செப்டம்பர் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMXV | ||||||
செப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- 1255 - அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
- 1580 - சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
- 1687 – ஏத்தன்சு நகரத்தை முற்றுகையிட்ட ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
- 1777 - பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
- 1783 – மாசசூசெட்சில் ஆயுதக் கிளர்ச்சி ஷேய்சின் கிளர்ச்சி ஆரம்பம்.
- 1907 - நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
- 1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.
- 1934 – ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
- 1950 - ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
- 1950 - இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.
- 1954 - ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.
- 1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
- 1962 - யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.
- 1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
- 1984 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
- 1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது.
- 2002 - செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 2007 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- 2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.
பிறப்புகள்[தொகு]
- 1820 - ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891)
- 1833 - சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
- 1849 - இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)
- 1867 - வின்சர் மெக்கே, அமெரிக்க ஓவியர் (இ. 1934)
- 1890 - பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
- 1897 - ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978)
- 1908 - பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
- 1913 - திருக்குறள் வீ.முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)
- 1923 - தேவ் ஆனந்த், இந்திய நடிகர் (இ. 2011)
- 1932 - மன்மோகன் சிங், இந்தியாவின் 14வது பிரதமர்
- 1965 - பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
- 1979 - டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 1வது பிரதமர்
- 1981 - செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
இறப்புகள்[தொகு]
- 1954 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)
- 1959 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கை பிரதமர், (பி. 1899)
- 1987 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (பி. 1963)
- 2010 - குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (பி. 1910)