இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் 16-வது
நாடாளுமன்றத் தேர்தல்

← 2015 5 ஆகத்து 2020

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை
வாக்களித்தோர்75.89%
  First party Second party
  Mahinda Rajapaksa 2006.jpg Sajith Premadasa.jpg
தலைவர் மகிந்த ராசபக்ச சஜித் பிரேமதாச
கட்சி இலங்கை பொதுசன முன்னணி ஐக்கிய மக்கள் சக்தி
தலைவரான ஆண்டு 2019 2020
தலைவரின் தொகுதி குருணாகல் கொழும்பு
முந்தைய தேர்தல் 95[a] புதிய கட்சி
வென்ற தொகுதிகள் 145 54
மாற்றம் Green Arrow Up Darker.svg50 Green Arrow Up Darker.svg54
மொத்த வாக்குகள் 6,853,690 2,771,980
விழுக்காடு 59.09% 23.90%
மாற்றம் Green Arrow Up Darker.svg16.71% Green Arrow Up Darker.svg23.90%

  Third party Fourth party
  R. Sampanthan.jpg AnuraKumara.jpg
தலைவர் இரா. சம்பந்தன் அனுர குமார திசாநாயக்க
கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய மக்கள் சக்தி
தலைவரான ஆண்டு 2001 2009
தலைவரின் தொகுதி திருகோணமலை கொழும்பு
முந்தைய தேர்தல் 16 6[b]
வென்ற தொகுதிகள் 10 3
மாற்றம் Red Arrow Down.svg6 Red Arrow Down.svg3
மொத்த வாக்குகள் 327,168 445,958
விழுக்காடு 2.82% 3.84%
மாற்றம் Red Arrow Down.svg1.80% Red Arrow Down.svg1.03%

Wahlbezirkskarte Parlament Sri Lanka 2020.svg
தேர்தல் பிரிவுகள் வென்ற கட்சிகள்

– இபொசமு – ஐமச – ததேகூ – இசுக – ஈமசக

– ஏனையவை

முந்தைய பிரதமர்

மகிந்த ராசபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

பிரதமர்-தெரிவு

மகிந்த ராசபக்ச
இலங்கை பொதுசன முன்னணி

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2020 Sri Lankan parliamentary election) இலங்கையின் 16-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.[1][2][3] 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர்.[4][5]

ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.[6][7][8], எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின.[9][10][11] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது. இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.[12]

நாட்டில் பரவிய கொரோனாவைரசுப் பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஆகத்து 5 இல் நடத்தப்பட்டது.[13][14]

இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 2015 தேர்தலை விட சிறிது குறைவானதாகும்.[15]

2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.[16] பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.[17] 2020 மார்ச் 2 இல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிடு-19 பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு,[18][19] புதிய நாள் சூன் 20 என அறிவிக்கப்பட்டது. கொரோனாவைரசுத் தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகத்து 5 இற்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.[20][21]

காலக்கோடு[தொகு]

2018
  • 9 நவம்பர் 2018 - அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019 சனவரி 5 இற்குத் தேர்தல் தேதியை அறிவித்தார்.[22]
  • 13 திசம்பர் 2018 - மீயுயர் நீதிமன்றம் அரசுத்தலைவரின் கட்டளை அரசியலமைப்புக்கு எதிரானதெனத் தீர்ப்பளித்து, நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்தது.[23]
  • 16 திசம்பர் 2018 - மகிந்த ராசபக்ச பிரதமராகப் பதவியேற்றதை மீயுயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.[24][25]
2019
2020
  • 30 சனவரி 2020 - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.[27]
  • 10 பெப்ரவரி 2020 - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய தேர்தல் கூட்டணியை அறிவித்தார்.[28]
  • 17 பெப்ரவரி 2020 - சிறீலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பு மகிந்த ராசபக்சவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செயப்பட்டது.[29]
  • 2 மார்ச் 2020 - 15-வது நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[18] வேட்புமனுக்கள் 2020 மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.[18]
  • 3 மார்ச் 2020 - நாடாளுமன்றம் அரசுத்தலைவரினால் கலைக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் மார்ச் 18.[30]
  • 19 மார்ச் 2020 - கோவிடு-19 தொற்றின் காரணமாக தேர்தல்கள் காலவரயறையின்றித் தள்ளிப்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[31]
  • 20 ஏப்ரல் 2020 - 2020 சூன் 20 ஐ புதிய தேர்தல் நாளாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[32] [33]
  • 6 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[34]
  • 9 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க ரணவக்க (ஜாதிக எல உறுமய), குமார வெல்கம ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[35]
  • 18 மே 2020 - சூன் 20 தேர்தல் நாளுக்கு எதிரான 8 மனுக்கள் மீதான வழக்குகள் மீயுயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.[36]
  • 22 மே 2020 – தேர்தலுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் மீயுயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.[37]
  • 2 சூன் 2020 – மீயுயர் நீதிமன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்குகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்தது.[38]
  • 10 சூன் 2020 – தேர்தலுக்கான புதிய தேதியாக ஆகத்து 5 ஐ தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.[39]
  • 30 சூலை 2020 - தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் 2020 ஆகத்து 2 நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணையகம் அறிவித்தது.[40]
  • 6 ஆகத்து 2020 - வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 9:00 மணிக்கு நாடளாவிய அளவில் ஆரம்பமாயின.[41]

பின்னணி[தொகு]

2018 அரசியலமைப்பு நெருக்கடியின் போது, மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார். ராசபக்ச தனது பெரும்பான்மையை wநாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.[16]

ஆனாலும், நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து மீயுயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2018 திசம்பர் 13 இல், நாடாளுமன்றக் கலைப்பு சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[42]

கோவிட்-19[தொகு]

2020 மார்ச் 19 இல், இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்திருந்தாலும், திட்டமிட்டபடி வேட்பு மனுக்கள் 2020 மார்ச் 18 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[43] வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவடைந்த அடுத்த நாள் மார்ச் 19 இல் தேர்தல்கள் ஆணையகம் தேர்தலை ஒத்தி வைத்தது.[44] 2020 ஏப்ரல் 25 தேர்தல் நாள் 2020 சூன் 20 இற்குத் தள்ளிப் போடப்பட்டது. கோவிட்-19 தாக்கம் குறையாததனால், மீண்டும் 2020 ஆகத்து 5 வரை தள்ளிப்போடப்பட்டது.

தேர்தல் விபரங்கள்[தொகு]

9-வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2019 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்காளர் பட்டியலிற்கமைய 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களும் (1,785,964), வன்னியில் அதி குறைந்த வாக்காளர்களும் (287,024) வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.[45]

தேர்தல் முறைமை[தொகு]

பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[46][47] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்[48]

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதா­ரண வதி­வா­ள­ராக இருக்­கின்­றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்­ளலாம்.[49] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்­வொரு வாக்­கா­ளரும் தத்தம் ஆளடை­யா­ளத்தை செல்­லு­ப­டி­யான ஆளடை­யாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூ­பிக்க வேண்டும்.[49] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[49]

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு[தொகு]

மாகாணம் தேர்தல் மாவட்டம் ஒதுக்கப்பட்ட
இடங்கள்[50]
வடக்கு யாழ்ப்பாணம்

வன்னி

07

06

வடமத்தி அனுராதபுரம்

பொலன்னறுவை

09

05

வடமேல் குருநாகல்

புத்தளம்

15

08

கிழக்கு மட்டக்களப்பு

அம்பாறை (திகாமடுல்ல)

திருகோணமலை

05

07

04

மத்திய கண்டி

மாத்தளை

நுவரெலியா

12

05

08

மேல் கொழும்பு

கம்பகா

களுத்துறை

19

18

10

ஊவா பதுளை

மொனராகலை

09

06

சப்ரகமுவ இரத்தினபுரி

கேகாலை

11

09

தென் காலி

மாத்தறை

அம்பாந்தோட்டை

09

07

07

மொத்தம் 196

முடிவுகள்[தொகு]

அதிகாரபூர்வ முடிவுகள் 2020 ஆகத்து 6 மாலை முதல் வெளிவர ஆரம்பித்தன. முதலில் காலி மாவட்டத்திற்கான அஞ்சல்-வழி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன.[51]

மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 59.09% வாக்குகளுடன் 145 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.[52][53][54] இபொசமு வாக்கெடுப்பு மூலம் 128 இடங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 17 இடங்களையும் பெற்று 113 என்ற அறுதிப் பெரும்பான்மையை இலகுவாகக் கடந்து வென்றது.[55]

தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்த தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய சிறிய தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஐந்து இடங்கள் மட்டுமே பொதுசன முன்னணிக்குத் தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தினதும் பிரதமரினதும் பங்கை வலுப்படுத்துவது, நீதித்துறை நியமனங்கள், காவல்துறை, பொது சேவைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற 2015 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை முறியடிக்க இப்பெரும்பான்மை பயன்படுத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.[56] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை (தேசியப் பட்டியல் மூலமாக) மட்டுமே பெற்று வரலாற்றில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.[57][58] வட, கிழக்கில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்புகளை சந்தித்தது.சதே வேளையில் அரசு-சார்புக் கட்சிகள் சில இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.

தேசிய வாரியாக முடிவுகள்[தொகு]

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[59][60][61]
Sri Lanka Parliament 2020.svg
கட்சிகளும் கூட்டணிகளும் வாக்குகள் % இருக்கைகள்
தேர்தல் மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம் +/–
  6,853,690 59.09 128 17 145 Green Arrow Up Darker.svg50
  2,771,980 23.90 47 7 54 புதியது
  445,958 3.84 2 1 3 Red Arrow Down.svg3
  327,168 2.82 9 1 10 Red Arrow Down.svg6
  ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி) 249,435 2.15 0 1 1 Red Arrow Down.svg105
  67,766 0.58 1 1 2 Green Arrow Up Darker.svg2
நமது சக்தி மக்கள் கட்சி
67,758 0.58 0 1 1 Green Arrow Up Darker.svg1
  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692 0.58 1 0 1 Green Arrow Up Darker.svg1
  இலங்கை சுதந்திரக் கட்சி[iv] 66,579 0.57 1 0 1 Green Arrow Up Darker.svg1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 61,464 0.53 2 0 2 Green Arrow Up Darker.svg1
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு 55,981 0.48 1 0 1 Green Arrow Up Darker.svg1
 
51,301 0.44 1 0 1 Green Arrow Up Darker.svg1
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு[vi] 43,319 0.37 1 0 1 Green Arrow Up Darker.svg1
  தேசியக் காங்கிரஸ்[i] 39,272 0.34 1 0 1 Green Arrow Up Darker.svg1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[vii] 34,428 0.30 1 0 1 Straight Line Steady.svg
ஐக்கிய அமைதிக் கூட்டணி 31,054 0.27 0 0 0 Straight Line Steady.svg
  அகில இலங்கைத் தமிழர் மகாசபை 30,031 0.26 0 0 0 Straight Line Steady.svg
  தேசிய அபிவிருத்தி முன்னணி 14,686 0.13 0 0 0 Straight Line Steady.svg
  முன்னிலை சோசலிசக் கட்சி 14,522 0.13 0 0 0 Straight Line Steady.svg
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி 11,464 0.10 0 0 0 Straight Line Steady.svg
  தமிழர் விடுதலைக் கூட்டணி 9,855 0.08 0 0 0 Straight Line Steady.svg
இலங்கை சோசலிசக் கட்சி 9,368 0.08 0 0 0 Straight Line Steady.svg
மக்கள் நல முன்னணி 7,361 0.06 0 0 0 Straight Line Steady.svg
சிங்கள தேசிய முன்னணி 5,056 0.04 0 0 0 Straight Line Steady.svg
  புதிய சனநாயக முன்னணி 4,883 0.04 0 0 0 Straight Line Steady.svg
ஐக்கிய இடது முன்னணி 4,879 0.04 0 0 0 Straight Line Steady.svg
  இலங்கை லிபரல் கட்சி 4,345 0.04 0 0 0 Straight Line Steady.svg
  தேசிய மக்கள் கட்சி 3,813 0.03 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 3,611 0.03 0 0 0 Straight Line Steady.svg
தேசிய சனநாயக முன்னணி 3,488 0.03 0 0 0 Straight Line Steady.svg
  இலங்கைத் தொழிற் கட்சி 3,134 0.03 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக இடது முன்னணி 2,964 0.03 0 0 0 Straight Line Steady.svg
புதிய சிங்கள மரபு 1,397 0.01 0 0 0 Straight Line Steady.svg
  ஐக்கிய சோசலிசக் கட்சி 1,189 0.01 0 0 0 Straight Line Steady.svg
தாய்நாடு மக்கள் கட்சி 1,087 0.01 0 0 0 Straight Line Steady.svg
  ஈழவர் சனநாயக முன்னணி 1,035 0.01 0 0 0 Straight Line Steady.svg
  சோசலிச சமத்துவக் கட்சி 780 0.01 0 0 0 Straight Line Steady.svg
  லங்கா சமசமாஜக் கட்சி[iii] 737 0.01 0 0 0 Straight Line Steady.svg
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு 632 0.01 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 145 0.00 0 0 0 Straight Line Steady.svg
  சுயேச்சைகள் 223,622 1.93 0 0 0 Straight Line Steady.svg
செல்லுபடியான வாக்குகள் 11,598,929 100% 196 29 225 Straight Line Steady.svg
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 744,373 6.03%
மொத்த வாக்குகள் 12,343,302
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம் 16,263,885 75.89%
அடிக்குறிப்புகள்:

மாவட்ட வாரியாக முடிவுகள்[தொகு]

ஐக்கிய மக்கள் சக்தி வென்ற மாவட்டங்கள்
இலங்கை பொதுசன முன்னணி வென்ற மாவட்டங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற மாவட்டங்கள்
2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் மாவட்ட வாரியான முடிவுகள்[59][60][61]
தேர்தல்
மாவட்டம்
மாகாணம் இபொசமு ஐமச ததேகூ மவிமு ஏனையவை மொத்தம் வாக்குவீதம்
Votes % Seats Votes % Seats Votes % Seats Votes % Seats Votes % Seats Votes % Seats
அம்பாறை கிழக்கு 126,012 32.65% 3 102,274 26.50% 2 25,255 6.54% 0 5,060 1.31% 0 127,396 33.00% 2 385,997 100.00% 7 78.28%
அனுராதபுரம் வடமத்தி 344,458 67.95% 7 119,788 23.63% 2 24,492 4.83% 0 18,164 3.58% 0 506,902 100.00% 9 78.19%
பதுளை ஊவா 309,538 62.06% 6 144,290 28.93% 3 19,308 3.87% 0 25,659 5.14% 0 498,795 100.00% 9 80.43%
மட்டக்களப்பு கிழக்கு 33,424 11.22% 1 28,362 9.52% 0 79,460 26.66% 2 348 0.12% 0 156,418 52.49% 2 298,012 100.00% 5 76.83%
கொழும்பு மேற்கு 674,603 57.04% 12 387,145 32.73% 6 67,600 5.72% 1 53,428 4.52% 0 1,182,776 100.00% 19 73.94%
காலி தெற்கு 430,334 70.54% 7 115,456 18.93% 2 29,963 4.91% 0 34,299 5.62% 0 610,052 100.00% 9 74.43%
கம்பகா மேற்கு 807,896 65.76% 13 285,809 23.27% 4 61,833 5.03% 1 72,936 5.94% 0 1,228,474 100.00% 18 73.01%
அம்பாந்தோட்டை தெற்கு 280,881 75.10% 6 51,758 13.84% 1 31,362 8.39% 0 10,016 2.68% 0 374,017 100.00% 7 79.68%
யாழ்ப்பாணம் வடக்கு 13,564 3.78% 0 112,967 31.46% 3 853 0.24% 0 231,746 64.53% 4 359,130 100.00% 7 68.92%
களுத்துறை மேற்கு 448,699 64.08% 8 171,988 24.56% 2 33,434 4.77% 0 46,135 6.59% 0 700,256 100.00% 10 76.79%
கண்டி மத்திய 477,446 58.76% 8 234,523 28.86% 4 22,997 2.83% 0 77,612 9.55% 0 812,578 100.00% 12 77.02%
கேகாலை சபரகமுவா 331,573 66.29% 7 131,317 26.25% 2 14,033 2.81% 0 23,284 4.65% 0 500,207 100.00% 9 76.70%
குருணாகல் வடமேல் 649,965 66.92% 11 244,860 25.21% 4 36,290 3.74% 0 40,128 4.13% 0 971,243 100.00% 15 75.45%
மாத்தளை மத்திய 188,779 65.53% 4 73,955 25.67% 1 7,542 2.62% 0 17,797 6.18% 0 288,073 100.00% 5 76.69%
மாத்தறை தெற்கு 352,217 73.63% 6 72,740 15.21% 1 37,136 7.76% 0 16,286 3.40% 0 478,379 100.00% 7 75.95%
மொனராகலை ஊவா 208,193 74.12% 5 54,147 19.28% 1 11,429 4.07% 0 7,116 2.53% 0 280,885 100.00% 6 80.93%
நுவரெலுயா மத்திய 230,389 54.47% 5 132,008 31.21% 3 5,043 1.19% 0 55,537 13.13% 0 422,977 100.00% 8 80.49%
பொலன்னறுவை வடமத்தி 180,847 73.66% 4 47,781 19.46% 1 6,792 2.77% 0 10,099 4.11% 0 245,519 100.00% 5 78.99%
புத்தளம் வடமேல் 220,566 57.26% 5 80,183 20.81% 2 9,944 2.58% 0 74,528 19.35% 1 385,221 100.00% 8 67.47%
இரத்தினபுரி சபரகமுவை 446,668 68.86% 8 155,759 24.01% 3 17,611 2.72% 0 28,576 4.41% 0 648,614 100.00% 11 77.38%
திருகோணமலை கிழக்கு 68,681 32.25% 1 86,394 40.56% 2 39,570 18.58% 1 2,226 1.05% 0 16,121 7.57% 0 212,992 100.00% 4 78.62%
வன்னி வடக்கு 42,524 20.46% 1 37,883 18.23% 1 69,916 33.64% 3 662 0.32% 0 56,852 27.35% 1 207,837 100.00% 6 78.34%
தேசியப் பட்டியல் 17 7 1 1 3 29
மொத்தம் 6,853,693 59.09% 145 2,771,984 23.90% 54 327,168 2.82% 10 445,958 3.84% 3 1,200,133 2.15% 13 11,598,936 91.80% 225 75.89%

பதவுயேற்பு[தொகு]

மகிந்த ராசபக்ச நான்காவது தடவையாக இலங்கைப் பிரதமராக 2020 ஆகத்து 9 ஆம் நாள் களனி ரஜ மகா விகாரையில் பதவியேற்றுக் கொண்டார்.[62][63]

பன்னாட்டுத் தாக்கங்கள்[தொகு]

நாடுகள்[தொகு]

  •  India – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.[64]
  •  United States – இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பொதுசன முன்னணியின் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை விட்டது. அமைதியான முறையிலும், சுமூகமாகவும் தேர்தல்கள் நடைபெற்றதற்கு தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்தது.[65]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lankan parliament dissolved; elections set for April". Al Jazeera. 16 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "General Election will be held on June 20". MSN.
  3. "Sri Lanka general elections 2020 – LIVE UPDATES". EconomyNext. 5 August 2020. 6 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Over 1.2 million new votes registered for Sri Lanka's upcoming polls". EconomyNext. 29 July 2020. 6-08-2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Sri Lanka's youth are unlikely to vote for the old guard in Parliament". EconomyNext. 28 July 2020. 6 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Rajapaksas dominates South with landslide victory in Sri Lankan elections | Tamil Guardian". www.tamilguardian.com. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. CNN, Iqbal Athas and Helen Regan. "Sri Lanka's Mahinda Rajapaksa declares victory in parliamentary elections". CNN. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Sri Lanka Podujana Party wins 2020 general elections in a landslide". EconomyNext. 7 August 2020. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Rajapaksa declares election victory in Sri Lanka" (in en-GB). BBC News. 7 August 2020. https://www.bbc.com/news/world-asia-53688584. 
  10. "Sri Lanka : 2020 Parliamentary Election Results: SLPP wins six seats in Matara district, SJB one". www.colombopage.com. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Rajapaksa brothers win by landslide in Sri Lanka's election". www.aljazeera.com. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Sri Lanka ex-PM's UNP polls less than 5-pct in declared Colombo seats". EconomyNext. 6 August 2020. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Sri Lanka prepares for twice-delayed poll amid militarized COVID-19 response · Global Voices". Global Voices (ஆங்கிலம்). 21 June 2020. 6 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  14. Srinivasan, Meera (13 July 2020). "Lanka election body ‘monitoring’ virus spike" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/lanka-election-body-monitoring-virus-spike/article32071512.ece. 
  15. "Sri Lanka 2020 general elections turnout lower, steepest in Kurunegala". EconomyNext. 6 August 2020. 6 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. 16.0 16.1 Bastians, Dharisha; Goel, Vindu (9 November 2018). "Sri Lanka President Dissolves Parliament Amid Power Struggle". New York Times. https://www.nytimes.com/2018/11/09/world/asia/sri-lanka-dissolves-parliament.html. பார்த்த நாள்: 26 November 2018. 
  17. "Sri Lanka Supreme Court overturns dissolution of parliament". Al Jazeera and news agencies. 13 November 2018. https://www.aljazeera.com/news/2018/11/sri-lanka-supreme-court-overturns-dissolution-parliament-181113125340789.html. பார்த்த நாள்: 26 November 2018. 
  18. 18.0 18.1 18.2 "Sri Lankan parliament dissolved; elections set for April". அல் ஜசீரா. 3 மார்ச் 2020. https://www.aljazeera.com/news/2020/03/sri-lankan-parliament-dissolved-elections-set-april-200302193858515.html. பார்த்த நாள்: 3 மார்ச் 2020. 
  19. "General Election will be held on June 20". MSN.
  20. "Sri Lanka Parliamentary General Election to be held on Aug 5". EconomyNext. 10 June 2020. 10 June 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Sri Lanka's General Election on August 05". Adaderana. 15 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  22. https://www.bbc.com/news/world-asia-46156303
  23. https://news.yahoo.com/sri-lanka-court-verdict-expected-parliaments-dissolution-090205031.html
  24. https://www.tamilguardian.com/content/ranil-sworn-back-prime-minister
  25. https://news.yahoo.com/sri-lanka-court-denies-rajapakse-authority-act-pm-105810542.html
  26. "Ranil Wickremesinghe to resign as Sri Lanka's prime minister, Mahinda to take over | Tamil Guardian". tamilguardian.com.
  27. http://www.colombopage.com/archive_20A/Jan30_1580399088CH.php
  28. https://english.theleader.lk/news/654-sajith-s-alliance-to-be-named-samagi-jana-balawegaya-with-the-heart-as-its-symbol
  29. http://www.adaderana.lk/news/60849/slpp-and-slfp-to-contest-general-election-under-new-alliance-with-mahinda-as-leader
  30. https://www.hindustantimes.com/world-news/sri-lankan-parliament-dissolved-elections-on-april-25/story-qkVWPKjcJAQDX2E75P40kL.html
  31. http://www.adaderana.lk/news/61545/sri-lankas-general-election-postponed
  32. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-08-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  33. https://www.msn.com/en-xl/news/other/general-election-will-be-held-on-june-20/ar-BB12VUiK
  34. https://colombogazette.com/2020/05/06/samagi-jana-balawegaya-files-petition-against-20-june-polls/
  35. https://colombogazette.com/2020/05/09/champika-and-welgama-file-petitions-against-polls/
  36. http://www.adaderana.lk/news/63692/five-member-judge-bench-to-hear-fr-petitions-against-elections-date
  37. Sooriyagoda, Lakmal. "AG requests court to dismiss petitions in limine". Daily News.
  38. "SC dismisses petitions against polls date: Elections back on track – Sri Lanka News". The Morning – Sri Lanka News. 6 June 2020. 12 ஜூன் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  39. "Sri Lanka's parliamentary elections fixed for August 5". Sri Lanka News – Newsfirst (ஆங்கிலம்). 10 June 2020. 10 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  40. "Election campaign ends at midnight on Aug. 2". dailynews. July 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  41. "Sri Lanka counts votes from parliamentary elections". www.aljazeera.com. 6 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  42. Rasheed, Zaheena; Kuruwita, Rathindra (13 December 2018). "Sri Lanka's Supreme Court overturns sacking of parliament". Al Jazeera. https://www.aljazeera.com/news/2018/12/sri-lanka-supreme-court-overturns-sacking-parliament-181213113720319.html. பார்த்த நாள்: 14 December 2018. 
  43. "Sri Lanka : Curfew in Puttalam area lifted temporarily for nomination process". colombopage.com.
  44. "Sri Lanka's General Election postponed". Adaderana. 15 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  45. "அடுத்த ஞாயிறுடன் பிரசாரப் பணிகள் நிறைவு". வீரகேசரி. 26-07-2020. 
  46. Blanc, Jarrett; Hylland, Aanund; Vollan, Kare (2006). State Structure and Electoral Systems in Post-Conflict Situations. International Foundation for Electoral Systems. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1931459177. https://books.google.com/books?id=1EXgwebG5oEC. 
  47. "Report of the Post-Election Assessment of Sri Lanka Mission: November 28 – December 2, 2000" (PDF). National Democratic Institute for International Affairs. 28 டிசம்பர் 2000. p. 10. 3 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. மார்ச் 3, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  48. Thilakarathne, N. M. C. (1997). "Parliament Library of Sri Lanka". in Brian, Rob. Parliamentary Libraries and Information Services of Asia and the Pacific: Papers prepared for the 62nd IFLA Conference Beijing, China August 25-31, 1996. Walter de Gruyte. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110947633. https://books.google.com/books?id=rlohAAAAQBAJ. 
  49. 49.0 49.1 49.2 "Qualifications to register as an Elector". தேர்தல் திணைக்களம். 2013-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
  50. வீரகேசரி, கொழும்பு, 20 மார்ச் 2020
  51. "First official result of parliamentary election released". Sri Lanka News - Newsfirst (ஆங்கிலம்). 2020-08-06. 2020-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-06 அன்று பார்க்கப்பட்டது.
  52. "பொதுத் தேர்தல் இறுதி முடிவு-நாடளவிய ரீதியில் கட்சிகள் வென்ற ஆசன விபரம்". தமிழ்வின். பார்த்த நாள் 07 ஆகத்து 2020. https://www.tamilwin.com/politics/01/252916?ref=home-imp-parsely. [தொடர்பிழந்த இணைப்பு]
  53. "Sri Lanka election: Rajapaksa clan heading for landslide win in Lanka polls". The Indian Express (ஆங்கிலம்). 2020-08-06. 2020-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  54. France-Presse, Agence (2020-08-07). "Sri Lanka's Rajapaksa brothers strengthen grip in landslide election win". the Guardian (ஆங்கிலம்). 2020-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  55. Abi-Habib, Maria (2020-08-06). "Sri Lanka Vote Hands Rajapaksa Family a Bigger Slice of Control" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2020/08/06/world/asia/sri-lanka-elections-rajapaksa.html. 
  56. "Mahinda Rajapaksa sworn in as Sri Lanka's PM after record victory". Al Jazeera. 2020-08-09. 2020-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  57. "SJB ready for main Opposition role | Daily FT". www.ft.lk (English). 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  58. "SJB claims it is now the country's main Opposition Party". EconomyNext. 6 August 2020. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  59. 59.0 59.1 "2020 Sri Lankan Parliamentary Elections". Rajagiriya, Sri Lanka: இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு. 7-08-2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  60. 60.0 60.1 "Parliamentary Election 2020". Daily Mirror (Colombo, Sri Lanka). http://generalelection2020.dailymirror.lk/. பார்த்த நாள்: 7 August 2020. 
  61. 61.0 61.1 "Official Election Results Parliamentary Election – 2020 – Sri Lanka". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). http://elections.news.lk/election/. பார்த்த நாள்: 7 August 2020. 
  62. "Mahinda Rajapaksa takes oath as Sri Lankan Prime Minister". The Indian Express (ஆங்கிலம்). 2020-08-09. 2020-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  63. "Mahinda Rajapaksa Sworn in as Sri Lanka's Prime Minister for 4th Time, Cementing Family Rule". News18. 2020-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  64. admin (6 August 2020). "Indian PM Modi telephones Mahinda and congratulates him | Colombo Gazette" (ஆங்கிலம்). 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  65. "US congratulates Sri Lanka for holding peaceful poll amidst coronavirus". Sri Lanka News – Newsfirst. 7 August 2020. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]