அல்லைப்பிட்டிப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்லைப்பிட்டிப் படுகொலைகள்
இலங்கையின் அமைவிடம்
இடம்அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
நாள்மே 13, 2006 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழ் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
துப்பாக்கிச் சூடு
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)13
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இலங்கை கடற்படை, ஈ.பி.டி.பி

அல்லைப்பிட்டிப் படுகொலைகள் 2006, மே 13 அன்று இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.[1]

நிகழ்வு[தொகு]

2006, மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இம்மூன்று கிராமங்களிலும், இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். அல்லைப்பிட்டியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் கொல்லப்பட்டனர். புளியங்கூடலில் மூன்று பேரும், வங்களாவடியில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.[2] இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படைக் கப்பல் ஒன்றைத் தாக்கி 18 மாலுமிகளைக் கொன்றிருந்தனர்.[1]

பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அடுத்து சுமார் 150 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.[1] புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த சிலர் தாம் கடற்படையினரால் தாக்கப்படட்தாகவும், படுகொலைகளை அவர்களே நடத்தியிருந்தனர் என்றும் கூறியுள்ளனர்.[3]

தாக்கங்கள்[தொகு]

இலங்கை அரசு இத்தாக்குதல்களை மறுதலித்திருந்ததுடன், விடுதலைப் புலிகளே தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது.[3] அதே வேளையில், புலிகள் அரசாங்கமே இக்கொலைகளைச் செய்டஹ்தாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இப்படுகொலைகளை நடத்தியதில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படையினர், துணை இராணுவப் படையினரான [[ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரை பன்னாட்டு நெருக்கடிக் குழு அடையாளம் காட்டியிருக்கிறது.[4] உள்ளூரில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு என்ற மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் அமைப்பு இத்தாக்க்தலை நடத்தியவர்கள் கடற்படையினரும், துணை இராணுவக் குழுவினருமே எனத் தெரிவித்துள்ளது[5] தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கடற்படையினரும், ஈபிடிபியினரும் இருந்தமை பற்றித் தமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிவித்திருந்தது.[2]

படுகொலைகளின் பின்னர் இலங்கையின் ஆங்கிலிக்க ஆயர் துலீப் டி சிக்கேரா நிலைமைகளை ஆராயும் பொருட்டு அல்லைப்பிட்டிக்குச் சென்று பார்த்து, பின்வருமாறு கூறியிருந்தார்: {{Quotation|"அல்லைப்பிட்டித் தீவுக்கு நான் சென்ற போது, பொதுமக்கள் அங்கு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அங்கிருந்த இறுக்கமான நிலைமைகளை நான் அவதானித்தேன். ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இக்குடும்பத்தில் எஞ்சியிருப்போர் கொலையாளிகளைத் தாம் அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்திருந்தனர். பொதுமக்களை இத்தீவில் இருந்து வெளியேறும் படி குழுவொன்று அச்சுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் அங்கு பயத்துடன் வாழ்கிறார்கள். இப்படுகொலைகள் குறித்து விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமே இலங்கைப் படைத்துறையினருக்கும், மக்களுக்கும் இடையே சுமுகமான உறவை பேண முடியும்.".[6]

விசாரணைகள்[தொகு]

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகள், சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழையாமை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் எழுதியுள்ளன.[7]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Luthra, Dumeetha (2006-05-20). "Sri Lanka villagers flee massacre". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5000920.stm. பார்த்த நாள்: 2007-08-16. 
  2. 2.0 2.1 பன்னாட்டு மன்னிப்பு அவை கனடா (2006-05-16). "Sri Lanka: Amnesty International condemns killings of civilians". பன்னாட்டு மன்னிப்பு அவை கனடா. Archived from the original on 2007-09-11. https://web.archive.org/web/20070911101052/http://www.amnesty.ca/resource_centre/news/view.php?load=arcview&article=3479&c=Resource+Centre+News. பார்த்த நாள்: 2007-08-16. 
  3. 3.0 3.1 Timberlake, Ian (2006-05-21). "Refugees reach Tamil capital after fleeing alleged massacre". ReliefWeb. Archived from the original on 2007-09-27. https://web.archive.org/web/20070927193110/http://www.reliefweb.int/rw/rwb.nsf/480fa8736b88bbc3c12564f6004c8ad5/1883646c7fa6ebe349257176000be78c?OpenDocument. பார்த்த நாள்: 2007-08-16. 
  4. பன்னாட்டு நெருக்கடிக் குழு (2007-06-14). "Sri Lanka's Human Rights Crisis" (பி.டி.எவ்). Asia Report (135): 8–9. http://www.reliefweb.int/rw/RWFiles2007.nsf/FilesByRWDocUnidFilename/DBC51E0313E10AB5852572FA006892C6-Full_Report.pdf/$File/Full_Report.pdf. பார்த்த நாள்: 2007-08-16. 
  5. University Teachers for Human Rights (Jaffna) (2006-11-07). "The Choice between Anarchy and International Law with Monitoring". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. மூல முகவரியிலிருந்து 2007-07-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-16.
  6. de Chickera, Duleep (2006-05-31). "Report on a Pastoral Visit to the North". ஆங்கிலிக்க ஒன்றியம். மூல முகவரியிலிருந்து 2007-09-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-08-16.
  7. "Allaipiddy case stalls in Kayts Courts". LankaNewspapers.com. 2007-03-19. http://www.lankanewspapers.com/news/2007/3/13199.html. பார்த்த நாள்: 2007-08-16. 

வெளி இணைப்புகள்[தொகு]