இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

← 2011 10 பெப்ரவரி 2018

341 உள்ளாட்சி மன்றங்களில் இருந்து 8,356 உறுப்பினர்கள்
  First party Second party
  Mahinda Rajapaksa.jpg R Wickremasinghe.jpg
தலைவர் மகிந்த ராசபக்ச[கு 1] ரணில் விக்கிரமசிங்க
கட்சி இலங்கை பொதுசன முன்னணி ஐக்கிய தேசிய முன்னணி
முன்பிருந்த தொகுதிகள் புதிய கட்சி 1,157[கு 2]
மொத்த வாக்குகள் 4,968,762 3,625,510
விழுக்காடு 40.54% 29.41%
உறுப்பினர்கள் 3,386 2,393
உள்ளூராட்சி சபைகள் 249 42

  Third party Fourth party
  Maithripala- Russia (portrait).jpg R. Sampanthan.jpg
தலைவர் மைத்திரிபால சிறிசேன இரா. சம்பந்தன்
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்பிருந்த தொகுதிகள் 2,639[கு 2] 282[கு 2]
மொத்த வாக்குகள் 1,487,960 339,675
விழுக்காடு 12.07%
உறுப்பினர்கள் 1,036 407
உள்ளூராட்சி சபைகள் 11 38

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெற்றன.[3][4] இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளில் (24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள்) இருந்து 8,356 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.[5][6][7] அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.[6][8] இத்தேர்தலில் முதற்தடவையாக கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 40% உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.[9][10]

இத்தேர்தல்களில் 70% வாக்களித்தனர். பெரும் வன்முறைகள் எதுவுமின்றி வாக்களிப்புகள் இடம்பெற்றன.[11][12][13] முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் இலங்கை பொதுசன முன்னணி பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றியது.

பின்னணி[தொகு]

உள்ளூராட்சி சபைகளுக்கு கடைசியாக 322 சபைகளுக்கு 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.[14] முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கு ஈழப் போர் இடப்பெயர்வு காரணமாக நடைபெறவில்லை.[15][16] 2011 இன் பின்னர் ஆறு புதிய உள்ளாட்சி சபைகள் (1 மாநகரசபை, 5 பிரதேசசபைகள்) தோற்றுவிக்கப்பட்டு, மொத்தம் 341 ஆக அதிகரிக்கப்பட்டன.[17][18][19][20]

உள்ளாட்சி சபைகளின் ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகள் எனினும், மேலும் ஓராண்டு காலம் ஆட்சியை நீடிக்க நடுவண் அரசுக்கு உரிமை உண்டு.[21][22] 234 உள்ளாட்சி சபைகளுக்கு 2011 மார்ச் 31 இல் ஆட்சிக்காலம் முடிவடைந்தது, ஆனாலும் 2015 மே 15 வரை ஆட்சிக்காலம் நீடிகப்பட்டது.[23][24][25] அதன் பின்னர் இச்சபைகள் கலைக்கப்பட்டு, அரசினால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணைக்குழுவிடம் இவற்றின் நிருவாகம் ஒப்படைக்கப்பட்டது.[26][27] இதே போன்று 2015 சூலை 31 இல் ஆட்சிக் காலம் முடிவடைந்த மேலும் 65 உள்ளாட்சி சபைகளின் நிருவாகமும் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.[28][29] 2016 சூன் 30 இல் ஆட்சிக்காலம் முடிவடைந்த மேலும் 23 சபைகள் கலைக்கப்பட்டு அவற்றின் நிருவாகம் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.[30][31][32]

தேர்தலுக்கு முந்தைய நிலைமை[தொகு]

இலங்கையில் அண்மைய தேர்தல் முடிவுகள்
தேர்தல் நாள்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சுயேச்சை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
2011 உள்ளூராட்சி தேர்தல் 4,821,203 56.45% 2,710,222 31.73% 255,078 2.99% 242,502 2.84% 140,727 1.65% 219,998 2.58%
2015 அரசுத்தலைவர் தேர்தல் 5,768,090 47.58% 6,217,162 51.28% [கு 3]
2015 நாடாளுமன்றத் தேர்தல் 4,732,664 42.38% 5,098,916 45.66% [கு 4] 515,963 4.62% 543,944 4.87% 44,193 0.40% 42,828 0.38%
தேர்தலுக்கு முந்தைய இலங்கை அரசியல் வரைபடம்
2015 அரசுத்தலைவர் தேர்தல் 2015 நாடாளுமன்றத் தேர்தல்
Wahlbezirkskarte Praesidentschaft Sri Lanka 2015.svg Sri Lankan parliamentary election, 2015 - polling divisions.svg
தேர்தல் மாவட்டம் அல்லது மாநகரசபை வாரியாக அதிக வாக்குகளைப் பெற்ற தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்:
  புதிய சனநாயக முன்னணி (ஐதேக தலைமையில்)

கலப்பு வாக்களிப்பு முறை[தொகு]

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கலப்பு முறை வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த 2012 அக்டோபர் 10 இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. இதன் படி, 70% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 30% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.[33][34][35][36]

கலப்பு வாக்குரிமையால் சில பிரதிகூலங்கள் இருப்பதாக சில சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் முறைப்பாடு செய்ததை அடுத்து, 2017 ஆகத்து 25 இல் மேலும் ஒரு திருத்தச்சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதன் படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 40% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.[37][38][39]

வட்டார எல்லைகள்[தொகு]

2012 டிசம்பர் 12 இல் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க ஜயலத் திசாநாயக்கா தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அரசு நியமித்தது.[40] இதன் அறிக்கை 2015 சூன் 19 இல் சமர்ப்பிக்கப்பட்டது.[41] இவ்வறிக்கையின் படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,081 ஆக அதிகரிக்கப்பட்டது.[42] 2015 ஆகத்து 21 இல் உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது.[43][44] புதிய வட்டாரங்கள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, இது குறித்து ஆராய்வதற்கு அசோக்கா பீரிசு தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.[41][45] இக்குழுவின் அறிக்கை 2017 சனவரி 17 இல் சமர்ப்பிக்கப்பட்டது.[46][47][48] திருத்தப்பட்ட வட்டாரங்கள் பற்றிய விபரங்கள் 2017 பெப்ரவரி 17 இல் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.[49]

பெண் வேட்பாளர்கள்[தொகு]

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என 2016 பெப்ரவரியில் அரசு திருத்தச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றியது.[50][51][52]

தேர்தல் விபரங்கள்[தொகு]

93 உள்ளூராட்சி சபைகளுக்கு (7 மாநகர சபைகள், 18 நகரசபைகள், 68 பிரதேச சபைகள்) நியமனப் பத்திரங்கள் 2017 டிசம்பர் 11 முதல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[53][54] 466 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், 57 மனுக்கள் சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து மொத்தம் 523 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 500 மனுக்கள் (447 கட்சிகளில் இருந்தும், 53 சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[55]

ஏனைய 248 சபைகளுக்கு (17 மாநகரசபைகள், 23 நகரசபைகள், 208 பிரதேச சபைகள்) வேட்பு மனுக்கள் 2017 டிசம்பர் 18 முதல் 21 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[56] மொத்தம் 1,582 வேட்பு மனுக்கள் (1,399 கட்சிகளிடம் இருந்து, 183 சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து) கிடைக்கப்பெற்றன. இவற்றில் 1,553 மனுக்கள் (1,379 கட்சி, 174 சுயேட்சை) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[57][58]

அனைத்து 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் 2018 பெப்ரவரி 10 சனிக்கிழமை அன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய 2017 டிசம்பர் 18 இல் அறிவித்தார்.[59][60] இத்தேர்தலில் ஏறத்தாழ 13,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.[61][62] இத்தேர்தலுக்காக 4 பில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டது. 300,000 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.[8][9] அஞ்சல்-வழி வாக்களிப்பு 2018 சனவரி 25, 26 இல் இடம்பெற்றது.[63]

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 57,066 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 8,356 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். 13,420 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றன. 15,760,867 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[5] காலி மாவட்டத்தைச் சேர்ந்த எல்பிட்டி பிரதேச சபைக்கு முறைப்பாடு ஒன்றை அடுத்து அங்கு தேர்தல் ஒத்திப்போடப்பட்டு,[5][64][65] 2019 அக்டோபர் 11 இல் நடைபெற்றது.

போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[தொகு]

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிலை சின்னத்தில் சில மாவட்டங்களிலும், இலங்கை சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் சில மாவட்டங்களிலும் போட்டியிட்டது. 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிட்டது.[66] [67]

ஐக்கிய தேசிய முன்னணி[தொகு]

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. இக்கட்சிச் சின்னத்தில் சம்பிக்க ரணவக்க தலைமையில் ஜாதிக எல உறுமய கட்சியும் போட்டியிடுகின்றது.[68][69] ரவூப் ஹக்கீம் தலைமையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழும், சில சபைகளில் தனித்தும் போட்டியிட்டது. மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடனும், சில சபைகளில் ஏணி சின்னத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தனித்தும் போட்டியிட்டது.[70]

இலங்கை பொதுசன முன்னணி[தொகு]

இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி அமைத்து போட்டியிட்டார்.[71] இக்கட்சி பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.[72]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[தொகு]

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டது. இக்கூட்டணியில் சித்தார்த்தன் தலைமையில் புளொட் அமைப்பும் போட்டியிட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[தொகு]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி "தமிழ்த் தேசியப் பேரவை" என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி[தொகு]

மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதே வேளையில், பின்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கு ஏணி சின்னத்தில் "ஒருமித்த முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் தனித்துப் போட்டியிட்டது.[70]


தேர்தல் முடிவுகள்[தொகு]

340 உள்ளூராட்சி சபைகளில் 141 இல் மட்டுமே கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றன - இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 126, ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 5, சுயேட்சைகள் 2, தேசிய காங்கிரசு 2, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 2, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) 1, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) 1.[73]

மீதியான 199 சபைகளில் இபொசமு 95 சபைகளிலும், ததேகூ 36 சபைகளிலும், ஐதேமு 29 சபைகளிலும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4 இலும், ஐமசுகூ 4 இலும், சுயேட்சைகள் மூன்றிலும், இதொகா இரண்டிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டிலும், ஈபிடிபி, ஐக்கிய இலங்கை பெரும் பேரவை, முசுலிம் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன தலா ஒவ்வொன்றிலும், அதிக இடங்களைக் கைப்பற்றின.

தேசிய அளவில் முடிவுகள்[தொகு]

2018 உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளின் சுருக்கம்[73]
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள் சபைகள்
வட். வி.சா மொத்தம்
  5,006,837 40.47% 3,255 181 3,436 126
  3,640,620 29.42% 872 1,561 2,433 5
  1,497,234 12.10% 204 844 1,048 2
  மக்கள் விடுதலை முன்னணி 710,932 5.75% 1 433 434 0
  337,877 2.73% 389 28 417 2
  சுயேச்சைகள் 374,132 3.02% 93 181 274 2
  85,198 0.69% 45 57 102 0
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 74,128 0.60% 41 57 98 1
  72,493 0.59% 22 56 78 0
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[கு 9] 92,897 0.75% 44 29 73 0
  85,437 0.69% 21 44 65 0
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[கு 12] 100,641 0.81% 38 21 59 1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்[கு 7] 44,062 0.36% 14 23 37 0
50,974 0.41% 2 24 26 0
  கட்டுப்பாட்டுக்கு வராத சபைகள் 199
செல்லுபடியான வாக்குகள் 12,372,816 100.00% 5,074 3,634 8,708 340
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 210,970 1.68%
மொத்த வாக்குகள் 12,583,786 79.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 15,742,371

மாவட்டவாரியாக முடிவுகள்[தொகு]

இலங்கை பொதுசன முன்னணி வென்ற மாவட்டங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற மாவட்டங்கள்
ஐக்கிய தேசிய முன்னணி வென்ற மாவட்டங்கள்
மாவட்டவாரியாக 2018 இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்[73]
மாவ மாகா இலங்கை பொதுசன முன்னணி ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மக்கள் விடுதலை முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குவீதம்
வாக்குகள் % இருக்கைகள் வாக்குகள் % இருக்கைகள் வாக்குகள் % இருக்கைகள் வாக்குகள் % இருக்கைகள் வாக்குகள் % இருக்கைகள்
வ. வி. மொ வ. வி. மொ வ. வி. மொ வ. வி. மொ வ. வி. மொ
அம் கிழ 88,098 22.15% 96 4 100 114,356 28.76% 40 65 105 41,102 10.34% 19 25 44 9,690 2.44% 0 11 11 24,468 6.15% 27 0 27 80.24%
அனு வம 245,545 43.93% 193 0 193 155,041 27.74% 20 87 107 88,646 15.86% 7 51 58 38,182 6.83% 0 25 25 - - - - - 82.04%
பது 162,577 31.41% 109 19 128 169,132 32.68% 77 53 130 104,406 20.17% 32 54 86 34,132 6.59% 0 26 26 - - - - - 81.98%
மட் கிழ 408 0.14% 0 0 0 44,619 15.26% 13 24 37 45,031 15.40% 24 14 38 1,003 0.34% 0 0 0 80,622 27.58% 69 6 75 76.20%
கொழு மே 476,873 38.38% 185 34 219 410,522 33.04% 115 82 197 134,147 10.80% 3 57 60 104,707 8.43% 0 46 46 - - - - - 76.79%
காலி தெ 321,102 50.46% 238 3 241 169,234 26.59% 15 97 112 75,827 11.91% 2 49 51 40,634 6.38% 0 28 28 - - - - - 81.19%
கம் மே 655,554 49.19% 341 19 360 395,360 29.66% 68 143 211 136,298 10.23% 6 63 69 102,177 7.67% 0 54 54 - - - - - 78.64%
அ.தோ தெ 199,018 49.94% 138 6 144 101,702 25.52% 21 50 71 41,059 10.30% 1 28 29 51,029 12.81% 0 32 32 - - - - - 83.08%
யாழ் வட 3,287 1.08% 0 3 3 19,105 6.30% 5 20 25 24,461 8.07% 6 26 32 553 0.18% 0 0 0 105,947 34.94% 141 12 153 65.81%
களு மே 350,382 46.55% 212 3 215 235,118 31.24% 56 94 150 79,000 10.50% 2 48 50 47,754 6.34% 1 30 31 - - - - - 81.75%
கண் மத் 360,732 41.41% 255 17 272 303,053 34.79% 109 111 220 109,749 12.60% 7 72 79 37,184 4.27% 0 24 24 - - - - - 81.15%
கேகா சப் 249,431 46.05% 171 7 178 180,579 33.34% 42 78 120 72,209 13.33% 3 44 47 21,807 4.03% 0 12 12 - - - - - 82.20%
கிளி வட 474 0.75% 0 0 0 3,009 4.73% 0 3 3 3,174 4.99% 0 5 5 488 0.77% 0 0 0 30,205 47.48% 33 1 34 74.82%
குரு வமே 505,749 47.68% 325 8 333 341,983 32.24% 50 153 203 120,163 11.33% 2 67 69 58,776 5.54% 0 35 35 - - - - - 81.62%
மன் வட 2,536 3.67% 0 3 3 23,587 34.14% 26 8 34 5,993 8.67% 0 8 8 91 0.13% 0 0 0 19,487 28.21% 25 3 28 80.36%
மாத் மத் 151,130 47.19% 138 3 141 107,117 33.44% 26 65 91 36,287 11.33% 4 30 34 15,413 4.81% 0 12 12 - - - - - 80.74%
மா.றை தெ 275,767 53.48% 207 1 208 135,672 26.31% 17 84 101 50,803 9.85% 0 37 37 47,922 9.29% 0 33 33 - - - - - 81.48%
மொன 164,295 53.88% 113 1 114 85,296 27.97% 8 48 56 30,580 10.03% 0 21 21 20,184 6.62% 0 14 14 - - - - - 85.83%
முல் வட 2,291 4.11% 1 1 2 8,279 14.85% 5 7 12 4,580 8.22% 0 7 7 394 0.71% 0 0 0 22,682 40.69% 30 2 32 77.76%
நுவ மத் 107,015 24.04% 64 20 84 165,597 37.20% 69 47 116 44,793 10.06% 13 23 36 11,365 2.55% 0 8 8 - - - - - 81.04%
பொல வம 94,136 35.09% 51 11 62 69,474 25.90% 10 33 43 89,005 33.18% 41 17 58 12,866 4.80% 0 8 8 - - - - - 84.27%
புத் வமே 182,637 42.94% 124 9 133 134,007 31.50% 38 59 97 53,699 12.62% 12 29 41 15,392 3.62% 0 10 10 - - - - - 73.30%
இர சப் 362,296 52.28% 230 2 232 218,987 31.60% 27 109 136 62,865 9.07% 1 39 40 33,152 4.78% 0 21 21 - - - - - 82.53%
திரு கிழ 37,638 16.99% 50 4 54 35,736 16.14% 10 28 38 28,969 13.08% 12 21 33 4,395 1.98% 0 2 2 32,446 14.65% 33 3 36 82.29%
வவு வட 7,866 9.33% 14 3 17 14,055 16.68% 5 13 18 14,388 17.07% 7 9 16 1,642 1.95% 0 2 2 22,020 26.13% 31 1 32 75.03%
மொத்தம் 5,006,837 40.47% 3,255 181 3,436 3,640,620 29.42% 872 1,561 2,433 1,497,234 12.10% 204 844 1,048 710,932 5.75% 1 433 434 337,877 2.73% 389 28 417 79.94%

குறிப்புகள்[தொகு]

 1. மகிந்த ராசபக்ச இலங்கை பொதுசன முன்னணியின் அதிகாரபூர்வமற்ற தலைவராகக் கருதப்படுகிறார், அதிகாரபூர்வமான தலைவர் ஜி. எல். பீரிஸ் ராசபக்சவின் நிகராளி ஆவார்.[1][2]
 2. 2.0 2.1 2.2 2008, 2009, 2011 தேர்தல்களில் வென்ற இடங்கள்.
 3. ஐதேக தலைமையில் புதிய சனநாயக முன்னணி வேட்பாளர்
 4. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தரவுகள்
 5. சனநாயக இடது முன்னணி ஒரு இடத்தில் தனித்தும், ஏனைவற்றில் இபொசமுயுடன் ஏனைய இடங்களிலும் போட்டியிட்டது.
 6. 6.0 6.1 லசசக 12 சபைகளில் தனித்தும், இபொசமுயுடன் ஏனைய இடங்களிலும் போட்டியிட்டது.
 7. 7.0 7.1 தமவிபு எட்டு சபைகளில் தனித்தும், இபொசமு உடன் இணைந்து ஏனையவற்றிலும் போட்டியிட்டது
 8. 8.0 8.1 அஇமகா 37 சபைகளில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேமுயிலும் போட்டியிட்டது.
 9. 9.0 9.1 சிமுகா 46 சபைகளில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேமுயிலும் போட்டியிட்டது.
 10. 10.0 10.1 தமுகூ 14 சபைகளில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேமுயிலும் போட்டியிட்டது.
 11. நஐதேமு ஐதேகவின் சின்னத்தில் போட்டியிட்டது.
 12. 12.0 12.1 இதொக 12 சபைகளில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ-இலும் போட்டியிட்டது.
 13. 13.0 13.1 தேசிய காங்கிரசு 10 சபைகளில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ-இலும் போட்டியிட்டது.
 14. ஐமசுகூ 208 சபைகளில் தனித்தும், 120 சபைகளில் இசுகயிலும் போட்டியிட்டது.
 15. ததேகூ இதகவின் பெயரிலும், அதன் வீட்டு சின்னத்திலும் போட்டியிட்டது.
 16. ததேமமு அஇதகா-இன் பெயரிலும் அதன் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டது.
 17. தமுகூ சமமு-இன் பெயரிலும் அதன் சின்னத்திலும் போட்டியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sri Lanka’s Local Government Polls: Time To Send Signals?". சண்டே டைம்சு. 9 சனவரி 2018. http://www.sundaytimes.lk/article/1037517/sri-lankas-local-government-polls-time-to-send-signals. பார்த்த நாள்: 14 January 2018. 
 2. Liyanagama, Lakdev (6-07-2017). "Waiting to Vote". டெய்லி நியூசு. http://www.dailynews.lk/2017/07/06/features/121063/waiting-vote?page=4. பார்த்த நாள்: 14-01-2018. 
 3. "Local polls fixed on Feb 10". சண்டே டைம்சு. 18-12-2017. http://www.sundaytimes.lk/article/1036618/local-polls-fixed-on-feb-10. பார்த்த நாள்: 23-12-2017. 
 4. "LG polls on February 10". டெய்லி நியூசு (Colombo, Sri Lanka). 19-12-2017. http://dailynews.lk/2017/12/19/local/137753/lg-polls-february-10. பார்த்த நாள்: 23-12-2017. 
 5. 5.0 5.1 5.2 "ALL SET FOR LG POLLS TODAY". டெய்லி நியூஸ். 10 பிப்ரவரி 2018. 10 பிப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 "LG polls on February 10". டெய்லி மிரர். 18-12-2017. http://www.dailymirror.lk/142394/LG-polls-on-February-. பார்த்த நாள்: 23-12-2017. 
 7. "Selections before elections". டெய்லி நியூஸ். 21-12-2017. http://www.dailynews.lk/2017/12/21/features/137950/selections-elections. பார்த்த நாள்: 23-12-2017. 
 8. 8.0 8.1 "LG polls, with several firsts". சண்டே ஒப்சேர்வர். 10-12-2017. http://www.sundayobserver.lk/2017/12/10/news/lg-polls-several-firsts. பார்த்த நாள்: 23-12-2017. 
 9. 9.0 9.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
 10. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
 11. "No major incidents at polls : Elections Commissioner". Sunday Times. Times Online. 10 பிப்ரவரி 2018. http://www.sundaytimes.lk/article/1039136/no-major-incidents-at-polls-elections-commissioner. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2018. 
 12. "Sri Lanka's local polls end peacefully with over 70 pct voter turnout". Xinhua. XinhuaNet. 10 பிப்ரவரி 2018. Archived from the original on 2018-02-10. https://web.archive.org/web/20180210160215/http://www.xinhuanet.com/english/2018-02/10/c_136965294.htm. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2018. 
 13. "Polling concludes: High turnout in most districts". Sunday Times. Times Online. 10 பிப்ரவரி 2018. http://www.sundaytimes.lk/article/1039130/polling-concludes-high-turnout-in-most-districts. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2018. 
 14. "Tough test ahead". டெய்லி நியூசு. 27-07-2017. http://www.dailynews.lk/2017/07/27/features/123333/tough-test-ahead?page=31. பார்த்த நாள்: 23-12-2017. 
 15. "LG elections and the story in numbers". சண்டே டைம்சு. 28-08-2011. http://www.sundaytimes.lk/110828/Columns/Lasandak.html. பார்த்த நாள்: 23-12-2017. 
 16. "Sri Lankan government to hold local government elections in Mullaitivu as soon as demining completed". Colombo Page. 11-10-2011. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035222/http://www.colombopage.com/archive_11B/Oct11_1318313222CH.php. பார்த்த நாள்: 23-12-2017. 
 17. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PRADESHIYA SABHA ACT, No. 15 OF 1987 Order". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1778/6. 2-10-2012. http://www.documents.gov.lk/files/egz/2012/10/1778-06_E.pdf. பார்த்த நாள்: 19-11-2017. 
 18. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PRADESHIYA SABHA ACT, No. 15 OF 1987 Order". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1998/2. 19-12-2016. http://www.documents.gov.lk/files/egz/2016/12/1998-02_E.pdf. பார்த்த நாள்: 15-11-2017. 
 19. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PRADESHIYA SABHA ACT, No. 15 OF 1987 Order". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 2043/57. 2 November 2017. http://www.documents.gov.lk/files/egz/2017/11/2043-57_E.pdf. பார்த்த நாள்: 15-11-2017. 
 20. "More than 2,000 women to be elected to local councils". சண்டே டைம்சு. 12-11-2017. http://www.sundaytimes.lk/171112/news/more-than-2000-women-to-be-elected-to-local-councils-268268.html. பார்த்த நாள்: 20-12-2017. 
 21. "Postponing Polls". சிலோன் டுடே. 18-08-2017. Archived from the original on 25 டிசம்பர் 2017. https://web.archive.org/web/20171225034849/http://www.ceylontoday.lk/columns20170401CT20180430.php?id=930. பார்த்த நாள்: 23 December 2017. 
 22. "Parties jostle for council seats". The Nation. 9 சனவரி 2011. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035323/http://www.nation.lk/2011/01/09/newsfe12.htm. பார்த்த நாள்: 23-12-2017. 
 23. "Terms of local government bodies extended". Daily FT. 30 மார்ச் 2015. http://www.ft.lk/news/terms-of-local-government-bodies-extended/56-400919. பார்த்த நாள்: 24-12-2017. 
 24. "WHO CAN DISSOLVE LOCAL COUNCILS?". சிலோன் டுடே. 12-04-2015. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035139/http://sandbox.ceylontoday.lk/76-89963-news-detail-who-can-dissolve-local-councils-the-guard-post-111.html. பார்த்த நாள்: 24-12-2017. 
 25. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications MUNICIPAL COUNCILS ORDINANCE Order under Section 10 (2) (b)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1907/50. 27 மார்ச் 2015. http://www.documents.gov.lk/files/egz/2015/3/1907-50_E.pdf. 
 26. "Local Government Authorities to be dissolved on the 15th of May : Minister John Amaratunga". நியூஸ் பெர்ஸ்ட். 9-04-2015. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225060612/http://newsfirst.lk/english/2015/05/local-government-authorities-to-be-dissolved-on-the-15th-of-may-minister-john-amaratunga/93847. பார்த்த நாள்: 24-12-2017. 
 27. "Local government bodies to be dissolved on May 15". அத தெரண. 9 மே 2015. http://www.adaderana.lk/news/30790/local-government-bodies-to-be-dissolved-on-may-15. பார்த்த நாள்: 24-12-2017. 
 28. "Local Govt. bodies get extended term". சண்டே ஒப்சேர்வர். 27-12-2015. http://archives.sundayobserver.lk/2015/12/27/pol02.asp. பார்த்த நாள்: 24-12-2017. 
 29. "Official Terms of 65 More Local Government Institutions End from Today". Hiru News. 31-07-2015. http://www.hirunews.lk/114100/official-term-65-more-local-government-institutions-end-from-today. பார்த்த நாள்: 24-12-2017. 
 30. "Colombo Mayor to say goodbye, term of LG bodies not likely to be extended". அத தெரண. 30-06-2016. http://www.adaderana.lk/news.php?nid=35872. பார்த்த நாள்: 24-12-2017. 
 31. "Term of Office of 23 Local Government Bodies including the CMC will not be Extended". Hiru News. 1-07-2016. http://www.hirunews.lk/136893/term-office-23-local-government-bodies-including-cmc-will-be-extended. பார்த்த நாள்: 24-12-2017. 
 32. "Muzammil irked by dissolution of local bodies". தி ஐலண்டு. 4-07-2016. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225203007/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=148043. பார்த்த நாள்: 24-12-2017. 
 33. "New election system for LG bodies passed". டெய்லிமிரர். 10-10-2012. http://www.dailymirror.lk/22591/preferential-voting-system-abolished. பார்த்த நாள்: 23-12-2017. 
 34. "LG elections amendment draft bills passed". அத தெரண. 10-10-2012. http://www.adaderana.lk/news.php?nid=20020. பார்த்த நாள்: 23-12-2017. 
 35. "Local Authorities (Special Provisions) Act, No. 21 of 2012" (PDF). இலங்கை நாடாளுமன்றம்.
 36. "Local Authorities Elections (Amendment) Act, No. 22 of 2012" (PDF). இலங்கை நாடாளுமன்றம்.
 37. "LG Elections (amendment) Bill passed". சிலோன் டுடே. 26-08-2017. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035009/http://www.ceylontoday.lk/print20170401CT20170630.php?id=28527. பார்த்த நாள்: 24-12-2017. 
 38. "LG elections bill passed". டெய்லி நியூசு. 26-08-2017. http://www.dailynews.lk/2017/08/26/local/126361/lg-elections-bill-passed. பார்த்த நாள்: 24-12-2017. 
 39. "Local Authorities Elections (Amendment) Act, No. 16 of 2017" (PDF). இலங்கை நாடாளுமன்றம். 24-12-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 40. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications DECLARATION UNDER SUB SECTION (1) OF SECTION 3A OF THE LOCAL AUTHORITIES ELECTION ORDINANCE (CHAP. 262)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1788/15. 12-12-2012. http://www.documents.gov.lk/files/egz/2012/12/1788-15_E.pdf. 
 41. 41.0 41.1 "Is the Govt. really scared of elections". டெய்லி மிரர். 23-06-2017. http://www.dailymirror.lk/article/Is-the-Govt-really-scared-of-131451.html. பார்த்த நாள்: 24-12-2017. 
 42. "Ward-based electoral system for local authorities recommended". சண்டே டைம்சு. 28-06-2015. http://www.sundaytimes.lk/150628/news/ward-based-electoral-system-for-local-authorities-recommended-154990.html. பார்த்த நாள்: 24-12-2017. 
 43. "CA stays operation of Gazette on delimitation of local authorities". Daily FT. 23-11-2017. http://www.ft.lk/news/CA-stays-operation-of-Gazette-on-delimitation-of-local-authorities/56-643872. பார்த்த நாள்: 24-12-2017. 
 44. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Order under Section 3C". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/26. 21-08-2015. http://www.documents.gov.lk/files/egz/2015/8/1928-26_E.pdf. 
 45. "Demarcation headache brings in new committee". சண்டே டைம்சு. 15-10-2015. http://www.sundaytimes.lk/151025/news/demarcation-headache-brings-in-new-committee-169193.html. பார்த்த நாள்: 24-12-2017. 
 46. "Delimitation reported handed over". டெய்லி மிரர். 17 சனவரி 2017. http://www.dailymirror.lk/article/Delimitation-reported-handed-over-122303.html. பார்த்த நாள்: 24-12-2017. 
 47. Dias, Keshala (17 சனவரி 2017). "Delimitation Appeals Committee report handed over". நியூஸ் பெர்ஸ்ட். Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225102153/http://newsfirst.lk/english/2017/01/159928/159928. 
 48. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Order under section 3D". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 2006/44. 17 February 2017. http://www.documents.gov.lk/files/egz/2017/2/2006-44_E.pdf. 
 49. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Order under section 3D". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 2006/44. 17 February 2017. http://www.documents.gov.lk/files/egz/2017/2/2006-44_E.pdf. 
 50. "Increasing Female Participation In Elections". த சண்டே லீடர். 21 பிப்ரவரி 2016. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225091944/http://www.thesundayleader.lk/2016/02/21/increasing-female-participation-in-elections/. பார்த்த நாள்: 23-12-2017. 
 51. "Women’s experience and knowledge need to be incorporated in policy making: Empowering women". சண்டே ஒப்சர்வர் (Colombo, Sri Lanka). 26-06-2016. http://archives.sundayobserver.lk/2016/06/26/pol02.asp. பார்த்த நாள்: 23-12-2017. 
 52. "Local Authorities Elections (Amendment) Act, No. 1 of 2016" (PDF). இலங்கை நாடாளுமன்றம். 23-12-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 53. "Election Commission decides to call nominations for 93 Local Government bodies with no legal obstacle". Daily FT. 27-11-2017. http://www.ft.lk/news/Election-Commission-decides-to-call-nominations-for-93-Local-Government-bodies-with-no-legal-obstacl/56-644149. பார்த்த நாள்: 24 December 2017. 
 54. "LG Polls: Nominations to be accepted from Dec 11". அத தெரண. 27-11-2017. http://www.adaderana.lk/news/44454/lg-polls-nominations-to-be-accepted-from-dec-11. பார்த்த நாள்: 24-12-2017. 
 55. "23 of 523 nomination papers rejected". டிஎன்எல். 15-12-2017. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035407/https://www.newsradio.lk/2017/12/15/23-523-nomination-papers-rejected-commission/. பார்த்த நாள்: 24-12-2017. 
 56. "Accepting nominations for remaining 248 local government bodies begin today". Colombo Page. 18-12-2017. http://www.colombopage.com/archive_17B/Dec18_1513570598CH.php. பார்த்த நாள்: 24-12-2017. 
 57. "Over 1500 nominations accepted in the second stage for elections of 248 local government bodies, 29 rejected". Colombo Page. 22-12-2017. http://www.colombopage.com/archive_17B/Dec22_1513958930CH.php. பார்த்த நாள்: 24-12-2017. 
 58. "1553 groups seeks victory in LG polls". news.lk. 22-12-2017. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225035033/https://www.news.lk/news/sri-lanka/item/19052-1553-groups-seeks-victory-in-lg-polls. பார்த்த நாள்: 24-12-2017. 
 59. "Local Government election on February 10". அத தெரண. 18-12-2017. http://www.adaderana.lk/news.php?nid=44861. பார்த்த நாள்: 24-12-2017. 
 60. "Local Government elections to be held on February 10". த சண்டே லீடர். 18-12-2017. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225091819/http://www.thesundayleader.lk/2017/12/18/local-government-elections-to-be-held-on-february-10/. பார்த்த நாள்: 24-12-2017. 
 61. "LG polls on 10 February". Daily FT. 19-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-on-10-February/44-645526. பார்த்த நாள்: 23-12-2017. 
 62. Riza, Shaahidah (19-12-2017). "LG PollS on 10 Feb – EC". சிலோன் டுடே. Archived from the original on 2017-12-25. https://web.archive.org/web/20171225034949/https://ceylontoday.lk/print20170401CT20170630.php?id=36654. பார்த்த நாள்: 24-12-2017. 
 63. "Postal voting on January 25, 26". டெய்லி மிரர். 25-12-2017. http://www.dailymirror.lk/article/Postal-voting-on-January--142817.html. பார்த்த நாள்: 25-12-2017. 
 64. "SC order stays election for Elpitiya PS". The Sunday Times (Colombo, Sri Lanka). 30 January 2018. http://www.sundaytimes.lk/article/1038573/sc-order-stays-election-for-elpitiya-ps. பார்த்த நாள்: 11 February 2018. 
 65. Ariff, Yusuf (30 January 2018). "Court orders not to hold election for Elpitiya PS". Ada Derana (Colombo, Sri Lanka). http://www.adaderana.lk/news/45709/court-orders-not-to-hold-election-for-elpitiya-ps. பார்த்த நாள்: 11 February 2018. 
 66. "SLFP with UPFA for LG elections".
 67. "SLFP to contest under UPFA ticket - Amaraweera". 2-12-2017. Check date values in: |date= (உதவி)
 68. "JHU to contest the LG Election with the UNP". News Radio. 2-11-2017. 2017-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29-12-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 69. http://www.thesundayleader.lk/2017/10/29/slmc-decides-to-contest-with-unp/
 70. 70.0 70.1 "தமிழ் முற்போக்கு கூட்டணி ஏணியிலும் யானையிலும் போட்டி". தினகரன். 21-12-2017. http://thinakaran.lk/2017/12/22/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/21735/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF. பார்த்த நாள்: 29-12-2017. 
 71. "SLFP faces decisive moment, crucial make-or-break meeting on Friday". Sri Lanka News Papers. 29-10-2017. 2017-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-12-19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 72. "Sri Lanka Podujana Peramuna makes deposits for LG polls – Colombo Gazette". 29-12-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 73. 73.0 73.1 73.2 "Local Authorities Elections 2018". Colombo, Sri Lanka: Election Commission of Sri Lanka / news.lk. 7 மே 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 April 2018 அன்று பார்க்கப்பட்டது.