ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
Eelam People's Democratic Party
நிறுவனர் டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் டக்ளஸ் தேவானந்தா
தொடக்கம் நவம்பர் 1987
பிரிந்தவை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தலைமையகம் 121 பார்க் வீதி, கொழும்பு 05
செய்தி ஏடு தினமுரசு
தேசியக் கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
3 / 225
மாகாணசபை உறுப்பினர்கள்
2 / 417
தேர்தல் சின்னம்
வீணை
கட்சிக்கொடி
Flag of Eelam People’s Democratic Party.svg
இணையதளம்
epdpnews.com

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (Eelam People Democratic Party - EPDP) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியும், அரசு-சார்பு துணை இராணுவப் படையும் ஆகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி இலங்கை அரசில் பங்களிக்கின்றது.

இக்கட்சி பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரண்பட்ட அல்லது மாற்று கொள்கைகளை முன்னிறுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பின்னணி[தொகு]

டக்ளசு தேவானந்தா ஆரம்ப ஈழ இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என அழைக்கப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். 1980 ஆம் ஆண்டில் ஈரோசில் இருந்து பத்மநாபா, அ. வரதராஜப் பெருமாள் ஆகியோர் பிரிந்து சென்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். இவர்களுடம் தேவானந்தாவும் இணைந்து கொண்டார். 1986 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் தேவானந்தாவுக்கும், பத்மநாபாவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, இக்கட்சி ரஞ்சன் குழு, தேவானந்தா குழு என மேலும் இரண்டாகப் பிரிந்தது. தேவானந்த ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்த பரந்தன் ராஜன் என்பவருடன் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். ராஜன் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றியதை தேவானந்தா ஏற்க மறுத்தார், அத்துடன் ஈழப்போரில் இந்திய அமைதிப்படையின் ஊடுருவலையும் ஏற்க மறுத்து சென்னையில் இருக்கும் போது ஈழ மக்கள் சனநாயகக் கட்சி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (22 நவம்பர் 2001). "The Douglas Devananda phenomenon". சண்டே லீடர்.

வெளி இணைப்புகள்[தொகு]