பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசிஏஓவின் கொடி

பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு ('ICAO airport code), சுருக்கமாக ஐசிஏஓ குறியீடு அல்லது ஐசிஏஓ அமைவிட அடையாளம், அமைவிடக் குறி என்றெல்லாம் குறிப்பிடப்படுவது உலகின் ஒவ்வொரு வானூர்தி நிலையத்தையும் அடையாளப்படுத்தும் வண்ணம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள நான்கு எழுத்துருக்களைக் கொண்ட குறியீடு ஆகும். இவற்றை இவ்வமைப்பு தனது ஆவணம் 7910இல் அமைவிடக் குறிகள் என வெளியிட்டுள்ளது.

ஐசிஏஓ குறிகளை வான் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் வான்வழி சேவையாளர்களும் வானோடிகளும் வானூர்தி நிலையங்களை அடையாளம் காணவும் தங்கள் பயணவழித் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை ஐஏடிஏ குறியீடுகளிலிருந்து வேறுபட்டவை; மூன்றெழுத்துக்களால் ஆன ஐஏடிஏ குறியீடுகள், எளிமையாகவும் வானூர்தி நிலையத்தின் பெயரை ஒத்தும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலண்டனின் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு ஐஏடிஏ குறியீடு LHR என்பதாகும். இதே வானூர்தி நிலையத்திற்கு ஐசிஏஓவின் குறியீடு EGLL ஆகும். சென்னை நிலையத்திற்கு ஐஏடிஏவின் குறியீடு MAA என்பதாகும். ஆனால் ஐசிஏஓவின் குறியீடு VOMM என்பதாகும். எனவே ஐஏடிஏ குறியீடுகள் பயணிகளுடன் தொடர்புடைய, வான்சேவையாளர்களின் பயண கால அட்டவணைகள், முன்பதிவுகள், பெட்டிப் பட்டைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐசிஏஓவின் குறியீடுகளை பொதுவாக வானோடிகள், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் போன்றோரும் வணிக வான்வழி பறப்பினை சுவடுதொடரவும் பயன்படுத்துகின்றனர். ஐசிஏஓ குறியீடுகள் உலகத்தை வலயங்களாகப் பிரித்து ஒவ்வொரு வலயத்திற்கும் இரு எழுத்துக்களை வழங்குகிறது. காட்டாக தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் VO என்ற குறியீடு வழங்கப்படுகிறது. பின்னதாக நாடு அடுத்து வானூர்தி நிலையம் என படிப்படியான பிரித்தலை உள்ளடக்கி உள்ளது.

ஐசிஏஓ குறியீடுகள் வானூர்தி நிலையங்களில் அமைந்திருந்தாலும் இல்லையெனினும் வேறுசில பறப்பியல் வசதிகளுக்காகவும் வழங்கப்படுகின்றன; வானிலை நிலையங்கள், பன்னாட்டு பறப்புச் சேவை நிலையங்கள், பரப்பு கட்டுப்பாடு மையங்கள் இவற்றில் சிலவாம்.

முன்னொட்டுகள்[தொகு]

முன்னொட்டு குறியீடு நாடு
A – மேற்கு தென் அமைதிப் பெருங்கடல்
AG சொலமன் தீவுகள்
AN நவூரு
AY பப்புவா நியூ கினி
B – கிறீன்லாந்து, ஐசுலாந்து, கொசோவோ
BG கிறீன்லாந்து
BI ஐசுலாந்து
BK கொசோவோ
C – கனடா
C கனடா
D – Eastern parts of மேற்கு ஆப்பிரிக்கா ,மாக்ரெப்
DA அல்சீரியா
DB பெனின்
DF புர்க்கினா பாசோ
DG கானா
DI கோட் டிவார்
DN நைஜீரியா
DR நைஜர்
DT துனீசியா
DX டோகோ
E – வடக்கு ஐரோப்பா
EB பெல்ஜியம்
ED செருமனி (குடிசார்)
EE எசுத்தோனியா
EF பின்லாந்து
EG ஐக்கிய இராச்சியம்
EH நெதர்லாந்து
EI அயர்லாந்து
EK டென்மார்க்
EL லக்சம்பர்க்
EN நோர்வே
EP போலந்து
ES சுவீடன்
ET செருமனி (படைத்துறை)
EV லாத்வியா
EY லித்துவேனியா
F – பெரும்பாலான நடு ஆப்பிரிக்காவும் தெற்கு ஆபிரிக்காவும், இந்தியப் பெருங்கடலும்
FA தென்னாப்பிரிக்கா
FB போட்சுவானா
FC கொங்கோ குடியரசு
FD சுவாசிலாந்து
FE மத்திய ஆபிரிக்கக் குடியரசு
FG எக்குவடோரியல் கினி
FH செயின்ட் எலினா, அசென்சியான் மற்றும் டிரிஸ்டான் டா குன்ஹா
FI மொரிசியசு
FJ பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
FK கமரூன்
FL சாம்பியா
FM கொமொரோசு, மயோட்டே, ரீயூனியன், மற்றும் மடகாசுகர்
FN அங்கோலா
FO காபோன்
FP சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி
FQ மொசாம்பிக்
FS சீசெல்சு
FT சாட்
FV சிம்பாப்வே
FW மலாவி
FX லெசோத்தோ
FY நமீபியா
FZ காங்கோ மக்களாட்சிக் குடியரசு
G – மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மாக்ரெப்பின் மேற்குப் பகுதிகள்
GA மாலி
GB காம்பியா
GC எசுப்பானியா (கேனரி தீவுகள்)
GE எசுப்பானியா (சியூடா and மெலில்லா)
GF சியேரா லியோனி
GG கினி-பிசாவு
GL லைபீரியா
GM மொரோக்கோ
GO செனிகல்
GQ மூரித்தானியா
GS மேற்கு சகாரா
GU கினி
GV கேப் வேர்ட்
H – கிழக்கு ஆபிரிக்கா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்கா
HA எதியோப்பியா
HB புருண்டி
HC சோமாலியா (சர்ச்சரவுள்ளதால் சோமாலிலாந்தும் உள்ளடக்கி)
HD சீபூத்தீ (also HF)
HE எகிப்து
HF சீபூத்தீ (also HD)
HH எரித்திரியா
HK கென்யா
HL லிபியா
HR ருவாண்டா
HS சூடான் மற்றும் தெற்கு சூடான்
HT தன்சானியா
HU உகாண்டா
K – தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்கா
K தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்க நாடு
L – தெற்கு ஐரோப்பா, இசுலேல் மற்றும் துருக்கி
LA அல்பேனியா
LB பல்காரியா
LC சைப்பிரஸ்
LD குரோவாசியா
LE எசுப்பானியா (mainland section and Balearic Islands)
LF பிரான்சு, செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் உள்ளடக்கி
LG கிரேக்கம் (நாடு)
LH அங்கேரி
LI இத்தாலி
LJ சுலோவீனியா
LK செக் குடியரசு
LL இசுரேல்
LM மால்ட்டா
LN மொனாக்கோ
LO ஆசுதிரியா
LP போர்த்துகல்
LQ பொசுனியா எர்செகோவினா
LR உருமேனியா
LS சுவிட்சர்லாந்து
LT துருக்கி
LU மல்தோவா
LV பாலத்தீனப் பகுதிகள்
LW மாக்கடோனியா
LX ஜிப்ரால்ட்டர்
LY செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ
LZ சிலோவாக்கியா
M – நடு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கரீபியனின் வட/மேற்குப் பகுதிகள்
MB துர்கசு கைகோசு தீவுகள்
MD டொமினிக்கன் குடியரசு
MG குவாத்தமாலா
MH ஹொண்டுராஸ்
MK யமேக்கா
MM மெக்சிக்கோ
MN நிக்கராகுவா
MP பனாமா
MR கோஸ்ட்டா ரிக்கா
MS எல் சால்வடோர்
MT எயிட்டி
MU கூபா
MW கேமன் தீவுகள்
MY பகாமாசு
MZ பெலீசு
N – பெரும்பாலான தென் பசுபிக்
NC குக் தீவுகள்
NF பிஜி, தொங்கா
NG கிரிபட்டி (Gilbert Islands), துவாலு
NI நியுவே
NL பிரான்சு (வலிசும் புட்டூனாவும்)
NS சமோவா, அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க சமோவா)
NT பிரான்சு (பிரெஞ்சு பொலினீசியா)
NV வனுவாட்டு
NW பிரான்சு (நியூ கலிடோனியா)
NZ நியூசிலாந்து, அன்டார்க்டிக்கா
O – பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் பெரும்பாலான தென்மேற்கு ஆசியா
(இசுரேல், துருக்கி மற்றும் தென் காகசு தவிர்த்து)
OA ஆப்கானித்தான்
OB பகுரைன்
OE சவூதி அரேபியா
OI ஈரான்
OJ ஜோர்தான் மற்றும் மேற்குக் கரை
OK குவைத்
OL லெபனான்
OM ஐக்கிய அரபு அமீரகம்
OO ஓமான்
OP பாக்கித்தான்
OR ஈராக்
OS சிரியா
OT கத்தார்
OY யெமன்
P – கிழக்கு அமைதிப் பெருங்கடல்
PA அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா மட்டும்)
PB அமெரிக்க ஐக்கிய நாடு (பேக்கர் தீவு)
PC கிரிபட்டி (கன்டன் வான்தளம், பீனிக்சுத் தீவுகள்)
PF அமெரிக்க ஐக்கிய நாடு (யூகோன் கோட்டை, அலாஸ்கா)
PG அமெரிக்க ஐக்கிய நாடு (குவாம், வடக்கு மரியானா தீவுகள்)
PH அமெரிக்க ஐக்கிய நாடு (ஹவாய் மட்டும்)
PJ அமெரிக்க ஐக்கிய நாடு (ஜான்ஸ்டன் பவளத்தீவு)
PK மார்சல் தீவுகள்
PL கிரிபட்டி (லைன் தீவுகள்)
PM அமெரிக்க ஐக்கிய நாடு (மிட்வே தீவு)
PO அமெரிக்க ஐக்கிய நாடு (ஓலிக்டாக் பாயின்ட், அலாஸ்கா)
PP அமெரிக்க ஐக்கிய நாடு (பாயின்ட் லே, அலாஸ்கா)
PT மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பலாவு
PW அமெரிக்க ஐக்கிய நாடு (வேக் தீவு)
R – தென் கொரியா and Western அமைதிப் பெருங்கடல்
RC சீனக் குடியரசு (தைவான்)
RJ ஜப்பான் (பெரும்பான்மையான நாடு)
RK தென் கொரியா
RO ஜப்பான் (ஓக்கினாவா மாகாணம் மற்றும் யோரோன்)
RP பிலிப்பீன்சு
S – தென் அமெரிக்கா
SA அர்கெந்தீனா
SB பிரேசில் (also SD, SI, SJ, SN, SS and SW)
SC சிலி (ஈஸ்டர் தீவு உள்ளிட்டு)
SD பிரேசில் (also SB, SI, SJ, SN, SS and SW)
SE எக்குவடோர்
SF ஐக்கிய இராச்சியம் (போக்லாந்து தீவுகள்)
SG பரகுவை
SI பிரேசில் (also SB, SD, SJ, SN, SS and SW)
SJ பிரேசில் (also SB, SD, SI, SN, SS and SW)
SK கொலொம்பியா
SL பொலிவியா
SM சுரிநாம்
SN பிரேசில் (also SB, SD, SI, SJ, SS and SW)
SO பிரெஞ்சு கயானா
SP பெரு
SS பிரேசில் (also SB, SD, SI, SJ, SN and SW)
SU உருகுவை
SV வெனிசுவேலா
SW பிரேசில் (also SB, SD, SI, SJ, SN and SS)
SY கயானா
T – கரீபியனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள்
TA அன்டிகுவா பர்புடா
TB பார்படோசு
TD டொமினிக்கா
TF பிரான்சு (குவாதலூப்பே, மர்தினிக்கு, Saint Barthélemy, Saint Martin)
TG கிரெனடா
TI அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க கன்னித் தீவுகள்)
TJ அமெரிக்க ஐக்கிய நாடு (புவேர்ட்டோ ரிக்கோ)
TK செயிண்ட் கிட்சும் நெவிசும்
TL செயிண்ட் லூசியா
TN Caribbean Netherlands, அருபா, பொனெய்ர், குராசோ, Sint Maarten
TQ ஐக்கிய இராச்சியம் (அங்கியுலா)
TR ஐக்கிய இராச்சியம் (மொன்செராட்)
TT டிரினிடாட் மற்றும் டொபாகோ
TU ஐக்கிய இராச்சியம் (பிரித்தானிய கன்னித் தீவுகள்)
TV செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
TX ஐக்கிய இராச்சியம் (பெர்முடா)
U – உருசியா மற்றும் சோவியத் உடைந்த நாடுகள்], பால்டிக் நாடுகள்] மற்றும் மல்தோவா தவிர்த்து
U உருசியா (except UA, UB, UD, UG, UK, UM and UT)
UA கசக்ஸ்தான், கிர்கிசுத்தான்
UB அசர்பைஜான்
UD ஆர்மீனியா
UG சியார்சியா
UK உக்ரைன்
UM பெலருஸ் and உருசியா (கலினின்கிராட் ஒப்லாஸ்து)
UT தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான்
V – தெற்கு ஆசியா (பாக்கித்தான் தவிர்த்து), நிலப்பகுதி தென்கிழக்காசியா, ஆங்காங், மக்காவு
VA இந்தியா (மேற்கு மண்டலம், மும்பை மையம்)
VC இலங்கை
VD கம்போடியா
VE இந்தியா (கிழக்கு மண்டலம், கொல்கத்தா மையம்)
VG வங்காளதேசம்
VH ஆங்காங்
VI இந்தியா (வடக்கு மண்டலம், தில்லி மையம்)
VL லாவோஸ்
VM மக்காவு
VN நேபாளம்
VO இந்தியா (தெற்கு மண்டலம், சென்னை மையம்)
VQ பூட்டான்
VR மாலைத்தீவுகள்
VT தாய்லாந்து
VV வியட்நாம்
VY மியான்மர்
W – கடற்பகுதி தென்கிழக்காசியா (பிலிப்பீன்சைத் தவிர்த்து)
WA இந்தோனேசியா (also WI, WQ and WR)
WB மலேசியா (கிழக்கு மலேசியா), புரூணை
WI இந்தோனேசியா (also WA, WQ and WR)
WM மலேசியா (மலேசியத் தீபகற்பம்)
WP கிழக்குத் திமோர்
WQ இந்தோனேசியா (also WA, WI and WR)
WR இந்தோனேசியா (also WA, WI and WQ)
WS சிங்கப்பூர்
Y – ஆஸ்திரேலியா
Y ஆஸ்திரேலியா
Z – கிழக்காசியா (ஆங்காங், சப்பான், மக்காவு, தென் கொரியா மற்றும் தைவான் தவிர்த்து)
Z சீன மக்கள் குடியரசு (except ZK and ZM)
ZK வடகொரியா
ZM மங்கோலியா

வெளி இணைப்புகள்[தொகு]