உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
Akila Ilankai Thamil Congress
අකිල ඉලංකෙයි තමිල් කොංග්‍රස්
நிறுவனர்கணபதி காங்கேசர் பொன்னம்பலம்
Secretaryகஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தொடக்கம்ஆகத்து 29, 1944 (1944-08-29)
தலைமையகம்15 Queen's Road, Colpetty, கொழும்பு 3
கொள்கைதமிழ்த் தேசியம்
தேசியக் கூட்டணிதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
தேர்தல் சின்னம்
Bicycle
கட்சிக்கொடி

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]