உள்ளடக்கத்துக்குச் செல்

மிரி வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 04°19′31″N 113°59′18″E / 4.32528°N 113.98833°E / 4.32528; 113.98833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரி வானூர்தி நிலையம்
Miri Airport

மிரி விமான நிலையத்தின் ஓடுபாதை
 • ஐஏடிஏ: MYY
 • ஐசிஏஓ: WBGR
  MYY WBGR is located in மலேசியா
  MYY WBGR
  MYY WBGR
  மிரி வானூர்தி
  நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்கசானா நேசனல்
Khazanah Nasional
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுமிரி; சரவாக், மலேசியா)
அமைவிடம்மிரி; சரவாக், கிழக்கு மலேசியா
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL10 ft / 3.048 m
ஆள்கூறுகள்04°19′31″N 113°59′18″E / 4.32528°N 113.98833°E / 4.32528; 113.98833
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 2,745 9,006 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள்
போக்குவரத்து
876,402 ( 64.0%)
சரக்கு டன்கள்5,345 ( 1.3%)
வானூர்தி
போக்குவரத்து
25,804 ( 41.0%)

மிரி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MYYஐசிஏஓ: WBGR); (ஆங்கிலம்: Miri Airport; மலாய்: Lapangan Terbang Miri) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மிரி நகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

இந்த விமான நிலையம் மலேசியாவில் ஆறாவது விறுவிறுப்பான விமான நிலையமாகவும்; சரவாக்கில் இரண்டாவது விறுவிறுப்பான விமான நிலையமாகவும் விளங்குகிறது.

இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் மிரி பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது.

2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 876,402. அதே வேளையில் 5,345 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. மிரி நகர மையத்தில் இருந்து சுமார் 9.5 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் அமைந்துள்ளது.

பொது[தொகு]

மாஸ் விங்ஸ் சேவையில் மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம்

மாஸ் விங்ஸ் (MASWings) டுவின் ஓட்டர் (Twin Otter) ரக விமானங்களின் சேவைகளுக்கு மிரி விமான நிலையம் ஒரு முக்கிய மையமாக உள்ளது. பிளை ஏசியான் எக்ஸ்பிரஸ் (FlyAsianXpress) எனும் விமானச் சேவை நிறுவனம், மிரியில் உள்ள பெரும்பாலான கிராமப்புற உள்நாட்டு இடங்களுக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.

சபா, சரவாக் மாநிலங்களுக்கு மத்தியிலும்; புரூணை நாட்டு எல்லைக்கு அருகிலும்; மிரி நகரம் இருப்பதால், கிராமப்புற விமானச் சேவைகளுக்கு ஏற்ற மையமாகவும், சரவாக் மாநிலத்திற்கான முக்கிய நுழைவாயிலாகவும் மிரி வானூர்தி நிலையம் அமைகின்றது.

இரண்டாவது பெரிய விமான நிலையம்[தொகு]

மிரி வானூர்தி நிலையம்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்த நிலையில், சரவாக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இதன் முனையத் தளம் 16,448 மீ² பரப்பளவு கொண்டது.[3]

மலேசிய சிவில் விமானத் துறையும் (Department of Civil Aviation); மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனமும் (Malaysia Airports Holdings Berhad); மிரி வானூர்தி நிலையத்தை ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் திட்டமிடப்பட்ட சில வெளிநாட்டு விமானச் சேவைகளை இந்த நிலையம் வழங்கி வருகிறது.

வரலாறு[தொகு]

லுத்தோங் வானூர்தி நிலையம்[தொகு]

மிரி வானூர்தி நிலையத்தின் சரக்கு சேமிப்புக் கிடங்கு

மிரி வானூர்தி நிலையத்தின் பழைய பெயர் லுத்தோங் வானூர்தி நிலையம் (Lutong Airport). மிரி நகரத்தின் துணை நகரமான லுத்தோங் நகரில் 1940-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

இது ஒரு தனியார் வானூர்தி நிலையம். 'அரச டச்சு செல்' (Royal Dutch Shell) எனும் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இரன்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படைகளின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. 1954-ஆம் ஆண்டில் சீரமைக்கப் பட்டது. 1980-ஆம் ஆண்டுகள் வரை லுத்தோங் வானூர்தி நிலையம் எனும் பெயரில் செயல்பட்டது.[4]

மிரி வானூர்தி நிலையம்[தொகு]

மிரி நகரத்தின் மக்கள்தொகை பெருகியதால், விமானப் போக்குவரத்து எதிர்ப்பார்ப்பைக் குறைக்க, ஒரு பெரிய வானூர்தி நிலையம் தேவைப்பட்டது. ஒரு புதிய தளத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நகர மையத்தின் தென்கிழக்கில் ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் மிரி வானூர்தி நிலையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.

வானூர்திச் சேவைகள்[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
ஏர்ஏசியா ஜொகூர் பாரு, கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங், சிங்கப்பூர்
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங்
மலேசியா எயர்லைன்சு
(மாஸ் விங்ஸ்)
பாகெலாலான், பாரியோ, பிந்துலு, லபுவான், லாவாஸ், லிம்பாங், லோங் ஆகா, லோங் பங்கா, லோங் லேலாங், லோங் செரிடான், மருடி, முக்கா, முலு, சிபு
சுகூட் சிங்கப்பூர்

சரக்குச் சேவை[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
உலக சரக்கு விமானச் சேவை
(World Cargo Airlines)
கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங்

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 1,377,312 3,881 43,460
2004 1,509,684 9.6 4,721 21.6 45,269 4.2
2005 1,594,855 5.6 5,392 14.2 42,865 5.3
2006 1,559,379 2.2 4,080 24.3 42,680 0.4
2007 1,454,167 6.7 3,564 12.6 35,502 16.8
2008 1,537,840 5.7 4,146 16.3 38,172 7.5
2009 1,620,345 5.4 3,921 5.4 41,996 10.0
2010 1,694,915 4.6 6,770 72.7 41,682 0.7
2011 1,856,626 9.5 8,198 21.1 43,707 4.9
2012 2,018,415 8.7 9,879 20.5 45,127 3.2
2013 2,223,172 10.1 9,800 0.8 47,585 5.4
2014 2,363,080 6.3 8,029 18.1 49,204 3.4
2015 2,249,206 4.8 7,292 9.2 47,733 3.0
2016 2,200,546 2.2 7,270 0.3 45,554 4.6
2017 2,188,048 0.6 4,872 33.0 40,692 0.7
2018 2,350,700 7.4 5,054 3.7 44,855 10.2
2019 2,439,492 3.8 5,278 4.4 43,752 2.5
2020 876,402 64.0 5,345 1.3 25,804 41.0
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[5]

உள்நாட்டுச் சேவைகள்[தொகு]

மிரி வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2019 சூலை மாதம் - புள்ளிவிவரங்கள்)
தர
வரிசை
இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1 கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் 60 ஏர் ஏசியா, மலேசிய ஏர்லைன்சு
2 சர்வாக் கூச்சிங், சரவாக் 53 ஏர் ஏசியா, மலேசிய ஏர்லைன்சு
3 சர்வாக் லாவாஸ் 39 மாஸ் சுவிங்ஸ்
4 லபுவான் 35 மாஸ் சுவிங்ஸ்
5 சர்வாக் சிபு 28 மாஸ் சுவிங்ஸ்
6 சர்வாக் மருடி 24 மாஸ் சுவிங்ஸ்
7 சர்வாக் லிம்பாங் 21 மாஸ் சுவிங்ஸ்
8 கோத்தா கினபாலு 17 ஏர் ஏசியா
9 சர்வாக் பாரியோ 14 மாஸ் சுவிங்ஸ்
9 சர்வாக் பிந்துலு 14 மாஸ் சுவிங்ஸ்
9 சர்வாக் முலு 14 மாஸ் சுவிங்ஸ்
12 சர்வாக் முக்கா 7 மாஸ் சுவிங்ஸ்
13 ஜொகூர் ஜொகூர் பாரு 3 ஏர் ஏசியா

வெளிநாட்டுச் சேவைகள்[தொகு]

மிரி வானூர்தி நிலையத்தின் வெளிநாட்டுச் சேவைகள்
(2019 சூலை மாதம் - புள்ளிவிவரங்கள்)
தர
வரிசை
இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1  சிங்கப்பூர் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 7 ஏர் ஏசியா

சம்பவங்கள்[தொகு]

 • 1997 செப்டம்பர் 6-ஆம் தேதி, அரச புரூணை விமானம், மிரி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. இந்தத் துர்நிகழ்ச்சியில் விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. WBGR - MIRI at Department of Civil Aviation Malaysia
 2. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
 3. "Tender Briefing for Package Deal (Sarawak)" (PDF). MAHB. 15 March 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2019.
 4. "A legacy of World War II Japanese occupation, and bombed by allied forces multiple times during the Japanese occupation, this airstrip was then reconditioned and put into service by 1954, to actually became a destination of commercial passenger-carrying planes when Malayan Airways expanded its Borneo service air network, and remained so until Miri Airport runway was built". பார்க்கப்பட்ட நாள் 7 June 2022.
 5. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரி_வானூர்தி_நிலையம்&oldid=3649782" இலிருந்து மீள்விக்கப்பட்டது