சாதாரண ஆண்டு
தோற்றம்
சாதாரண ஆண்டு பொதுவான ஆண்டு வகையாகும். கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சாதாரண ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. ஒரு சாதாரண ஆண்டில் 52 வாரங்கள் மற்றும் ஒரு நாள் உள்ளது. அதனால் ஆண்டின் துவக்க நாளும் முடியும் நாளும் ஒரே கிழமையில் நிகழும். (உ.ம். 2010 ஆண்டில் சனவரி 1 மற்றும் டிசம்பர் 31 செவ்வாய்க்கிழமையில் நிகழ்ந்தன)
- 2001 திங்கட்கிழமையில் துவங்கியது
- 2002 செவ்வாய்க்கிழமையில் துவங்கியது
- 2003 புதன்கிழமையில் துவங்கியது
- 2005 சனிக்கிழமையில் துவங்கியது
- 2006 ஞாயிற்றுக்கிழமையில் துவங்கியது
- 2007 திங்கட்கிழமையில் துவங்கியது
- 2009 வியாழக்கிழமையில் துவங்கியது
- 2010 வெள்ளிக்கிழமையில் துவங்கியது
- 2011 சனிக்கிழமையில் துவங்கியது
- 2013 செவ்வாய்க்கிழமையில் துவங்கும்
- 2014 புதன்கிழமையில் துவங்கும்
- 2015 வியாழக்கிழமையில் துவங்கும்
- 2017 ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும்
கிரிகோரியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 303 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாகும். ஜூலியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 300 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாக உள்ளன.
சந்திர நாட்காட்டி மற்றும் சூரியசந்திர நாட்காட்டியில் சாதாரண ஆண்டு 354 நாட்களைக் கொண்டுள்ளது.
ஆண்டுகளின் ஒப்பீட்டு
[தொகு]வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
| ஆண்டு வகை | ஆங்கிலத்தில் | கால அளவு (நாட்கள்) | விளக்கம் |
|---|---|---|---|
| சாதாரண ஆண்டு | Common Year | 365 | பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு. |
| நெட்டாண்டு (லீப் ஆண்டு) | Leap Year | 366 | பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு. |
| கிரெகொரியின் ஆண்டு | Gregorian Year | 365.2425 | நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம். |
| சூரிய ஆண்டு | Solar Year | ~365.242 | பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.) |
| வெப்பமண்டல ஆண்டு | Tropical Year | 365.24219 | இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை). |
| விண்மீன் ஆண்டு | Sidereal Year | 365.25636 | நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். |
| ஜூலியன் ஆண்டு | Julian Year | 365.25 | வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு. |
| சந்திர ஆண்டு | Lunar Year | ~354.37 | 12 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு). |
| அண்மைநிலை ஆண்டு | Anomalistic Year | 365.25964 | பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion). |
| கிரகண ஆண்டு | Eclipse / Draconic Year | 346.62007 | சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்). |
| சோதிக் ஆண்டு | Sothic Year | ~365.25 | சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை). |
| பெஸலியன் ஆண்டு | Besselian Year | ~365.2422 | ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு. |
| காசியன் ஆண்டு | Gaussian Year | 365.25690 | காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு. |
| விண்மீன் மண்டல ஆண்டு | Galactic Year | ~22.5 - 25 கோடி ஆண்டுகள் | சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது). |