சமோவா
சுதந்திர சமோவா நாடு Independent State of Samoa Malo Saʻoloto Tutoʻatasi o Sāmoa | |
---|---|
குறிக்கோள்: "Fa'avae i le Atua Sāmoa" "சமோவா கடவுளில் இருந்து பெறப்பட்டது" | |
நாட்டுப்பண்: விடுதலையின் சின்னம் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ஆப்பியா |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (2001[1]) |
|
மக்கள் | சமோவர் |
அரசாங்கம் | ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு |
• அரசுத்தலைவர் | டுஃபுகா எஃபி |
• பிரதமர் | துலீப்பா மலீலகாவோய் |
சட்டமன்றம் | சட்டமன்றம் |
விடுதலை | |
• பெர்லின் உடன்பாடு | 14 சூன் 1889 |
• முத்தரப்பு உடன்பாடு | 16 பெப்ரவரி 1900 |
1 மார்ச் 1900 | |
• நியூசிலாந்து குடியேற்றம் | 30 ஆகத்து 1914 |
• கூட்டு ஆணை | 17 டிசம்பர் 1920 |
• ஐநா பொறுப்பு | 13 டிசம்பர் 1946 |
• மேற்கு சமோவா சட்டம் 1961 | 1 சனவரி 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 2,842 km2 (1,097 sq mi) (174வது) |
• நீர் (%) | 0.3 |
மக்கள் தொகை | |
• 2012 மதிப்பிடு | 194,320[1] (166வது) |
• 2006 கணக்கெடுப்பு | 179,186 |
• அடர்த்தி | 63.2/km2 (163.7/sq mi) (144வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2014 மதிப்பீடு |
• மொத்தம் | $0.995 பில்லியன்[2] |
• தலைவிகிதம் | $5,185[2] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2014 மதிப்பீடு |
• மொத்தம் | $825 மில்லியன்[2] |
• தலைவிகிதம் | $4,298[2] |
மமேசு (2014) | 0.702[3] உயர் · 105வது |
நாணயம் | தாலா (WST) |
நேர வலயம் | ஒ.அ.நே+13அ (ஒசநே+13:00) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+14 (ஒசநே+14:00) |
வாகனம் செலுத்தல் | இடதுஆ |
அழைப்புக்குறி | +685 |
இணையக் குறி | .ws |
சமோவா (Samoa) ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும். மக்கள் சமோவர் என்றழைக்கப்படுகின்றனர். ஆட்சிமொழி சமோயன் (Samoan), ஆங்கிலம். நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது. நியூசிலாந்திலிருந்து 1.1.1962 இல் விடுதலை பெற்றது. நாட்டின் மொத்தப் பரப்பளவு 2,831 கி.மீ. 11 மாவட்டங்கள் உள்ளன. நாணயம் தாலா(Tala) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் பிரதமர் துயிலேபா அயோனா சயிலெலெ மலியலெகாய் (Tuilaepa Aiono Sailele malielegaoi). கல்வியறிவு பெற்றவர்கள் 99.7%. சுதந்திரம் அடைவதற்குமுன் சமோவா மேற்கு சமோவா என்றும் ஜெர்மன் சமோவா என்றும் அழைக்கப்பட்டுவந்தது. 1962இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியர்கள் உபோலு (upolu) என்னும் பகுதியைக் கைப்பற்றி வணிகம் செய்யத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் வணிகம் மற்றும் துறைமுகத்தினை அமைத்தனர்.
20 ஆம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. 1920 ஆம் ஆண்டு மாயு (Mau) தலைவர்களில் ஒருவரான ஒலாஃப் ஃபிரடரிக் நெல்சன் (Olaf Frederick Nelson) நியூசிலாந்தின் ஆட்சியை எதிர்த்தார். நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்சன் மறையும் போது “Peace Samoa” என்று உரக்கக் கத்திக்கொண்டே மறைந்த நாள் Black Saturday என்று சமோவா மக்களால் அழைக்கப்படுகிறது. ஜூலை 1997 இல் மேற்கு சமோவா, சமோவா என்று மாற்றப்பட்டது. சாலையில் பயணம் செய்யும்போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும்.
நாடாளுமன்றம்
[தொகு]21 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். 49 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் செயல்படுகிறது. இதில் இருவரைத் தவிர 47 உறுப்பினர்கள் சமோவாவைச் சேர்ந்தவர்கள். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பெண்களும் நாடாளுமன்ற அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
பூமியின் அமைப்பியல்
[தொகு]சமோவா நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் ஹவாய் என்ற நாட்டிற்கும் நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
தட்பவெப்பநிலை
[தொகு]சமோவாவின் சராசரி வெப்பநிலை 26.50C . நவம்பர் முதல் ஏப்ரல்வரை மழைக்காலம் ஆகும். மேற்குப் பகுதியில் எரிமலை உள்ளது. இது சமோவாவின் வெப்பமான பகுதி எனப்படுகிறது.
வேளாண்மை
[தொகு]சமோவாவின் முக்கிய விளைச்சலாக தேங்காய் உள்ளது. தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், கொப்பரைத் தேங்காய், நோனி (Noni) (Juice of nonu fruit) ஆகியன விவசாயம் படித்தவர்களால் திறமையாகச் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. மேலும் வாழைப்பழம், கோகோ சாக்லெட், காபிக் கொட்டை, ரப்பர், அன்னாசிப் பழம் ஆகியவையும் விளைகின்றன.
பண்பாடு
[தொகு]நாகரிகம் பல ரூபங்களில் வளர்ந்திருந்தாலும் மக்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து மாறுபடவில்லை. இசைக்கேற்றவாறு உடலை அசைத்துக் கொண்டே கதை சொல்லும் சிவா, இசைக்கேற்றவாறு கைத்தட்டிக் கொண்டே ஆடுகின்ற ஃபாடயுபடி (Fa’ataupati) நடனங்கள் ஆண்களால் ஆடப்பட்டு வருகின்றன.
பச்சை குத்துதல்
[தொகு]ஆண்கள் முழங்காலுக்கு மேலே இடுப்பு வரையிலும் பெண்கள் முழங்காலிலிருந்து தொடைவரையிலும் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது.
விளையாட்டு
[தொகு]கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் Rugby Union என்றழைக்கப்படும் கால்பந்துக் குழு 1991 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றுவரும் புகழ்பெற்ற குழுவாகும். மேலும் குத்துச் சண்டை, குஸ்திச் சண்டை, உதைக்கும் குத்துச் சண்டை, சுமோ (Sumo) போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்
நீதியும் நீதிபதியும்
[தொகு]உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரித்தானிய மக்களின் சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டுவருகின்றன.
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]ஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Samoa". CIA – The World Factbook. Archived from the original on 2016-05-21. பார்க்கப்பட்ட நாள் 2015-12-31.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "Samoa". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
- ↑ "2015 Human Development Report Statistical Annex" (PDF). United Nations Development Programme. 2015. p. 13. பார்க்கப்பட்ட நாள் December 14, 2015.
- ↑ Staff/Agencies (31 December 2011). "Samoa skips Friday in time zone change". ABC Australia இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/64jx2ob6X?url=http://www.abc.net.au/news/2011-12-30/samoa-skips-friday-in-time-zone-change/3753350. பார்த்த நாள்: 16 January 2012.
- ↑ Chang, Richard S. (8 September 2009). "In Samoa, Drivers Switch to Left Side of the Road". The New York Times. http://wheels.blogs.nytimes.com/2009/09/08/in-samoa-drivers-switch-to-left-side-of-the-road/. பார்த்த நாள்: 23 May 2010.