பெப்ரவரி 31
Jump to navigation
Jump to search
பெப்ரவரி 31 (February 31) தற்போது பாவனையில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியில் ஓர் கற்பனைநாளாகும். இதனை எடுத்துக்காட்டுகளுக்காக தரவுகளில் பாவிப்பது உண்டு. பெப்ரவரி 30ஐயும் இவ்வாறு பாவித்தாலும் சில நாட்காட்டிகளில் பெப்ரவரி 30 நடைமுறையில் உள்ள நாளாகும்.
பாவிக்கப்பட்ட எடுத்துக்காட்டுகள்[தொகு]

ஒகைய்யோவில் உள்ள பழைய தேவாலயம் ஒன்றில் உள்ள ஒரு நினைவுக்கல், கிறிஸ்டியானா ஹாக் என்பவர் இறந்தது 1869, பெப். 31 எனப் பொறிக்கப்பட்டுள்ளது
- ஒக்சுபோர்ட் இல் உள்ள புனித கிழக்குப் பீட்டர் தேவாலயத்தில் உள்ள ஒரு நினைவுக்கல்லில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது:[1]
ஹூன்சுலோ, ஜோன்
இ. 31.3.1871 |
- ஜூலியான் சைமன்சின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட தி ஆல்பிரட் ஹிட்ச்காக் நேரம் என்ற தொலைக்காட்சித் தொடரில் "பெப்ரவரி முப்பத்தி ஒன்று" (The Thirty-First of February) என்ற பகுதி."[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gravestones in the Churchyard of St. Peter-in-the-East". பார்த்த நாள் 11 சூன் 2009.
- ↑ "The Thirty First of February". tv.com. பார்த்த நாள் 2009-08-30.