பாகெலாலான் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°59′19″N 115°37′08″E / 3.98861°N 115.61889°E / 3.98861; 115.61889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகெலாலான் வானூர்தி நிலையம்
Ba'kelalan Airport
சரவாக்
IATA: BKMICAO: WBGQ
BKM WBGQ is located in மலேசியா
BKM WBGQ
BKM WBGQ
பாகெலாலான் வானூர்தி
நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவது பாகெலாலான்; சரவாக், மலேசியா
உயரம் AMSL 2900 அடி / {{{elevation-m}}} மீ
ஆள்கூறுகள் 03°59′19″N 115°37′08″E / 3.98861°N 115.61889°E / 3.98861; 115.61889
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
05/23 549 தார்
புள்ளிவிவரங்கள் (2015)
Passenger 3,435 ( 6.1%)
விமான நகர்வுகள் 328 ( 1.2%)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

பாகெலாலான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKMஐசிஏஓ: WBGQ); (ஆங்கிலம்: Ba'kelalan Airport (KIA); மலாய்: Lapangan Terbang Ba'kelalan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு, லாவாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

ஒன்பது கிராமங்களின் குழுமத்தை பாகெலாலான் என்று அழைக்கிறார்கள். இந்தக் கிராமக் குழுமம் மலிகான் பீட பூமியில் (Maligan Highlands); கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி (910 மீ) உயரத்தில் உள்ளது.

இந்தோனேசியா கலிமந்தான் எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும்; சரவாக் லாவாஸ் நகரத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[3]

பொது[தொகு]

பாகெலாலான் மலைப்பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் லுன் பாவாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான மருத்துவப் பொருட்கள்; மற்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லவும்; அங்கு உள்ளவர்களை பாரியோ; லாவாஸ்; மிரி நகரங்களுக்குக் கொண்டு வரவும் இந்த வானூர்தி நிலையம் பயன்படுகிறது. 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பாகெலாலான் எனும் பெயர் கெலாலான் நதியின் (Kelalan River) பெயரில் இருந்து உருவானது. ’பா’ எனும் முன்சொல் லுன் பவாங் மொழியில் ஈரமான நிலங்கள் என்று பொருள். இரண்டும் சேர்ந்து பாகெலாலான் என்று ஓர் இடத்தின் பெயரானாது.[4]

மலை உப்பு[தொகு]

குளிர்ந்த மலைக் காலநிலையில், இங்கு ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்ற பழ மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இங்கு அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் மலை உப்பு அருகிலுள்ள மலைகளில் இருந்து கிடைக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.[4][5]

சேவை[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
பாரியோ வானூர்தி நிலையம்; லாவாஸ் வானூர்தி நிலையம்; மிரி வானூர்தி நிலையம்

விபத்து[தொகு]

  • 2008 செப்டம்பர் 13-ஆம் தேதி. ஒரு விமானம் (DHC-6 Twin Otte) தரையிறங்கும் போது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பதினான்கு பேரும் உயிர் தப்பினர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://web.archive.org/web/20110722232921/http://aip.dca.gov.my/aip%20pdf/AD/AD4/Index%20To%20Aerodromes.pdf பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் AIP Malaysia: Index to Aerodromes at Department of Civil Aviation Malaysia
  2. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  3. Cecilia, Sman (31 December 2013). "Ba Kelalan ready to flaunt its rich treasures for VMY 2014". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 1 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180701074848/https://www.theborneopost.com/2013/12/31/ba-kelalan-ready-to-flaunt-its-rich-treasures-for-vmy-2014/. 
  4. 4.0 4.1 "About 1000 meters above sea level is the village of Ba'kelalan, located deep in the Kelabit Highlands of north eastern Sarawak Borneo. A total of nine villages are found spread out in the Maligan Highlands which is home to the ethnic Lun Bawang people here". Visit Sarawak 2022 #BounceBackBetter. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Aussie's burning love for Sarawak". New Straits Times. 29 August 1988. https://news.google.com/newspapers?nid=1309&dat=19880829&id=01lPAAAAIBAJ&pg=2958,3333469&hl=en. 
  6. "Aircraft overshoots runway in Ba'Kelalan". NST Online. 2008-09-13.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]