அகில இலங்கை மக்கள் காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
All Ceylon Peoples Congress
தலைவர்ரிசாத் பதியுத்தீன்
நிறுவனர்ரிசாத் பதியுத்தீன்
தொடக்கம்2008
பிரிவுசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
சமயம்இசுலாம்
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
3 / 225
தேர்தல் சின்னம்
மயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரசு (All Ceylon Peoples Congress) என்பது இலங்கையின் இசுலாமிய சமூகத்தைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து 2004 ஆம் ஆண்டில் பிரிந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 2008 ஆம் ஆண்டில் தனிக்கட்சியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இதன் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்பட்டது.

2010 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்சவை இக்கட்சி ஆதரித்தது[1]. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அரசுக் கூட்டணியில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. இக்கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சித் தலைவர் ரிசாத் பதியுத்தீன், உனைசு பாரூக், மட்டக்களப்பில் வெற்றி பெற்ற எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா ஆகியோராவர். இவர்களில் பதியுதீன், இஸ்புல்லா ஆகியோர் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

:இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள்