வண்ணார்பண்ணை
வண்ணார்பண்ணை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°41′0″N 80°1′0″E / 9.68333°N 80.01667°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | யாழ்ப்பாணம் |
வண்ணார்பண்ணை (Vannarpannai) தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு புறநகர் ஆகும். இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அமைவிடம்
[தொகு]தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது.
வரலாறு
[தொகு]யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
கோயில்கள்
[தொகு]- வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்
- வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்)
- வண்ணார்பண்ணை நடேசர் கோவில்
- சாந்தையர்மடம் கற்பக விநாயகர் ஆலயம்
- வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
- வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயம்[1]
- வண்ணை வடமேற்கு அண்ணமார் களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி தேவஸ்தானம் (பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில்)
- காட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில்
- வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்
பாடசாலைகள்
[தொகு]- யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்
- வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்
- வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- ஒஸ்மானியாக் கல்லூரி
- கதீஜாக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kiḷi-nocci, Nocci-mōṭṭai, Nocciyā-gama, Nika-vala". TamilNet. March 6, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22453.