ரஞ்சன் விஜேரத்ன
ஜெனரல் ரன்ஜன் விஜேரத்ன | |
---|---|
பதவியில் 1988–1993 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 4, 1931 இலங்கை |
இறப்பு | மார்ச் 2, 1991 கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | டிலாண்டே சூரிய பண்டார |
பிள்ளைகள் | ரொகான் விஜேரத்ன |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தோமையார் கல்லூரி |
பணி | அரசியவாதி |
தொழில் | பெருந்த்தோட்ட நிர்வாகி |
சமயம் | பௌத்தம் |
இணையம் | http://www.ranjanwijeratnefoundation.org |
ஜெனரல் ரன்ஜன் விஜேரத்ன (ஏப்ரல் 4, 1931 - மார்ச் 2, 1991) இலங்கையின் அரசுத்தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் 1989 முதல் 1991 வரை வெளிநாட்டமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும்[1] பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர்[2].
தொடக்க வாழ்க்கை[தொகு]
வல்பொல முதலிகே யோர்ஜ் ஏர்கிலிஸ் விஜேரத்னவுக்கும் ரொசலிண்ட் மரியா செனாநாயக்கவுக்கும் பிறந்த ரஞ்சன் குருத்தலாவை புனித தோமையார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கிசை புனித தோமையார் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளியையும் மேற்கொண்டார். பின்னர் பெருந்தோட்டத்துறையில் அதிகாரியாக இணைந்து பணியாற்றினார். 1978 ஆம் அண்டு விவசாயத்துறை ஆராய்ச்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டத்துறைக்குப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இலங்கை நீள் துப்பாக்கி படையின் லுதினன் கேர்னலாக நியமிக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
1988 ஆம் ஆண்டுஐக்கிய தேசியக் கட்சியின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது அரச பணிகள் அனைத்திலிருந்தும் விலகினார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பாதுகாப்புப் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார்.
இறப்பு[தொகு]
1991 மார்ச் 2 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், அராலியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தூர இருந்து இயக்கும் ஊர்தி வெடிகுண்டின் மூலம் கொலை செய்யப்பட்டார்[3]. இதன் போது 13 பொதுமக்கள், 5 அமைச்சு பாதுகாப்பு ஊழியர்கள், அமைச்சர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்[1][4].
லுதினன் கேர்னர் ரஞ்சன் விஜேரத்ன இறப்பின் பின்னர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் மேலும் கொத்தலாவலை பாதுகாப்பு பயிலகம் (தற்போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்) சட்டத்துறையில் முனைவர் பட்டத்தை வழங்கியது.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் அப்துல் காதர் சாவுல் அமீட் |
இலங்கை வெளிநாட்டமைச்சர் 1989–1993 |
பின்னர் அப்துல் காதர் சாவுல் அமீட் |