மே 17
<< | மே 2018 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXVIII |
மே 17 (May 17) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
- 1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
- 1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
- 1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
- 1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
- 1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
- 1846 - அடோல்ப் சக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
- 1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
- 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
- 1974 - அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
- 1998 - தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்[தொகு]
- 1749 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1823)
- 1836 – ஜோசப் நார்மன் இலாக்கியர், ஆங்கிலேய அறிவியலாளர், வானியலாளர் (இ. 1920)
- 1858 – மேரி அடேலா பிளேக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)
- 1873 – ஞானியார் அடிகள், சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)
- 1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)
- 1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி
- 1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
- 1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்
- 1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்
- 1988 – நிக்கி ரீட், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்[தொகு]
- 1870 – இராதானாத் சிக்தார், வங்காள கணிதவியலாளர் (பி. 1813)
- 1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
- 1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 2007 – நகுலன், தமிழக எழுத்தாளர்
- 2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
சிறப்பு நாள்[தொகு]
- குழந்தைகள் நாள் (நோர்வே)
- தற்பாலினர் வெறுப்புபிற்கு எதிரான பன்னாட்டு நாள்
- விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)
- உலக உயர் இரத்த அழுத்த நாள்
- உலக தகவல் சமூக நாள்