நியுவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Niuē
நியுவே
நியுவேயின் கொடி நியுவேயின் சின்னம்
நாட்டுப்பண்
Ko e Iki he Lagi (நியுவே)
"கடவிள் சுவர்க்கத்தில்"
Location of நியுவேயின்
தலைநகரம் அலோபி
19°03′S 169°52′W / 19.050°S 169.867°W / -19.050; -169.867
பெரிய கிராமம் அக்குப்பு
ஆட்சி மொழி(கள்) நியுவே மொழி, ஆங்கிலம்
மக்கள் நியுவேயர்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
 -  அரசுத் தலைவர் எலிசபெத் II
 -  அரசியின் பிரதிநிதி சர் ஜெரி மட்டெபரே
 -  பிரதமர் டோக்கி டலாகி
இணை நாடு
 -  நியூசிலாந்துடன் இணைந்த சுயாட்சி அரசு 19 அக்டோபர் 1974 
 -  வெளியுறவுக் கொள்கையில் சுதந்திரம் ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்டது[1] 1994 
பரப்பளவு
 -  மொத்தம் 260 கிமீ² 
100 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  சூலை 2009 மதிப்பீடு 1,398[2] (221வது)
 -  அடர்த்தி 5.35/கிமீ² (n/a)
13.9/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
 கணிப்பீடு
 -  மொத்தம் $10 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம் நியூசிலாந்து டாலர் (அதிகாரபூர்வமற்ற நியுவே டாலர் பயன்பாட்டில் உள்ளது) (NZD)
நேர வலயம் (ஒ.ச.நே.-11)
இணைய குறி .nu
தொலைபேசி +683

நியுவே (Niue) என்பது தென் பசிபிக் பெருங்கடலில் பொலினீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும். இது பொதுவாக பொலினீசியாவின் பாறை என அழைக்கப்படுகிறது. சுயாட்சி உள்ள நாடாயினும் நியுவே நியூசிலாந்துடன் தன்னிச்சையாக இணைந்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு உரிமையுள்ள முடிக்குரியவரே நியுவேயின் அரசுத்தலைவரும் ஆவார். பெரும்பான்மையான வெளிநாட்டு தொடர்பாடல்கள் நியுவே சார்பாக நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது.

Coral chasm in Niue

நியுவே நியூசிலாந்திலிருந்து வடகிழக்குத் திசையாக 2,400 கிமீ தொலைவில் டொங்கா, சமோவா, குக் தீவுகள் என்பவற்றால் அமைக்கப்படும் முக்கோணத்துள் அமைந்துள்ளது. நியுவே மொழியும் ஆங்கிலமும் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவதோடு அன்றாட வணிக நடவடிக்கைளிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையினர் பொலினீசியராவார்கள். இந்நாட்டின் தலைநகர் அலோபி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியுவே&oldid=1827708" இருந்து மீள்விக்கப்பட்டது