வேக் தீவு
Appearance
வேக் தீவின் வரைபடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வடக்கு பசிபிக் |
ஆள்கூறுகள் | 19°18′N 166°38′E / 19.300°N 166.633°E |
மொத்தத் தீவுகள் | 3 |
உயர்ந்த புள்ளி | டக்ஸ் முனை, 20 அடி (6 மீ) |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்கா |
வேக் தீவு (Wake Island) என்பது வடக்கு பசிபிக் பெருங்கடலில் 12 மைல் நீள கரையைக் கொண்ட ஒரு பவளப் பாறைகளைக் கொண்ட தீவாகும். இது வேக் பவளத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இது ஹொனலுலுவில் இருந்து 3,700 கிமீ மெற்கிலும், குவாமில் இருந்து 2,430 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவிற்குச் செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது இங்கு ஐக்கிய அமெரிக்காவின் வான்படையினர் இங்கு நிலை கொண்டுள்ளனர். அத்துடன் அமெரிக்க இராணுவத்தினரின் ஏவுகணைத் தொழிற்சாலை ஒன்றும் இங்கு உள்ளது. இப்பவளப் பாறைத் திட்டுகளின் முக்கிய தீவான வேக் தீவு கிட்டத்தட்ட 9,800 அடி (3,000 மீட்டர்) நீள ஓடுபாதை உள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]- வேக் தீவின் புவியியல் பரணிடப்பட்டது 2006-09-13 at the வந்தவழி இயந்திரம்