செண்டராட்டா வானூர்தி நிலையம்
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | தனியார் | ||||||||||
இயக்குனர் | யுனைடெட் பிளான்டேசன் (United Plantations) | ||||||||||
சேவை புரிவது | தெலுக் இந்தான் | ||||||||||
அமைவிடம் | பாகன் டத்தோ மாவட்டம் பேராக், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 56 ft / 17 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°53′59″N 100°56′55″E / 3.89972°N 100.94861°E | ||||||||||
இணையத்தளம் | https://web.archive.org/web/20120405204337/ http://www.bernamriver.com/ | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
செண்டராட்டா வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMAJ); (ஆங்கிலம்: Jendarata Airport மலாய்: Lapangan Terbang Jendarata) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District), ஊத்தான் மெலிந்தாங் (Hutan Melintang) நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[2]
யுனைடெட் பிளான்டேசன் (United Plantations) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமான நிலையம்; அந்தத் தோட்ட நிறுவனத்தினாலேயே இயக்கப் படுகிறது. இந்த நிறுவனம் 1906-ஆம் ஆண்டில் தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாகன் டத்தோ பகுதிகளில் ரப்பர் தோட்டங்களை வாங்கத் தொடங்கியது.
பொது
[தொகு]செண்டராட்டா வானூர்தி நிலையத்தில் சிறு விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். நில வழியாகப் பயணம் செய்வதை விட, சிறு விமானங்கள் மூலமாகப் பயணம் செய்வது பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் வசதியாக அமையும் என்பதால் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டது.[3]
இந்த விமான நிலையத்திற்குள் திட்டமிடப்பட்ட விமானப் பயணங்கள் எதுவும் இல்லை; தனியார் விமானங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. அனைத்து விமானப் பயண நடவடிக்கைகளுக்கும் யுனைடெட் பிளான்டேசன் நிறுவனத்தின் முன் அனுமதி தேவை.
செண்டராட்டா தோட்டம்
[தொகு]செண்டராட்டாவில் யூனிடாட்டா (Unitata) மற்றும் யுனைடெட் பிளான்டேசன் (United Plantation Sdn Bhd) நிறுவனங்களுக்குச் சொந்தமான செம்பனை தொழிற்சாலைகள் உள்ளன.
செண்டராட்டா தோட்டம் ஒரு பெரிய செம்பனை தோட்டம் ஆகும். இந்தத் தோட்டம் ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகில் உள்ளது. 1906-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ AIP Malaysia: Index to Aerodromes at Department of Civil Aviation Malaysia
- ↑ United Plantations : History பரணிடப்பட்டது 2020-08-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 109 years Jendarata estate United Plantations & Palm Oil.
- ↑ Unitata Berhad Jendarata Estate.