துவாலு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துவாலு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: துவாலு மொழி:"Tuvalu mo te Atua" "Tuvalu for the Almighty" |
||||||
நாட்டுப்பண்: துவாலு மொழி: Tuvalu mo te Atua Tuvalu for the Almighty அரச வணக்கம்: அரசியைக் கடவுள் காப்பாற்றுவாராக |
||||||
தலைநகரம் | ஃபுனஃபூட்டி 8°31′S 179°13′E / 8.517°S 179.217°E | |||||
ஆட்சி மொழி(கள்) | துவாலு மொழி, ஆங்கிலம் | |||||
மக்கள் | துவாலுவன் | |||||
அரசாங்கம் | அரசியல் முடியாட்சி | |||||
• | அரசி | இரண்டாம் எலிசபெத் | ||||
• | ஆளுநர் | பிலோய்மியா டெலிட்டோ | ||||
• | தலைமை அமைச்சர் | அபிசாயி இயெலெமியா | ||||
விடுதலை | ||||||
• | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | அக்டோபர் 1, 1978 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 26 கிமீ2 (227வது) 10 சதுர மைல் |
||||
• | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள் தொகை | ||||||
• | ஜூலை 2005 கணக்கெடுப்பு | 10,441 (222வது) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2001 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $12.2 மில்லியன் (228வது) | ||||
• | தலைவிகிதம் | $1,100 (2000 தரவு) (மதிப்பிடப்படவில்லை) | ||||
நாணயம் | துவாலுவன் டொலர் ஆஸ்திரேலிய டொலர் (AUD) |
|||||
நேர வலயம் | (ஒ.அ.நே+12) | |||||
அழைப்புக்குறி | 688 | |||||
இணையக் குறி | .tv |
துவாலு (Tuvalu,IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.
இந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது.
வெளி இணைப்புகள்[தொகு]
- துவாலு அரச இணையத் தளம் - (ஆங்கில மொழியில்)
- துவாலுதீவுகள்.கொம் பரணிடப்பட்டது 2011-02-21 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)