தியோமான் தீவு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 02°49′09″N 104°09′36″E / 2.81917°N 104.16000°E / 2.81917; 104.16000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோமான் தீவு
வானூர்தி நிலையம்
Tioman Airport
தெற்கு முனையின் அருகில் மலைகள் இருப்பதால், ஓடுபாதையை வடக்கில் இருந்து மட்டுமே அணுக முடியும்
  • ஐஏடிஏ: TOD
  • ஐசிஏஓ: WMBT
    TOD/WMBT is located in மலேசியா
    TOD/WMBT
    TOD/WMBT
    தியோமான் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய அரசாங்கம் (Government of Malaysia)
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Berhad)
சேவை புரிவதுதியோமான் தீவு
அமைவிடம்ரொம்பின் மாவட்டம், பகாங், மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL13 ft / 4 m
ஆள்கூறுகள்02°49′09″N 104°09′36″E / 2.81917°N 104.16000°E / 2.81917; 104.16000
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 992 [1] 3,255 தார்
புள்ளிவிவரங்கள் (2013)
பயணிகள் போக்குவரத்து56,054
பயணிகள் மாற்றம் 12-136.8%
வானூர்தி போக்குவரத்து2,089
நகர்வுகள் மாற்றம் 12-135.3%
Sources: Aeronautical Information Publication Malaysia[2]

தியோமான் வானூர்தி நிலையம் அல்லது தியோமான் தீவு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TODஐசிஏஓ: WMBT); (ஆங்கிலம்: Tioman Airport அல்லது Pulau Tioman; மலாய்: Lapangan Terbang Tioman;) என்பது மலேசியா, பகாங், ரொம்பின் மாவட்டம், தியோமான் தீவில் அமைந்து இருக்கும் வானூர்தி நிலையம் ஆகும். இது தெக்கேக் கிராமத்திற்கு (Kampung Tekek) அருகில் அமைந்துள்ளது.

சிறிய வானூர்திகள் மட்டுமே தியோமான் வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முடியும். அதனால் ஓர் இருக்கைக்கான செலவு, ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இந்தத் தீவில் இயங்கும் வானூர்தி நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதற்குச் சிரமப் படுகின்றன என அறியப்படுகிறது.[3]

பொது[தொகு]

வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை "ஒரு வழி" பாதை ஆகும், ஏனெனில் அருகிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக வானூர்திகள் வடக்குத் திசையில் இருந்து மட்டுமே தரையிறங்க முடியும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை தளமாகக் கொண்ட தனியார் விமானிகளுக்கு தியோமான் ஒரு பிரபலமான இடமாக விளங்குகிறது.

சிங்கப்பூர் செலேத்தார் வானூர்தி நிலையத்தில் (Seletar Airport) இருந்து ஒரு மணி நேரத்தில் தியோமான் தீவை அடைந்து விடலாம். வாகனப் போக்குவரத்தின் மூலமாக இந்தத் தீவை அடைவதற்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும்.

தியோமான் தீவு[தொகு]

பகாங் மாநிலத்தில், ரொம்பின் மாவட்டத்தில் தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு.

பகாங் மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்தத் தீவு 39 கி.மீ. நீளமும் 12 கி.மீ. அகலமும் கொண்டது. 1970-களில், உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகத் தியோமான் தீவை டைம் (பத்திரிகை) (Time Magazine) தேர்ந்தெடுத்தது.

கேளிக்கை நடவடிக்கைகள்[தொகு]

இந்தத் தீவில் ஏழு கிராமங்கள் உள்ளன. கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மிகப்பெரிய தீவு. அதிக மக்கள்தொகை கொண்டது. அடர்ந்த காடுகள் நிறைந்த இந்தத் தீவில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளது. மேலும் இந்தத் தீவு ஏராளமான பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

பிரபலமான நீரடி நீந்தல் (Scuba Diving; Snorkelling) போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. தீவைச் சுற்றி சுற்றுலா பயணிகளுக்காகப் பல ஓய்வு விடுதிகள் உள்ளன. இருப்பினும் தியோமான் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

வானூர்திச் சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
பெர்சாயா ஏர் முன்பதிவு: சுபாங் வானூர்தி நிலையம்
எசுகேசு வானூர்தி நிறுவனம் சுபாங் வானூர்தி நிலையம்[4]

விமானப் பயணங்கள்[தொகு]

அதிக அளவிலான பயணங்கள்
தரவரிசை இலக்குகள் நிகழ்வுகள் (வாரம்)
1 சிலாங்கூர், சுபாங் (SZB) 5

புள்ளிவிவரங்கள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு
பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 56,900 2,633 0
2004 57,957 1.8 2,447 7.1 0
2005 54,054 6.7 2,146 12.3 0
2006 57,559 6.5 2,256 5.1 0
2007 46,260 19.6 1,989 11.8 0
2008 48,767 5.4 2,141 7.6 0
2009 49,057 0.6 2,180 1.8 0
2010 54,056 10.2 0 0
2011 62,010 14.7 0 2,222
2012 60,141 3.0 73 2,205 0.8
2013 56,054 6.8 30 59.8 2,089 5.3
2014 9,217 83.6 15 50.0 1,019 51.2
2015 0 0 993 2.6
2016 0 0 733 26.2
2017 0 0 636 13.2
2018 0 0 470 26.1
2019 0 0 339 27.9
2020 0 0 132 61.1
Source: Malaysia Airports Holdings Berhad[5]

சான்றுகள்[தொகு]

  1. "CAAM AIP Tioman" (PDF). caam.gov.my. CAAM.
  2. AIP Malaysia: WMBT - Pulau Tioman at Department of Civil Aviation Malaysia
  3. "Call to upgrade airport, build roads".
  4. "New Malaysian carrier SKS Airways takes to the skies". www.apnews.com.
  5. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). Malaysia Airports. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]