பெப்ரவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
<< பெப்ரவரி 2020 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
MMXX

பெப்ரவரி அல்லது பிப்ரவரி அல்லது பெப்புருவரி என்பது கிரெகொரியின் நாட்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய மாதம் ஆகும். இம்மாதமானது நெட்டாண்டுகளில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். ரோமானிய கடவுள் பிப்ரஸிடமிருந்து இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.
பிப்ரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 'ஃபெப்ரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரொபாஸ்கோ (Sacrobosco) என்பவரின் கண்டுபிடிப்பின் படி கிமு45 - கிமு8 காலப்பகுதியில் பெப்ரவரி மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களூம் லீப் ஆண்டுகளில் 30 நாட்களும் இருந்ததாக சிலர் நம்பினார்கள். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்காட்டிகளில் 1712ம் ஆண்டில் பெப்ரவரி 30 என்ற நாள் சேர்க்கப்பட்டுள்ளது.


சிறப்பு மாதம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி&oldid=2224661" இருந்து மீள்விக்கப்பட்டது