சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கோலா திராங்கானு, மலேசியா | ||||||||||
அமைவிடம் | கோலா நெருஸ், திராங்கானு, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 21 ft / 6 m | ||||||||||
ஆள்கூறுகள் | 05°22′53″N 103°06′17″E / 5.38139°N 103.10472°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் அல்லது கோலா திராங்கானு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TGG, ஐசிஏஓ: WMKN); (ஆங்கிலம்: Sultan Mahmud Airport அல்லது Kuala Terengganu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Mahmud) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
இந்த வானூர்தி நிலையம், கோலா திராங்கானு மாநகர் மக்களுக்கும்; திராங்கானு மாநில மக்களுக்கும்; கிளாந்தான் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
1979-ஆம் ஆண்டில் இருந்து 1998-ஆம் ஆண்டு வரை திராங்கானு மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா ஷாவின் (Sultan Mahmud Al-Muktafi Billah Shah) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.
பொது
[தொகு]2008-ஆம் ஆண்டில், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் வழங்கியது. ஓடுபாதையை நீட்டிக்கவும், வானூர்தி நிலையத்தின் முனையத்தை மேம்படுத்தவும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது.[3]
ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த வானூர்தி நிலையத்த்தின் முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
போயிங் 747-400 வானூர்தி
[தொகு]சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா மற்றும் மதீனா வழியாக மக்காவிற்கு பயணிகளை கொண்டு செல்ல மலேசியா எயர்லைன்சு நிறுவனம் தாபோங் அஜி (Tabung Haji) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
2008 அக்டோபர் 11-ஆம் தேதி, மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் மிகப் பெரிய போயிங் 747-400 ரக வானூர்தி (Boeing 747-400) அங்கு தரையிறங்கியது. பெரிய ரக வானூர்திகள் சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தில் தரை இறங்க முடியும் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது.
வானூர்திச் சேவைகள்
[தொகு]சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்); கோத்தா கினாபாலு |
பயர்பிளை | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்) |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்) |
மலின்டோ ஏர் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்) |
உள்நாட்டுச் சேவைகள்
[தொகு]ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 394,240 | 160 | 5,508 | |||
2004 | 435,620 | 10.5 | 124 | ▼22.5 | 5,834 | 5.9 |
2005 | 419,475 | ▼3.7 | 94 | ▼24.2 | 5,622 | ▼ 3.6 |
2006 | 398,252 | ▼5.1 | 70 | ▼25.5 | 3,792 | ▼ 32.5 |
2007 | 430,800 | 8.2 | 47 | ▼32.8 | 8,781 | 131.6 |
2008 | 487,495 | 13.2 | 24 | ▼49.0 | 10,045 | 14.4 |
2009 | 523,619 | 7.4 | 24 | 9,875 | ▼ 1.7 | |
2010 | 520,611 | ▼0.6 | 50 | 108.3 | 10,959 | 11.0 |
2011 | 502,966 | ▼3.4 | 103 | 106.0 | 14,296 | 30.4 |
2012 | 550,831 | 9.5 | 147 | 42.7 | 12,809 | ▼ 10.4 |
2013 | 699,310 | 27.0 | 103 | ▼29.7 | 11,402 | ▼ 11.0 |
2014 | 842,651 | 20.5 | 148 | 43.8 | 14,057 | 23.3 |
2015 | 857,239 | 1.7 | 329 | 121.9 | 12,587 | ▼ 10.5 |
2016 | 900,218 | 5.0 | 253 | ▼ 23.1 | 12,066 | ▼ 4.1 |
2017 | 943,660 | 4.8 | 247 | ▼ 2.4 | 11,485 | ▼ 4.8 |
2018 | 894,737 | ▼ 5.2 | 363 | 47.1 | 10,637 | ▼ 7.4 |
2019 | 913,829 | 2.1 | 427 | 47.1 | 11,072 | 4.1 |
2020 | 302,280 | ▼ 66.9 | 173 | ▼ 59.4 | 5,519 | ▼ 50.2 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[4] |
இலக்குகள்
[தொகு]தரவரிசை | இலக்குகள் | பயணங்கள் (வாரம்) |
வானூர்தி நிறுவனங்கள் |
Note |
---|---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சுபாங் சிலாங்கூர் |
33 | FY, OD | |
2 | கோலாலம்பூர்–சிப்பாங் கோலாலம்பூர் |
26 | AK, MH | |
3 | கோத்தா கினபாலு, சபா | 2 | AK |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sultan Mahmud Airport, Kuala Terengganu at Malaysia Airports Holdings Berhad
- ↑ WMKN - KUALA TERENGGANU/SULTAN MAHMUD at Department of Civil Aviation Malaysia
- ↑ "Airport to be upgraded". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
- ↑ "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)