உள்ளடக்கத்துக்குச் செல்

லோங் லேலாங் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°25′15.5″N 115°09′11.5″E / 3.420972°N 115.153194°E / 3.420972; 115.153194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங் லேலாங்
வானூர்தி நிலையம்
Long Lellang Airport

 • ஐஏடிஏ: LGL
 • ஐசிஏஓ: WBGF
  Long Lellang Airport is located in மலேசியா
  Long Lellang Airport
  Long Lellang Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலோங் லேலாங், சரவாக், மலேசியா
அமைவிடம்தெலாங் ஊசான், சிபு பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL1,400 ft / 426.72 m
ஆள்கூறுகள்03°25′15.5″N 115°09′11.5″E / 3.420972°N 115.153194°E / 3.420972; 115.153194
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 426 1,398 தார் (Bitumen)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

லோங் லேலாங் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LGLஐசிஏஓ: WBGF); (ஆங்கிலம்: Long Lellang Airport; மலாய்: Lapangan Long Lellang) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் சிபு பிரிவு, தெலாங் ஊசான் மாவட்டத்தில், லோங் லேலாங் கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

லோங் லேலாங் என்பது லோங் லெலாங் (Long Lelang) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த லோங் லேலாங் கிராமம் சரவாக் மாநிலத்தின் கெலாபிட் மலைப் பகுதியில் (Kelabit Highlands) உள்ள ஒரு சிறிய கிராமமாகும். மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 578 கி.மீ. (359 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[3]

பொது[தொகு]

லோங் லேலாங் கிராமத்தில் கெலாபிட் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இருப்பினும் பெனான் பழங்குடியினர் பலரும் உள்ளனர். லோங் லேலாங்கிற்கு அருகிலுள்ள அனைத்து கிராமங்களும் பெனான் கிராமங்கள். கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 100 குடும்பங்கள்.

இந்தக் கிராமத்தில் சில கடைகள் மற்றும் ஒரு தேவாலயம் உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப் பள்ளியான லோங் லேலாங் பள்ளியில் (SRK Long Lellang) பயில்கின்றனர்.[4]

லோங் லேலாங்கில் இருந்து கெலாபிட் மலைப்பகுதியில் உள்ள முக்கிய குடியேற்றமான பாரியோவிற்கு கால் நடையாகப் பயணிக்க நான்கு முதல் ஆறு நாட்கள் வரை பிடிக்கும்.[4]

சேவை[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
மருடி வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம்
பாரியோ வானூர்தி நிலையம்

மேற்கோள்கள்[தொகு]

 1. AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
 2. "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
 3. "Long Banga, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
 4. 4.0 4.1 "A Guide to Long Lellang". 2010-12-19.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]