லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 06°20′00″N 099°44′00″E / 6.33333°N 99.73333°E / 6.33333; 99.73333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம்
Langkawi International Airport
லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: LGK
  • ஐசிஏஓ: WMKL
    Langkawi International Airport is located in மலேசியா
    Langkawi International Airport
    Langkawi International Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்கசானா நேசனல்
Khazanah Nasional
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலங்காவி; பெர்லிஸ்
அமைவிடம்பாடாங் மாட்சிராட், லங்காவி, கெடா, மலேசியா
திறக்கப்பட்டது1974
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL16 ft / 5 m
ஆள்கூறுகள்06°20′00″N 099°44′00″E / 6.33333°N 99.73333°E / 6.33333; 99.73333
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
03/21 3,810 12,500 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள் போக்குவரத்து967,512 ( 67.2%)
சரக்கு டன்கள்457 ( 49.6%)
வானூர்தி போக்குவரத்து20,915 ( 53.1%)
மூலம்: official website[1]
AIP Malaysia[2]

லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LGKஐசிஏஓ: WMKL); (ஆங்கிலம்: Langkawi International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Langkawi) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

இந்த வானூர்தி நிலையம், கெடா மாநில மக்களுக்கும்; பெர்லிஸ் மாநில மக்களுக்கும்; வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.

2019-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2,946,150. அதே வேளையில் 44,599 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன.

பொது[தொகு]

மலேசியப் பெருநிலத்துக் கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தீபகற்ப மலேசியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாகக் கருதப்படுகிறது.

லீமா (LIMA) என்று அழைக்கப்படும் லங்காவி அனைத்துலகக் கடல் விண்வெளி கண்காட்சி (Langkawi International Maritime and Aerospace Exhibition) நடைபெறும் இடமாகவும் இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது.

கெடாவில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன:

1. லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம். (லங்காவி)

2. சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம். (அலோர் ஸ்டார்)

வரலாறு[தொகு]

1945-இல் ஜப்பானிய இராணுவத்தின் வானூர்தி நிலையமாகவும் பின்னர் பிரித்தானிய இராணுவத்திற்கான வானூர்தி நிலையமாகவும் செயல்பட்டது.

இந்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானம் 1991-இல் தொடங்கியது. 1993 டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. செப்டம்பர் 2018-இல், ஆண்டுக்கு 4 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த வானூர்தி நிலையத்தின் திறன்பாடு மேம்படுத்தப்பட்டது.

வானூர்திச் சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் ஏசியா ஈப்போ, ஜொகூர் பாரு, கோத்தா பாரு, கோலாலம்பூர்-சிப்பாங், கூச்சிங், பினாங்கு
பயர்பிளை கோலாலம்பூர்–சுபாங், பினாங்கு
மலேசியா எயர்லைன்சு ஜொகூர் பாரு, கோலாலம்பூர்-சிப்பாங்
மலின்டோ ஏர் ஜொகூர் பாரு, கோத்தா பாரு, கோலாலம்பூர்–சுபாங்

உள்நாட்டுச் சேவைகள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 726,817 287 8,931
2004 845,276 16.3 325 13.2 8,711 2.5
2005 830,334 1.8 449 38.1 8,964 2.9
2006 934,024 12.5 487 8.5 27,622 208.1
2007 1,122,911 20.2 524 7.6 43,234 56.5
2008 1,196,956 6.6 589 12.4 41,837 3.2
2009 1,359,271 13.6 572 2.9 39,815 4.8
2010 1,374,729 1.1 434 24.1 33,064 17.0
2011 1,504,697 9.4 646 48.8 31,482 4.8
2012 1,594,106 5.9 754 16.7 33,056 5.0
2013 1,946,440 22.1 630 16.4 29,309 11.3
2014 2,221,997 14.2 567 10.1 28,694 2.1
2015 2,336,177 5.1 647 14.1 30,853 7.5
2016 2,655,271 13.7 588 9.0 31,035 0.6
2017 2,767,707 4.2 759 29.0 31,863 2.7
2018 2,735,703 1.2 832 9.6 37,528 17.8
2019 2,946,150 7.7 907 9.0 44,599 18.8
2020 967,512 67.2 457 49.6 20,915 53.1
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[3]


லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2022 மே மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
Note
1 கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் 105 AK, MH
2 கோலாலம்பூர்–சுபாங், சிலாங்கூர் 55 FY, OD
3 பினாங்கு, பினாங்கு 21 AK, FY
4 ஜொகூர் பாரு, ஜொகூர் 5 AK
5 கோத்தா பாரு, கிளாந்தான் 8 AK, OD
6 ஈப்போ, பேராக் 3 AK

மேற்கோள்கள்[தொகு]

  1. "Malaysia Airports". Malaysiaairports.com.my.
  2. WMKL – LANGKAWI INTERNATIONAL பரணிடப்பட்டது 2013-12-28 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  3. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]