இலிம்பாங் பிரிவு
இலிம்பாங் பிரிவு | |
---|---|
Limbang Division | |
சரவாக் | |
சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | இலிம்பாங் பிரிவு |
நிர்வாக மையம் | லாவாசு |
உள்ளூர் நகராட்சி[1] | இலிம்பாங் மாவட்ட மன்றம் லாவாஸ் |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 81,152 |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள் | மலாய் (29%) லுன் பாவாங் (25%) இபான் (16%) சீனர்கள் (13%) பிசாயா (11%) பிடாயூ (1%) மெலனாவ் (1%) மற்றவர் (1%) வெளிநாட்டவர் (3) |
ஆளுநர் | அகமட் டெனி பவுசி |
இலிம்பாங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள்.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
பொது
[தொகு]இலிம்பாங் பிரிவின் பரப்பளவு 7,788 சதுர கிலோமீட்டர். சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு; மிரி பிரிவு மற்றும் பிந்துலு பிரிவு ஆகிய பிரிவுகளுக்குப் பிறகு, இலிம்பாங் பிரிவு நான்காவது பெரிய பிரிவு ஆகும்.
இலிம்பாங் பிரிவு மாவட்டங்கள்
[தொகு]இலிம்பாங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:[2]
நிலவியல்
[தொகு]இலிம்பாங் பிரிவு புரூணை நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் பிரிவின் மேற்கில் மேற்கு புரூணை; மற்றும் இலிம்பாங் மற்றும் லாவாசு மாவட்டங்களுக்கு நடுவில் தெம்புராங் மாவட்டம் உள்ளது.
அதே நேரத்தில் இலிம்பாங் பிரிவின் லாவாசு மாவட்டமும்; தெம்புராங் மாவட்டமும்; மலேசியாவின் மற்றொரு மாநிலமான சபா மாநிலத்திற்கு இடையே அமைந்து உள்ளன.
இந்தப் புவியியல் சூழ்நிலையினால், சாலை வழியாக லிம்பாங் பிரிவுக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியேறினாலும் குடியேற்றச் சோதனைகள் நடைபெறுகின்றன.
காட்சியகம்
[தொகு]இலிம்பாங் பிரிவின் குடிநுழைவு, சுங்கத்துறை முத்திரைகளின் படங்கள்
-
தெடுங்கான் சோதனைச் சாவடி முத்திரை
-
பண்டாருவான் சோதனைச் சாவடி முத்திரை
-
மெங்காலாப் சோதனைச் சாவடி முத்திரை
-
மெராபோக் சோதனைச் சாவடி முத்திரை
-
லிம்பாங் துறைமுகச் சோதனைச் சாவடி முத்திரை
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Laman Web Rasmi Majlis Daerah Limbang". limbangdc.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
- ↑ "Portal Rasmi Pentadbiran Bahagian Limbang". limbang.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Laman Web Majlis Daerah Limbang". Archived from the original on 11 January 2010.