அவுஸ்திரேலிய டொலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுஸ்திரேலிய டொலர்
$100$2
ஐ.எசு.ஓ 4217
குறிAUD (எண்ணியல்: 036)
சிற்றலகு0.01
மதிப்பு
துணை அலகு
 1/100சதம்
வங்கித்தாள்$5, $10, $20, $50, $100
Coins¢5, ¢10, ¢20, ¢50, $1, $2
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)அவுஸ்திரேலியா, கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள்
வெளியீடு
நடுவண் வங்கிஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி
 இணையதளம்www.rba.gov.au
மதிப்பீடு
பணவீக்கம்3.3% (அவுஸ்திரேலியா மட்டும்)
 ஆதாரம்அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, டிசம்பர் 2006
மூலம் இணைக்கப்பட்டதுடுவாலு டொலர், கிரிபட்டி டொலர் சமமாக

அவுஸ்திரேலிய டொலர் (ஆஸ்திரேலிய டாலர், Australian Dollar) 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்க டொலர்(அமெரிக்கா), யூரோ (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), யென் (ஜப்பான்), ஸ்டேர்லிங் பவுண்ட் (பிரித்தானியா), சுவிஸ் பிராங் (சுவிஸர்லாந்து) என்பன உள்ளன.

வரலாறு[தொகு]


முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் (இது பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்டிலிருந்து வேறுபட்டது) பதிலாக 1966ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நாணயத்திற்குப் பெயராக "த அவுஸ்திரல்", "த ஒஸ்", "தெ பூமர்", "த ரூ", "த கங்கா", "த ஈமு", "த டிகர்", "த க்விட்" மற்றும் "மிங்" (மென்ஸீசின் செல்லப்பெயர்)என்பன பரிந்துரைக்கப்பட்ட வேளையில், அப்போதைய முதலமைச்சர் ரொபேர்ட் மென்ஸீஸ் "த ரோயல்" எனும் பெயரைத் தன் சார்பில் முன்வைத்தார். மென்ஸீசின் செல்வாக்கால் 'த ரோயல்'எனும் பெயர் வைக்கப்பட்டு முதற்கட்ட வடிவமைப்புகளும் ஆயத்தப்படுத்தப்பட்டு அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் அச்சிடற் பிரிவால் பணமும் அச்சிடப்பட்டது. வழமையற்ற இப்பெயர் பிரபலமாகாததால் 'டொலர்' என்பதைப் பாவிக்கும் முகமாக 'த ரோயல்' எனும் பெயர் கை விடப்பட்டது.

அறிமுகப்படுத்தப்ப்ட்ட போது அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:

2 அவுஸ்திரேலிய டொலர் = 1 பவுண்ட்

1 அவுஸ்திரேலிய டொலர் = 10 ஷிலிங்.

1967ம் ஆண்டு ஸ்டெர்லிங் முறையை விட்டு அவுஸ்திரேலிய டொலர் விலகியது. அதனால் அமெரிக்க டொலருக்கெதிரான ஸ்டேர்லிங்கின் பெறுமதி குறைந்த போது அவுஸ்திரேலிய டொலர் பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கெதிரான தனது மாறா பணமாற்று வீதத்தை அது பேணியது.

நாணயங்கள்[தொகு]


5, 10, 20, 50 சதங்களும், 1 மற்றும் 2 டொலர்களும் நாணயமாக அச்சிடப்படுகின்றன. ஞாபகார்த்த நாணயங்களுக்காக 50 சத நாணயமே நீண்டகாலமாகத் தெரிவில் உள்ளது. இந்நாணயத்தில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள்:

1970 - தலைமை மாலுமி குக் அவுஸ்திரேலியக் கிழக்குக் கடற்கரையில் இடம் கண்டடைந்தமை

1977 - எலிசபெத் அரசியின் முடிசூட்டலின் வெள்ளிவிழா

1981 - சார்ள்ஸ்-டயானா திருமணம்

1982 - பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி

1988 - அவுஸ்திரேலிய இருநூற்றாண்டு

ஞாபகார்த்த நாணய வழக்கம் தற்போது 20சத மற்றும் 1 டொலர் நாணயங்களிலும் தொடரப்படுகிறது.

நாணய சேகரிப்பாளர்களுக்காக பல்வித மாழைகளில் வெவ்வேறு பெறுமதியுடைய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. செல்லுபடியாகும் பணமெனினும் இவை பொதுவில் பாவிக்கப்படுவதில்லை

குறிப்பு: 1990 - 1991ம் ஆண்டிலிருந்து 1, 2 சத நாணயங்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. பொருள்/சேவைகளுக்காக பணமாகக் கட்டணம் செலுத்தும் போது அவ் விலை அருகாமையிலுள்ள 5சதப் பெறுமதிக்கு நகர்த்தப்படும். (5சதம் அல்லது நிறுவன முடிவு)

உதாரணமாக: $6.92 என்பது $6.90 ஆகும், $23.78 என்பது $23.80 ஆகும்.

முதன்முதலாக நெகிழித்தாளால் (பாலிமர்) செய்த பணத்தாள்

வங்கித்தாள்கள்[தொகு]


$5, $10, $20, $50 மற்றும் $100 பெறுமதியான வங்கித்தாள்கள் அச்சிடப்படுகின்றன. $1( 10/- (10 ஷிலிங்)), $2(£1), $10(£5), $20(£10) போன்று ஐந்து டொலருக்கு மாறா மாற்றுவீதம் பவுண்டுடன் இருக்காததால் $5 வங்கித்தாள் 1967ம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மக்கள் டொலரின் தசம முறைக்குப் பழக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. $1 தாள் 1984 இலும் $2 தாள் 1988இலும் நாணயமாக்கப்பட்டன. பணவீக்கம் காரணமாக அதிக பெறுமதியுள்ள பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து $50, $100 டொலர் வங்கித்தாள்கள் முறையே 1973ம், 1984ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பலமங்களால் ஆன வங்கித்தாள் புழக்கம்

நோட்பிரிண்டிங் அச்சகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலமங்களாலான (Polymer) வங்கித்தாள்கள் (polymer banknotes) அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் குடியேற்றத்தின் இருநூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாகஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியால் 1988ம் ஆண்டு முதல் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. இவ்வகைத் தாள்கள் தொடர்ந்த பாவனையால் ஏனைய காகித வங்கித்தாள் போன்று பாதிப்படைவதில்லை. பாதுகாப்பானவையும் கூட. இவை அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியாலும் பொதுநலவாய அறிவியல் மற்றும் துறைசார் ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டு நோட்பிரிண்டிங்கினரால் அச்சிடப்படுகின்றன. இவ்வகை வங்கித்தாள்களைப் பாவித்த முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும்.

தற்போது சகல அவுஸ்திரேலிய வங்கித்தாள்களும் இவ்வகையானவை.

வடிவமைப்பு[தொகு]

ஆஸ்திரேலியாவே உலகில் உள்ள நாடுகளில் தான் வெளியிட்ட காசுகள் அனைத்தையும் பிளாசுடிக்கில் முதலில் வெளியிட்டது. இந்த முறையால் ஆஸ்திரேலியாவில் கள்ள நாணயம் அடித்தலும் கள்ள நோட்டு அடித்தலும் பெருமளவு இல்லாமல் போனது. மேலும் இது தாள் நோட்டுகளை விட சுத்தமாகவும் அதிக நாள் உபயோகிக்கக் கூடியதாவும் எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுதத் தக்கதாகவும் இருந்தது.

இந்த முறையை செய்த ஆஸ்திரேலிய இரிசர்வ் வங்கியின் பிரிவான "பணத்தை அச்சடிக்கும் ஆஸ்திரேலியா" என்னும் அமைப்பு பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கு இதைப் போன்ற பணத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது. அவற்றில் வங்காளதேசம், புரூணை, சிலி, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மெக்சிக்கோ, நேபாளம், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உருமேனியா, சமோவா, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்கும். பிற்பாடு வேற்று நாடுகளும் தங்களுக்கான பணத்தை இதே முறையில் அச்சிட அதிக ஆர்வம் காட்டின.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுஸ்திரேலிய_டொலர்&oldid=3768252" இலிருந்து மீள்விக்கப்பட்டது