யாழ்ப்பாண மாநகர சபை
யாழ்ப்பாணம் மாநகர சபை Jaffna Municipal Council | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 சனவரி 1949 |
முன்பு | யாழ்ப்பாண நகரசபை |
தலைமை | |
மதிவதனி விவேகானந்தராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 சூன் 2025 முதல் | |
துணை முதல்வர் | இம்மானுவேல் தயாளன், இதக 13 சூன் 2025 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 45 |
அரசியல் குழுக்கள் | அரசு (13)
எதிர் (32) |
ஆட்சிக்காலம் | 4 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
கலப்புத் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 6 மே 2025 |
வலைத்தளம் | |
யாழ் மாநகரசபை |
யாழ்ப்பாண மாநகரசபை (Jaffna Municipal Council) என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
இது வட்டாரம் என அழைக்கப்படும் 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 27 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
தோற்றம்
[தொகு]1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் மற்றும் 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.
மாநகரசபைக் கட்டிடம்
[தொகு]
குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை.
வட்டாரங்கள்
[தொகு]யாழ் மாநகரசபையில் தற்போது (2018) 27 தனி வட்டாரங்கள் உள்ளன.[3][4] வட்டாரம் ஒவ்வொன்றும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிப்பிடப்படுகின்றன. விபரங்கள் பின்வருமாறு:[5]
இல. | வட்டாரம் |
வட்டார இல. |
கிராம சேவையாளர் பிரிவு |
---|---|---|---|
1 | வண்ணார்பண்ணை வடக்கு | யா098 | வண்ணார்பண்ணை |
யா099 | வண்ணார்பண்ணை மேற்கு (பகுதி) | ||
2 | கந்தர்மடம் வடமேற்கு | யா100 | வண்ணார்பண்ணை வடகிழக்கு |
யா102 | கந்தர்மடம் வடமேற்கு | ||
யா123 | கொக்குவில் தென்கிழக்கு (பகுதி) | ||
3 | கந்தர்மடம் வடகிழக்கு | யா103 | கந்தர்மடம் வடகிழக்கு |
4 | நல்லூர் இராசதானி | யா106 | நல்லூர் வடக்கு |
யா107 | நல்லூர் இராசதானி | ||
யா108 | நல்லூர் தெற்கு | ||
5 | சங்கிலியன் தோப்பு | யா109 | சங்கிலியன் தோப்பு |
6 | அரியாலை | யா094 | அரியாலை மத்திய வடக்கு (பகுதி) |
யா095 | அரியாலை மத்தி | ||
யா096 | அரியாலை மத்திய தெற்கு | ||
7 | கலைமகள் | யா091 | அரியாலை வட மேற்கு |
8 | கந்தர்மடம் தெற்கு | யா104 | கந்தர்மடம் தென்மேற்கு |
யா105 | கந்தர்மடம் தென்கிழக்கு | ||
9 | ஐயனார் கோவிலடி | யா097 | ஐயனார் கோவிலடி |
யா101 | நீராவியடி | ||
10 | புதிய சோனகத் தெரு | யா088 | புதிய சோனகத் தெரு |
11 | நாவாந்துறை வடக்கு | யா085 | நாவாந்துறை வடக்கு |
12 | நாவாந்துறை தெற்கு | யா084 | நாவாந்துறை தெற்கு |
13 | பழைய சோனகத் தெரு | யா086 | சோனகத் தெரு தெற்கு |
யா087 | சோனகத் தெரு வடக்கு | ||
14 | பெரிய கடை | யா080 | பெரிய கடை |
யா082 | வண்ணார்பண்ணை | ||
15 | அத்தியடி | யா078 | அத்தியடி |
யா079 | சிராம்பியடி | ||
16 | சுண்டிக்குளி மருதடி | யா076 | சுண்டிக்குளி வடக்கு |
யா077 | மருதடி | ||
17 | அரியாலை மேற்கு | யா092 | அரியாலை மேற்கு (மத்தி) |
யா093 | அரியாலை தென்மேற்கு | ||
18 | கொழும்புத்துறை | யா061 | நெடுங்குளம் |
யா062 | கொழும்புத்துறை கிழக்கு | ||
யா063 | கொழும்புத்துறை மேற்கு | ||
19 | பாசையூர் | யா064 | பாசையூர் கிழக்கு |
யா065 | பாசையூர் மேற்கு | ||
20 | ஈச்சமோட்டை | யா066 | ஈச்சமோட்டை |
21 | தேவாலயம் | யா075 | சுண்டுக்குளி தெற்கு |
22 | திருநகர் | யா067 | திருநகர் |
23 | குருநகர் | யா070 | குருநகர் கிழக்கு |
யா071 | குருநகர் மேற்கு | ||
24 | யாழ் நகர் | யா073 | யாழ் நகர் மேற்கு |
யா074 | யாழ் நகர் கிழக்கு | ||
25 | கொட்டடி கோட்டை | யா081 | கோட்டை |
யா083 | கொட்டடி | ||
26 | ரெக்கிளமேசன் மேற்கு | யா069 | ரெக்கிளமேசன் மேற்கு |
யா072 | சின்ன கடை | ||
27 | ரெக்கிளமேசன் கிழக்கு | யா068 | ரெக்கிளமேசன் கிழக்கு |
முதல்வர்களும் பதவிக்காலமும்
[தொகு]மாநகரசபைத் தேர்தல் முடிவுகள்
[தொகு]1983 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழர் விடுதலைக் கூட்டணி | 8,594 | 88.63% | 23 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 830 | 8.56% | 0 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 272 | 2.81% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 9,696 | 100.00% | 23 | |
செல்லாத வாக்குகள் | 74 | |||
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 9,770 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 66,921 | |||
வாக்குவீதம் | 14.60% |
1983 ஆம் ஆண்டு இலங்கை அரசு அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இடைநிறுத்தியது.[7][8]
1998 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]1998 சனவரி 29 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[9][10]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழர் விடுதலைக் கூட்டணி | 3,540 | 33.31% | 9 | |
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) | 3,182 | 29.94% | 6 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 2,963 | 27.88% | 6 | |
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 943 | 8.87% | 2 | |
செல்லுபடியான வாக்குகள் | 10,628 | 100.00% | 23 | |
செல்லாத வாக்குகள் | 907 | |||
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 11,535 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 82,667 | |||
வாக்குவீதம் | 13.95% |
2003 சனவரியில், இலங்கை அரசு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாண மாநகர சபையைக் கலைத்து, உள்ளூர் பகுதியை நிர்வகிக்க சிறப்பு ஆணையர்களை நியமித்தது.[11][12][13][14] 2009 தேர்தல்கள் வரை மாநகரசபை சிறப்பு ஆணையர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டது.
2009 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2009 ஆகத்து 8 ஆம் நாள் நடந்த யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் முடிவுகள்:[15]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஈபிடிபி, இசுக, அ.இ.முகா) | 10,602 | 50.67% | 13 | |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இதக, ஈபிஆர்எல்எஃப் (சு), டெலோ) | 8,008 | 38.28% | 8 | |
சுயேட்சை 1 | 1,175 | 5.62% | 1 | |
தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ, புளொட், ஈபிஆர்எல்எஃப் (வ)) | 1,007 | 4.81% | 1 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 83 | 0.40% | 0 | |
சுயேட்சை 2 | 47 | 0.22% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 20,922 | 100.00% | 23 | |
செல்லாத வாக்குகள் | 1,358 | |||
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 22,280 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 100,417 | |||
வாக்குவீதம் | 22.19% |
2018 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2018 பெப்ரவரி 8 நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்:[16]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இதக, புளொட், டெலோ) | 14,424 | 35.76% | 14 | 2 | 16 | |||||||||||||||||||||||||||||||||||||||
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 12,020 | 29.80% | 9 | 4 | 13 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 8,671 | 21.50% | 2 | 8 | 10 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேக, முகா, அஇமகா ஏனை.) | 2,423 | 6.01% | 1 | 2 | 3 | |||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை சுதந்திரக் கட்சி | 1,479 | 3.67% | 0 | 2 | 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ), ஈபிஆர்எல்எஃப்) | 1,071 | 2.66% | 1 | 0 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
மக்கள் விடுதலை முன்னணி | 242 | 0.60% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
செல்லுபடியான வாக்குகள் | 40,330 | 100.00% | 27 | 18 | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||
செல்லாத வாக்குகள் | 586 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 40,916 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 56,245 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்குவீதம் | 72.75% |
இம்மானுவேல் ஆர்னோல்ட் (ததேகூ) மாநகர முதல்வராகவும், துரைராஜா ஈசன் (ததேகூ) துணை முதல்வராகவும் 2018 மார்ச் 26 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[17][18][19]
யாழ் மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கை இரண்டுமுறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை இழந்தார். இதனை அடுத்து 2020 திசம்பர் 30 அன்று இடம்பெற்ற முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) உறுப்பினர் வி. மணிவண்ணன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிவண்ணன் 21 வாக்குகளையும், ஆர்னோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர். மணிவண்ணனுக்கு ஆதரவாக ததேமமு உறுப்பினர்கள் 10 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.[20]
2025 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2025 மே 6 இல் நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்:[21] 27 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 10,370 | 29.63% | 10 | 3 | 13 | |||||||||||||||||||||||||||||||||||||||
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 9,124 | 26.07% | 11 | 1 | 12 | |||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய மக்கள் சக்தி | 7,702 | 22.01% | 4 | 6 | 10 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 3,567 | 10.19% | 0 | 4 | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | 3,076 | 8.79% | 2 | 2 | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஐக்கிய தேசியக் கட்சி | 587 | 1.68% | 0 | 1 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஐக்கிய மக்கள் சக்தி | 464 | 1.33% | 0 | 1 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை பொதுசன முன்னணி | 103 | 0.29% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
செல்லுபடியான வாக்குகள் | 34,993 | 100.00% | 27 | 18 | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||
செல்லாத வாக்குகள் | 466 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 35,459 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 63,045 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்குவீதம் | 56.24% |
2025 சூன் 13 அன்று இடம்பெற்ற யாழ் மாநகரசபைக்கான தலைவர்களுக்கான தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமதி மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகள் பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை ஈபிடிபி (4), ஐக்கிய மக்கள் சக்தி (1), ஐக்கிய தேசியக் கட்சி (1) ஆகியவை ஆதரித்து வாக்களித்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் கனகையா சிறீகிருஷ்ணகுமார் 16 வாக்குகளைப் பெற்றார். பிரதி முதல்வராக இம்மானுவேல் தயாளன் (இதக) தெரிவு செய்யப்பட்டார்.[22]
- வட்டாரங்கள் வாரியாக முடிவுகள்
வட்டார இல. |
பெயர் | இதக | ததேமமு | தேமச | ஈபிடிபி | சததேகூ | ஐதேக | ஐமச | இபொசமு | செல்லுபடியான வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | வண்ணார்பண்ணை வடக்கு | 410 | 453 | 259 | 29 | 17 | 5 | 2 | 3 | 1,178 |
2 | கந்தர்மடம் வடமேற்கு | 241 | 452 | 352 | 37 | 481 | 8 | 4 | 5 | 1,580 |
3 | கந்தர்மடம் வடகிழக்கு | 165 | 412 | 295 | 16 | 41 | 246 | 5 | 4 | 1,184 |
4 | நல்லூர் இராசதானி | 492 | 522 | 319 | 68 | 146 | 16 | 5 | 2 | 1,578 |
5 | சங்கிலியன் தோப்பு | 627 | 388 | 393 | 37 | 120 | 9 | 7 | 5 | 1,586 |
6 | அரியாலை | 232 | 466 | 364 | 332 | 36 | 4 | 17 | 4 | 1,455 |
7 | கலைமகள் | 179 | 252 | 202 | 123 | 150 | 5 | 143 | 3 | 1,057 |
8 | கந்தர்மடம் தெற்கு | 222 | 325 | 257 | 34 | 46 | 13 | 3 | 2 | 902 |
9 | ஐயனார் கோவிலடி | 254 | 456 | 317 | 36 | 46 | 170 | 11 | 16 | 1,306 |
10 | புதிய சோனகத் தெரு | 108 | 245 | 68 | 177 | 17 | 2 | 17 | 17 | 651 |
11 | நாவாந்துறை வடக்கு | 437 | 844 | 61 | 23 | 6 | 3 | 16 | 8 | 1,398 |
12 | நாவாந்துறை தெற்கு | 507 | 115 | 95 | 114 | 90 | 1 | 19 | 2 | 943 |
13 | பழைய சோனகத் தெரு | 761 | 217 | 154 | 341 | 63 | 36 | 89 | 2 | 1,663 |
14 | பெரிய கடை | 167 | 319 | 320 | 167 | 70 | 19 | 12 | 2 | 909 |
15 | அத்தியடி | 223 | 346 | 420 | 134 | 126 | 9 | 12 | 3 | 1,273 |
16 | சுண்டிக்குளி மருதடி | 269 | 386 | 317 | 67 | 83 | 0 | 5 | 1 | 1,128 |
17 | அரியாலை மேற்கு | 244 | 396 | 411 | 25 | 56 | 3 | 8 | 0 | 1,146 |
18 | கொழும்புத்துறை | 496 | 428 | 602 | 440 | 490 | 5 | 14 | 2 | 2,477 |
19 | பாசையூர் | 356 | 258 | 339 | 175 | 50 | 1 | 4 | 1 | 1,184 |
20 | ஈச்சமோட்டை | 403 | 379 | 220 | 64 | 47 | 3 | 3 | 3 | 1,122 |
21 | தேவாலயம் | 409 | 185 | 230 | 42 | 22 | 5 | 4 | 3 | 900 |
22 | திருநகர் | 80 | 21 | 52 | 131 | 185 | 1 | 1 | 1 | 472 |
23 | குருநகர் | 554 | 150 | 340 | 135 | 54 | 3 | 27 | 2 | 1,265 |
24 | யாழ்ப்பாண நகரம் | 294 | 604 | 227 | 63 | 83 | 1 | 5 | 1 | 1,278 |
25 | கொட்டடி கோட்டை | 809 | 209 | 196 | 287 | 115 | 8 | 14 | 5 | 1,643 |
26 | ரெக்கிளமேசன் மேற்கு | 714 | 169 | 552 | 137 | 120 | 4 | 9 | 4 | 1,709 |
27 | ரெக்கிளமேசன் கிழக்கு | 717 | 127 | 340 | 333 | 316 | 7 | 8 | 2 | 1,850 |
மொத்தம் | 10,370 | 9,124 | 7,702 | 3,567 | 3,076 | 587 | 464 | 103 | 34,993 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
- ↑ "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Order under Section 3C". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/26. 21 August 2015. http://www.documents.gov.lk/files/egz/2015/8/1928-26_E.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Order under Section 3D". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 2006/44. 17-02-2017. http://www.documents.gov.lk/files/egz/2017/2/2006-44_E.pdf.
- ↑ "யாழ் மாநகர சபை இணையத்தளம் - நகரின் வரைபடம்". Archived from the original on 2016-07-02. Retrieved 2016-09-27.
- ↑ Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). New Delhi, India: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். p. 212.
- ↑ "TNA urges PM to put off NE local polls". தமிழ்நெட். 11 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7457. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Tight security for poll in Sri Lanka's Jaffna peninsula". BBC News (London, U.K.). 29 January 1998. http://news.bbc.co.uk/1/hi/world/51510.stm. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Election commissioner releases results". தமிழ்நெட். 30 January 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=814. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ Jeyaraj, D. B. S. (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times (Sutton, U.K.) XVII (2): pp. 12–15. http://noolaham.net/project/36/3562/3562.pdf. பார்த்த நாள்: 3 September 2011.
- ↑ "Jaffna local bodies to be administered by special commissioners". தமிழ்நெட். 14 January 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8158. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Polling commences for 266 local councils in Sri Lanka". தமிழ்நெட். 30 March 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17620. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Elections to 42 local bodies in NE postponed". தமிழ்நெட். 23 September 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19689. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ Satyapalan, Franklin R. (21 September 2006). "LG polls in North and East postponed again". The Island (Colombo, Sri Lanka). http://www.island.lk/2006/09/21/news3.html. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Local Authorities Election 2009 Final Results Jaffna Municipal Council" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Local Authorities Elections - 10.02.2018: Final Results of the Council" (PDF). Colombo, Sri Lanka: Election Commission of Sri Lanka / news.lk. Archived from the original (PDF) on 28 மார்ச் 2018. Retrieved 16 February 2018.
- ↑ "TNA captures Jaffna Municipal Council - Arnold takes over as Mayor of Jaffna". Tamil Diplomat. 27 March 2018. http://tamildiplomat.com/tna-captures-jaffna-municipal-council-arnold-takes-mayor-jaffna/. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "TNA's Emmanuel Arnold elected as Jaffna Mayor". Tamil Guardian. 26 March 2018. http://www.tamilguardian.com/content/tnas-emmanuel-arnold-elected-jaffna-mayor. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Eemmanuel Arnold swears in as new mayor of Jaffna". Hiru News (Colombo, Sri Lanka). 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180326122948/http://www.hirunews.lk/186890/emmanuel-arnold-swears-in-as-new-mayor-jaffna. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ New Mayor for Jaffna, டெய்லி நியூஸ், திசம்பர் 31, 2020
- ↑ "Local Authorities Elections 07.05.2025: Final Results of the Council" (PDF). Election Commission of Sri Lanka / news.lk. Archived (PDF) from the original on 11 May 2025. Retrieved 11 May 2025.
- ↑ "யாழ். மாநகர சபையின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்ட பெண்மணி" (PDF). ஐபிசி தமிழ். Retrieved 13 June 2025.
{{cite web}}
: CS1 maint: url-status (link)