysia Airlines; மலாய்: Penerbangan Malaysia) என்பது) மலேசியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலும் உள்ள 100-க்கும் அதிகமான இடங்களுக்கு விமானச் சேவைகளை நடத்தும் இந்த நிறுவனத்தின் பிரதான தளம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்; பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய விமான நிலையங்களையும் இந்த நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது.
இந்த நிறுவனம் ஸ்கைரக்ஸ் நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கும் ஆகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
- மலேசிய வான்வழி (ஆங்கிலம்)/MUL